சரக்கு அடிக்கும் போது இதையெல்லாம் கலந்து குடித்தால், ஆண்மைக்கே ஆபத்தாகி விடும்!

எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு அளவு இருக்கிறது. இதன் வரம்பை மீறும் போதுதான் இதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் அளவுக்கு அதிகமாக மாறுகிறது. இது சாப்பிட கூடிய உணவு பொருள் முதல் குடிக்கும் சரக்கு வரை, இதே நிலை தான். சாப்பாட்டை காட்டிலும் இன்று பல இளைஞர்கள் சரக்கின் முன்பே தனது காலை பொழுதை தொடங்குகின்றனர். குறிப்பாக ட்ரெண்ட் என்கிற பெயரில் பல்வேறு தவறான முறைகளை சரக்கில் பின்பற்றி வருகின்றனர்.

சரக்கு அடிக்கும் போது இதையெல்லாம் கலந்து குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?

பொதுவாக சரக்கு அடிக்கும் போது தண்ணீரோ, குளிர் பானங்களோ கலந்து அடிப்பது வழக்கம். ஆனால், இதனால் அவ்வளவாக போதை ஏறாது என்பதால் சில வகையான தவறான முறைகளை தற்போதைய இளைஞர்கள் கையாண்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் மாத்திரை முறை.

ஒரு சில மாத்திரைகளை சரக்கில் கலந்து குடித்தால் போதை சட்டென ஏறும் என்றும், இதனால் அற்புதமான நிலையை அடைய முடியும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், உண்மையிலே இவ்வாறு செய்வது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டா? இந்த நிலை போதையை அதிகரிக்குமா? போன்ற பல்வேறு தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரக்கும் போதையும்!

சரக்கும் போதையும்!

சரக்கு அடிப்பவர்களை சில வகையினராக நம்மால் பிரித்தறிய இயலும். காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை, சோசியலாக, உடல் வலிக்காக, உண்மையான போதைக்காக...இப்படி வகை வகையாக பிரிக்கலாம்.

ஆனால், இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் போதைக்காகவும், அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷத்திற்காகவும் உள்ளவர்களை கூறலாம். காரணம், இவர்கள் தான் இப்படிப்பட்ட மோசமான தவறுகளையும் செய்கின்றனர்.

தூக்க மாத்திரைகள்

தூக்க மாத்திரைகள்

போதை சுர்ரென்று ஏற வேண்டும் என்பதற்காக தூக்க மாத்திரைகளை சரக்குடன் சேர்த்து அடிக்க கூடாது. தூக்க மாத்திரையில் benzodiazepines என்கிற வேதி பொருள் சரக்குடன் கலந்து வேதி வினை புரியும். இதனால் நரம்பு மண்டலம் நீங்கள் நினைப்பதை விட அதிக அளவில் பாதிப்பு அடையும்.

வயகரா

வயகரா

பாலுணர்வை தூண்ட கூடிய மாத்திரை தான் வயகரா. இதை சரக்குதான் சேர்த்து குடிக்கும் போது உடனடியாக உடலில் மாற்றம் உண்டாகும். இந்த வகை மாற்றங்கள் நேரடியாக ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க செய்து, இறுதியில் மரணத்தை உண்டாக்கி விடும்.

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

சிலர் உடல் அசதிக்காக குடிப்பதுண்டு. அவ்வாறு குடிக்கும் போது அவர்களின் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். இந்த வகை மாற்றங்கள் ஒரு போதையை தந்து அசதியை போக்கும். ஆனால், இதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை இவற்றுடன் கலந்து குடிப்பது மிக மோசமான தீர்வை தரும். குறிப்பாக கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக விபரீத மாற்றங்களை தரும்.

சிரப்

சிரப்

நாம் சாப்பிட கூடிய சிரப்புகளில் ஏற்கனவே இந்த அல்சஹால் சிறிதளவு சேரக்கப்பட்டிருக்கும். ஆனால், இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகிய ஆய்வின் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும்.

சிலர் போதையை முழுமையாக அடைய வேண்டும் என்பதற்காக சரக்குடன் சிரப்பையும் சேர்த்து சாப்பிடுகின்றனர். இது மயக்க நிலையை தந்து கோமா நிலையை காலம் முழுவதும் ஏற்படுத்தி விடும்.

மன அழுத்த மாத்திரைகள்

மன அழுத்த மாத்திரைகள்

மன அழுத்தம் அதிகரிப்பால், குடிக்கும் பலர் இந்த விபரீத சோதனையை செய்து பார்ப்பதுண்டு. முக்கியமாக இந்த வகை மன அழுத்த மாத்திரைகளை சரக்குடன் சேர்த்து சாப்பிடும் போது இரத்த ஓட்டத்தையே தடுத்து நிறுத்தி நிறுத்தி விடும். இதனால் மரணம் கூட நேரலாம்.

காய்ச்சல் மாத்திரைகள்

காய்ச்சல் மாத்திரைகள்

காய்ச்சல் உடனே குணமாக வேண்டும் என்கிற நோக்கில் சில அறிவு ஜீவிகள் இவ்வாறு செய்வதுண்டு. அதாவது, காய்ச்சல் மாத்திரைகளை சரக்குடன் கலந்து சாப்பிடுவார்கள். இது போதையை தருதோ இல்லையோ உடலில் மோசமான பாதிப்பை நிச்சயம் தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்

எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்

பல மடங்கு எதிர்ப்பு சக்தி உயர வேண்டும் என்பதற்காக இந்த மாத்திரைகளை சரக்குடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. இவை தலைகீழாக உங்களின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தாக்கும். அத்துடன் உடலை பலவீனமாக்கும்.

கொலஸ்ட்ரால் மாத்திரைகள்

கொலஸ்ட்ரால் மாத்திரைகள்

பல குடிமகன்கள் சரக்குதான் கொலஸ்ட்ரால் மாத்திரைகளை சேர்த்து சாப்பிடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவ்வாறு சாப்பிட்டால் முதலில் பாதிக்கபடுவது நரம்பு மண்டலம் தான். அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இது சிறந்த முறை கிடையவே கிடையாது.

தீர்வு!

தீர்வு!

எந்த வகை மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றிற்கென்று தனி தன்மை உள்ளது. நாம் ஒன்றை வேறு ஒன்றோடு சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள்.

மேலும், வேதி பொருட்கள் இந்த வகை மாத்திரைகளில் அதிக அளவில் இருப்பதால் இவை அபாயகரமான விளைவை நமக்கு உண்டாக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion