இந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...!

நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும், நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அவர்கள் கையாண்ட வீட்டு வைத்தியங்கள் முக்கிய காரணமாக இருந்தது. ஆ

நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும், நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் கூட நமது முன்னோர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள், ஆனால் மருத்துவம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் கூட நம்மால் பூரண ஆரோக்கிய வாழ்வை வாழ முடிவதில்லை.

Dangerous Indian home remedies

நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அவர்கள் கையாண்ட வீட்டு வைத்தியங்கள் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அனைத்து விட்டு வைத்தியங்களும் நன்மை தரக்கூடியது என்று அர்த்தமல்ல. சில வீட்டு வைத்தியங்கள் ஆபத்தில் கூட முடியும். இந்த பதிவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைந்த பற்கள்

உடைந்த பற்கள்

உடைந்த பற்களை மருத்துவரை அணுகாமல் சரிசெய்ய அனைவரும் விரும்புவார்கள். சிலர் இதனை மனிதர்கள் பயன்படுத்த ஏற்ற பொருள்களான ஓட்டுப்பொருட்களை கொண்டு சரி செய்ய முயற்சிக்கிறார்கள். பற்களில் பயன்படுத்தப்படும் பற்பசைகள் பல சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

குழந்தைகளின் ஈறுகளில் மதுவை தடவுவது

குழந்தைகளின் ஈறுகளில் மதுவை தடவுவது

மக்கள் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் மதுவை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் பல் துலக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வலியை குணப்படுத்த சிலர் மதுவைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு இது எரிச்சலை உண்டாக்கும்.

தீக்காயங்களுக்கு வெண்ணெய்

தீக்காயங்களுக்கு வெண்ணெய்

வெண்ணெய் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது உணவிற்கு மட்டும்தான், தீக்காயங்களுக்கு அல்ல. இதன் குளிர்ச்சி பண்புகள் தீக்காயங்களுக்கு சிறிது மிதமான விளைவை ஏற்படுத்தக்கூடுமே தவிர குணப்படுத்தாது. மேலும் இதனால் உங்களுக்கு சில நோய்த்தொற்று ஏற்படும்.

கண்கட்டியை ஊசியால் குத்துவது

கண்கட்டியை ஊசியால் குத்துவது

கண்ணனுக்கு அருகில் வரும் கண்கட்டியை ஊசியால் குத்துவது பொதுவான வீட்டு வைத்தியம் ஆகும். ஆனால் இவ்வாறு செய்வது உங்கள் கண்களுக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்துவதாகும். கட்டியை உடைக்கும்போது உங்கள் கண்களில் ஊசிப்பட்டால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

தலை பேன்

தலை பேன்

சிலர் தலை பேன்களை சரி செய்ய பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது உரங்களை உபயோகிக்கிறார்கள். இதனால் உங்கள் கண்களுக்கு ஆபத்து ஏற்படும். இந்த இரசாயனங்கள் அனைத்தும் உச்சந்தலையில் உங்கள் இரத்த ஓட்டத்தில் நுழையலாம். இந்த இரசாயனங்கள் அதிக நச்சுத்தன்மையுடையவை மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்துகின்றன.

முகப்பருவுக்கு பற்பசையை பயன்படுத்துவது

முகப்பருவுக்கு பற்பசையை பயன்படுத்துவது

பற்பசையில் இருக்கும் பேக்கிங் சோடா பருவை உலர்த்துகிறது, இதனால் அது மறைந்து போகிறது என்பது பொதுவாக நிகழும் நம்பிக்கையாகும். பேக்கிங் சோடா நல்லதுதான் ஆனால் இதிலிருக்கும் மற்ற இரசாயனங்கள் உங்கள் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். பற்பசையில் ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் மென்தால் உள்ளது. இது அனைத்தும் சருமத்திற்கு நல்லதல்ல.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு உங்களின் சருமத்தை மேம்படுத்தும் என்பதும் வதந்தி ஆகும். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முட்டையின் வெள்ளைக்கரு உங்கள் சருமத்தில் இருக்கும்போது இறுக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் கழுவிய பின் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

மலசிக்கலுக்கான பழமையான வீட்டு வைத்தியமாக இது இருக்கிறது. ஆனால் இதனை அடிக்கடி எடுத்துக்கொள்வது உங்கள் குடலை சேதப்படுத்தும். மேலும் இதனால் குடல் இயக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

நெஞ்செரிச்சலுக்கு பால் குடிப்பது

நெஞ்செரிச்சலுக்கு பால் குடிப்பது

இது மிகவும் பொதுவான மோசமான வீட்டு வைத்தியமாகும். குளிர்ந்த பாலை குடிப்பது தற்காலிகமான குளிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் மீண்டும் அமில உற்பத்தியைத் தூண்டும். இதனால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion