Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
நமது உடலில் வைட்டமின் 'N' குறைவாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்னு தெரியுமா...?
மனித உடலின் முழு செயல்பாட்டையும் தீர்மானிப்பதே இந்த ஊட்டச்சத்துக்கள் தான். இவற்றின் அளவு குறைந்தால் மரணமே கூட நிகழலாம். இதில் வைட்டமின்கள், தாது பொருட்கள் போன்றவை அடங்கும். வைட்டமின் குறைபாடு இருப்பார்களால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய இயலாது.

கூடிய விரைவிலே இவர்களுக்கு நோய்களின் தாக்குதல் தொடங்கி விடும். இந்த வரிசையில் வைட்டமின் 'N' அடங்கும். இதன் குறைபாடு பல வித ஆபத்துக்களை நமக்கு தரவல்லது. ஏன் நமக்கு இந்த புது வித வைட்டமின் 'N' தேவைப்படுகிறது என்பதையும், இவற்றின் குறைபாடு என்னென்ன பிரச்சினைகளை தரும் என்பதையும் பார்ப்போம்.

வைட்டமின் 'N'
இது வரை நாம் வைட்டமின் எ, பி, சி போன்ற பல வித வைட்டமின்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த வைட்டமின் 'N' சற்றே வித்தியாசமாக உள்ளது என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இந்த வைட்டமினை இத்தனை நாள் வரை நாம் அறிந்திறாமலே இருந்திருந்தோம். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் என்பதே உண்மை.

வைட்டமின் 'N' என்றால் என்ன..?
இது மற்ற வைட்டமின்களை விட ஒரு படி மேலே உள்ளது. ஏனென்றால் நம் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே இந்த வைட்டமின் நமக்கு கிடைத்து விடும். வைட்டமின் 'N' என்பதற்கு பொருள் வைட்டமின் 'Natural' என்பதாம். அதாவது, இயற்கையிலிருந்து கிடைக்க கூடிய வைட்டமின் என்று அர்த்தமாம்.

எவ்வாறு பெறுவது..?
இந்த வைட்டமின் 'N'-னை பெறுவதற்கு பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை. மாறாக வீட்டிற்குள்ளே இருக்காமல் குறைந்தது 1 மணி நேரமாவது மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் நடந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ இந்த வைட்டமின் 'N' கிடைத்து விடும். குறிப்பாக பூங்கா, செடிகள் நிறைந்த தோட்டங்கள் போன்ற இடத்திற்கு சென்றாலே இந்த வைட்டமின் 'N' எளிதில் கிடைத்து விடுமாம்.

இதய ஆரோக்கியத்திற்கு
இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள இது வரை நாம் பலவித கட்டுரைகளை படுத்திருப்போம், அதன்படி செயல்பட்டிருப்போம். உடற்பயிற்சி, உணவு முறையின் மூலம் இதய ஆரோக்கியத்தை நாம் காத்து வந்தோம். ஆனால், வைட்டமின் 'N' நமது உடலில் போதுமான அளவில் இருந்தால் இது போன்ற பயிற்சிகள் நமக்கு தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்துமா
இன்றைய சூழலில் மாசுக்கள் அதிகமாகி கொண்டே வருகிறது என்பதே அபாயமான உண்மை. குறிப்பாக காற்று மாசுவால் ஆஸ்துமா போன்ற கோளாறுகள் அதிகரித்துள்ளது. நமது உடலில் வைட்டமின் 'N' சரியான அளவில் இருந்தால் ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

அதிக புத்தி கூர்மைக்கு...
எதை செய்ய நினைத்தாலும் நீண்ட நேரம் எடுத்து கொள்கிறீர்களா..? இதற்கு காரணம் கவன சிதறலே..! இது போன்ற பிரச்சினையை சமாளிக்க ஒரு எளிய வழி உள்ளது. வைட்டமின் 'N' உடலில் சீரான அளவில் இருந்தால் புத்தி கூர்மையை அதிகரிக்க செய்யும். மேலும், மூளையின் செயல்திறனை இரு மடங்காக மாற்ற கூடிய வலிமை இந்த வைட்டமின் 'N'-யிற்கு உள்ளதாம்.

இன்றைய தலைமுறையினருக்கு அவசியம்..!
இதற்கு முன் இருந்த தலைமுறையினர் இயற்கையை ஓரளவு நன்கு பயன்படுத்தி கொண்டனர். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகள் இயற்கையை ரசிக்க முடிவதில்லை. காரணம் ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற கருவிகள் போலி உலகில் இவர்களை கட்டி போட்டுவிடுகிறது. இதனால் வைட்டமின் 'N' இவர்களுக்கு கிடைப்பது மிக கடினமாக உள்ளது.

மன அழுத்தத்திற்கு
மன அழுத்தம் கொண்டவர்களை எளிதில் விடுபட வைக்கும் மந்திரம் இந்த வைட்டமின் 'N'-வில் உள்ளது. அதிக மன அழுத்தத்தால் தனது வாழ்கையை தொலைத்தவர்கள் அதிகம். இவர்கள் பூங்காவிற்கு சென்று வந்தாலே சிறந்தது.

உயிர்ப்புடன் வாழணுமா..?
வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என விரும்புவோர்க்கு இந்த வைட்டமின் 'N' நிச்சயம் தேவைப்படும். கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு இது இயற்கையாகவே கிடைக்கிறது. ஆனால், நகராக வாழ்வில் உள்ளோர்க்கு இது கிடைப்பது மிக கடினமாக உள்ளது.

இயற்கை என்னும் அருமருந்து..!
மற்ற வகை மருந்துகளை காட்டிலும் இந்த இயற்கை அற்புத மருந்து என்பதை எல்லா கால கட்டத்திலும் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் மன உளைச்சலுடன் உள்ளீர்கள் என்றால், இது வரை போகாத மலை அல்லது மரங்கள் நிறைந்த இடத்திற்கு நீங்கள் சென்று வந்தாலே போதும். அப்புறம் 96 படத்தில் வரும் "Life Of Ram" பாடலில் வருவதை போல வாழ்க்கைக்கான அர்த்தத்தை அடைந்து விடுவீர்கள்.



Click it and Unblock the Notifications