Latest Updates
-
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
உங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...!
கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் இருப்பதாகும். நமது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கொலஸ்ட்ரால் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உடல் இயக்கத்தின் மைப்புள்ளியாக இருப்பது இதயம்தான். இதய ஆரோக்கியத்தை பொறுத்துதான் ஒருவரின் ஆரோக்கியமும், ஆயுளும் நிர்ணயிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் இதயத்தில்தான் பாதிப்பை ஏற்படுத்துக்கிறது. இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் முக்கியமானது கொலஸ்ட்ரால் பிரச்சினை ஆகும்.

கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் இருப்பதாகும். நமது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கொலஸ்ட்ரால் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கொலஸ்டராலில் HDL, LDL என இரண்டு வகைகள் உள்ளது. இதில் HDL நல்ல கொழுப்பாகும் அதேசமயம் LDL உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பாகும். இந்த பதிவில் ஆரோக்கியத்திற்கு உதவும் கொலஸ்ட்ரால் டயட்டில் நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டிய பழங்கள் என்ன என்று பார்க்கலாம்.

கொலஸ்ட்ரால் டயட்
கொலஸ்ட்ரால் அளவிற்கும் உங்கள் டயட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நொறுக்கு தீனிகள் மூலம் நீங்கள் ட்ரான்ஸ் கொழுப்புகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும்போது அது உங்கள் உடலில் LDL கொழுப்புகளின் அளவை அதிகாரிக்கும். அதேசமயம் அதிக நார்ச்சத்துக்கள் இருக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளும்போது உங்கள் உடலில் HDL கொழுப்பை அதிகரிக்கும். நார்ச்சத்துக்கள் அதிகமிருக்கும் பழங்கள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு அளவுகளை குறைக்க உதவும். உங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய பழங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அவகேடா
இரத்த அழுத்தம் அதிகமிருப்பவர்கள் அவகேடா பழக்கத்தை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இதில் வைட்டமின் கே, சி, பி5, பி6, இ போன்ற ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளது. மேலும் இதிலிருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது உங்கள் உடலில் இருக்கும் LDL மற்றும் HDL கொழுப்புகளின் அளவை சமநிலையில் வைக்கிறது. மேலும் இரத்தத்தில் இருக்கும் ட்ரைகிளிசரைடுகளையும் சமநிலையில் வைக்கிறது.

தக்காளி
வைட்டமின் ஏ, பி, கே மற்றும் சி என பலவகை வைட்டமின்கள் தக்காளியில் நிறைந்திருக்கிறது. தக்காளி உங்களின் கண்கள், சருமம் மற்றும் இதயத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகிறது. இது கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

ஆப்பிள்
சரும ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை பல நன்மைகளை வழங்குவதால்தான் இது மனிதர்களின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. இதன் பல நன்மைகளுள் முக்கியமானது கொழுப்பின் அளவை குறைப்பதாகும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின் நார்ச்சத்துக்கள், பாலிபினால் உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தக்கூடும். இதயத்தை பாதுகாக்கும் பாலிபினால்கள் உங்களின் இதய தசைகள் மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் அமிலம் இருக்கும் பழங்கள் உடலின் கொழுப்பின் அளவை குறைக்க உதவும். சிட்ரஸ் பழங்களில் இருக்கும் ஹெஸ்பெரிடின் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், மேலும் இதிலிருக்கும் பெக்டின் ஆர்தோகுளோரோசிஸ் குறைபாட்டை நீக்கவும் LDL கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

பப்பாளி
நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்தத்தில் இருக்கும் LDL கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவும். அமெரிக்க ஆய்வுகளின் படி ஒரு பெரிய பப்பாளி பழத்தில் 13 முதல் 14 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications











