For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது?

இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் வருதல் மிகவும் சாதாரணமானது. இது மனித உடலில் காணும் பல அதிசயங்களில் ஒன்றாகும்.

|

நாம் ஏன் இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் போடுகிறோம்?

health

image courtesy

நாம் இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் போடுகிறோம் என்று ஒரு சொல் வழக்கு உள்ளது. ஏனெனில் தும்மல்கள் தனியாக வருவதில்லை. பெரும்பாலும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று வரவே செய்கிறது. இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் வருதல் மிகவும் சாதாரணமானது. இது மனித உடலில் காணும் பல அதிசயங்களில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தும்மல்

தும்மல்

தூசி, அழுக்கு, மகரந்தம், முதலியன போன்ற தேவையற்ற பொருட்களை மூச்சுப் பாதையிலிருந்து அகற்ற உடலின் ஒரு இயற்கையான வழி இது. உங்களின் மூச்சுக் காற்றை வடிகட்டி தூய்மையாக்குவது உங்கள் மூக்கின் அத்யாய வேலைகளில் ஒன்றாகும்.

வெளியிலுள்ள தூசிகள் மற்றும் மற்ற பொருட்கள் மூக்கின் நுனியில் நுழைகையில், அங்குள்ள மியூக்கசால் (சளி) சிறைபிடிக்கப்படுகிறது. பின்னர் சளி சவ்வு தூண்டப்பட்டு, உள்நுழைந்த வெளிப்பொருள்களின் அசுத்தத்தை துடைக்க முயற்சிக்கும்.ஆகவே நீங்கள் தும்ம ஆரம்பிக்கிறீர்கள்.

அனைத்து அசுத்தங்களும் முதல் தடவையில் வெளியே வரவில்லை என்றால், அவற்றை அழிக்க மற்றொரு அல்லது அதற்கு மேற்பட்ட தும்மல்கள் தேவை. உண்மையில் தும்மல் உங்கள் மூக்குக்கு மறுதொடக்கம், இது வரிசையில் பல முறை ஏற்படும் வழி வகுக்கிறது.

உங்கள் மூக்கில் முடியும் சில நரம்புகள் உணர்பொறி இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நரம்புகள் அனைத்து உணர்வு நரம்புகளாகும். தூண்டப்படும்போது, ​​அவைகளுக்குள் மின்சாரம் உதிக்கிறது. அவைகள் மூளைக்கு மற்றும் தும்மல் மையத்திற்கு செய்தியை அனுப்பும் வேலையைச் செய்கின்றன.தும்மல் பற்றிய செய்தியை மூளையானது, சம்பந்தப்பட்ட அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.

அந்த நேரத்தில் தோன்றும் சக்தி வாய்ந்த காற்று வெளியீடு, மூக்கில் எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் வெளியேற்றப்படுகிறது.

தும்மல் வர காரணங்கள்:

தும்மல் வர காரணங்கள்:

எந்தவித முன்னறிவிப்பு எச்சரிக்கை இல்லாமல் திடீரென்று தும்மல் தோன்றுகிறது. இது உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு எதிர்வினை.

மார்பு தசைகள் நுரையீரல்களை அழுத்த, அவை ஆற்றல் மிகுந்த காற்றை மேல்நோக்கி அனுப்புகிறது. அப்போது தொண்டை இறுகி, விசை மிகுந்த காற்றை மூக்கு வழியாக அனுப்புகிறது. இதோ நீங்கள் தும்மத் தொடங்குகிறீர்கள்.

தும்மல் நபருக்கு நபர் வேறுபடுகிறது. இது எவ்வளவு தூண்டல்கள் மற்றும் நரம்புகள் எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தது. தூண்டப்பட்ட நரம்புகளை அமைதியாக்குவதற்கு ஒரு முறை அல்லது வரிசையில் நீங்கள் தும்மலாம்.

இரண்டு முறை தும்முவது ஏன்?:

இரண்டு முறை தும்முவது ஏன்?:

• தும்மலென்பது மூக்கினுள் ஏற்படும் தூண்டுதலுக்கு ஒரு பதில் மட்டுமே. உங்கள் மூக்கினுள்ளே ஏதாவது எரிச்சல்/ கூசும் பொருள் நுழைகையில் இது நிகழ்கிறது. அது உங்கள் மூச்சுப் பாதையைத் தூண்டி, உங்களைக் கட்டாயப்படுத்தி தும்மல் மூலமாக வெளியேறுகிறது. அவை ஒரே தும்மலில் வெளியேறாதுபோது, சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தும்மல்கள் தோன்றுகிறது.

• உங்கள் உடலில் CO2 அளவுகளை தும்மல் குறைக்கிறது. இது உங்கள் மூக்கின் உணர்திறனை அதிகரித்து இருமுறை அல்லது மீண்டும் மீண்டும் தும்மல் தோன்ற வலியுறுத்துகிறது.

• உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலும் அடிக்கடி தும்முவீர்கள். ஏனெனில் ஒவ்வாமை நாசியிலிருந்து வெளியேற நேரம் எடுப்பதேயாகும். ஒவ்வாமை நீங்கும் வரை நீங்கள் தும்மிக்கொண்டேயிருப்பீர்கள். எனவே இந்த மாதிரி கேஸ்களில் சிலர் ஒவ்வாமையுடன் இருப்பதால், அவருக்கு தொடர்ந்து தும்மல் தோன்றுகிறது.

இந்த நிலை தோன்றும் போது ,உங்கள் மூக்கை தேய்த்து அல்லது எதாவது ஒரு அனுமதிக்கப்பட்ட பொருளை மூக்கில் சொருகி கைமுறையாக ஒவ்வாமையை நீக்க முயற்சிக்கவும்.

• குளிர் அல்லது காய்ச்சல் மூலம் பாதிக்கப்படும் பொழுதும் தும்மல் உருவாகிறது. 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வைரஸ்கள் குளிர் வரக்காரணமாக இருக்கலாம். இந்த வைரஸ்கள் காய்ச்சலை உண்டாக்குகின்றன, இதனால் நீங்கள் ஒரு முறை அல்லது பல முறை தும்முகிறீர்கள். ஏனெனில் உங்கள் மூக்கு வீக்கம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது உங்கள் உடலின் ஒரு சாதாரண செயல்முறை ஆகும்.

• நீங்கள் எடுக்கும் சில குளிர் உணவுகளும் தும்மல் ஏற்படக் காரணமாகின்றன. இது சுவைசார் நாசியழற்சி (ரைனிடிஸின்) விஷயத்தில் ஒரு நரம்பியல் எதிர்விளைவு நுட்பமாகும். இது நரம்பு மண்டலத்தில் உருவாகிறது மற்றும் நரம்புகள் அமைதியாகும் வரை இருமுறை அல்லது அதற்கு மேல் நீங்கள் தும்ம வலியுறுத்துகிறது.

காரணங்கள்

காரணங்கள்

நாசிப் பாதையின் அதிகப்படியான உலர்தலுக்கு வழிவகுக்கும் கீழ்காணும் சில மருந்துகளும் தும்மல் உருவாகக் காரணமாகின்றன,

a) தூக்க மருந்துகள்

b) மன அமைதி மருந்துகள்

c) வாய்வழி கருத்தடை மருந்துகள்

d) விறைப்பு குறைபாடுக்கான மருந்துகள்

e) உயர் இரத்த அழுத்த மருந்துகள்

f) ஸ்டெராய்டல் எதிர்ப்பு அல்லாத அழற்சி மருந்துகள்

g) மூச்சுப் பாதை இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்துகள்

• பருவகால நாசியழற்சியும் தொடர்ந்த தும்மல்களுக்கு காரணமாகிறது.மகரந்தம் காரணமாக வரும் தூசி சளிக்காய்ச்சல்(ஹே), பருவகால ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சியின் மிக பொதுவான வகையாகும். புல் அல்லது மலர்களின் மகரந்தத்தால் இது அடிக்கடி ஏற்படுகிறது. இந்த மகரந்தங்கள் வரிசையான தும்மலுக்கு வழிவகை செய்யலாம்.

• கோகெய்ன் மற்றும் புகையிலையை நுகர்தல் மோசமான தும்மல்களை உருவாக்கலாம். இது ஒரு நரம்பியல் நிலை ஆகும், இது முதுகில் உள்ள முக்கோண நரம்பு அல்லது தும்மல் மையத்தைப் பாதிக்கிறது.

• சில தொழில்முறை நீச்சல் வீரர்களுக்கு குளோரினேடட் நீச்சல்குள நீரின் காரணமாக தும்மல் உருவாகிறது.

• யாராவது உங்கள் மூக்கின் மீது குத்தும்போது போது சில நேரங்களில் நீங்கள் தும்முகிறீர்கள். குத்துவதால் ஏற்படுகின்ற அதிர்வு காரணமாக இது நிகழ்கிறது. இதன் காரணமாக உங்கள் மூளையில் சில உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன. எனவே நரம்புகள் தும்மலைத் தூண்டுகின்றன. நரம்புகள் அமைதியாகும் வரை நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேல் தும்முகிறீர்கள்.

• உங்களில் சிலர் தொடர்ந்து தும்மலைப் போடுகிறார்கள். இது ஒரு நரம்பியல் எதிர்வினை மற்றும் நபர் சார்ந்தது.

• சில மூக்கு ஸ்ப்ரேக்களாலும் தும்மால் ஏற்படுகிறது, ஏனெனில் அவை கார்டிகோஸ்டீராய்டுகளைக் கொண்டிருக்கின்றன. ஸ்ப்ரேயால் ஏற்படும் எரிச்சல் குறையும் வரை நீங்கள் ஒரு முறை அல்லது பல முறை தும்மித்தான் ஆகவேண்டும்.

• எத்தனை முறை நீங்கள் தும்முகிறீர்கள் என்பதை சில நேரங்களில் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. உங்கள் மூக்கில் உள்ள நரம்புகள் எவ்வாறு பழக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து இது அமைகிறது.அது உங்கள் பாட்டி, தாத்தா, தாய் அல்லது தந்தை போன்றவர்களுக்கு இருந்தது போலவே அமையலாம்.

• உங்களில் சிலருக்குத் தோன்றும் தும்மலுக்கு பிளேடர் காரணமாக அமைகிறது. parasympathetic நரம்புகள் தூண்டப்படுவதால் இது நடக்கிறது.பிளேடர் காலியாகும் வரை இரண்டு அல்லது அதற்கு மேல் தும்மல் வந்து கொண்டேயிருக்கும்.

தும்மல் எப்படி உருவாகிறது?

தும்மல் எப்படி உருவாகிறது?

வயிறு நிறையச் சாப்பிடுவது கூட சில நேரங்களில் சில உள் உறுப்புகளை அமைதிப் படுத்த உங்களுக்கு தும்மல் வரச்செய்யலாம். இது தூய்மை எனப்படுகிறது. இதுவும் parasympathetic நரம்பு அமைப்பு தூண்டலால் உருவாகிறது.

• மூன்றில் ஒருவர் பிரகாசமான சூரிய ஒளி காரணமாக தும்முவர்.இது புகைப்பட பிரதிபலிப்புத் தும்மல் எனப்படுகிறது. ஒளியின் இந்த உணர்திறனுக்கு மரபணு காரணமாகும். இந்த விஷயத்தில், உணர்திறன் குறையும்வரை தும்முவதைத் தவிற வேறு வழியில்லை.

• சில நேரங்களில் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பால் கூட தும்மல் ஏற்படுகிறது . உங்கள் மூக்கு மற்றும் வாய் உலர்வதால் உடனே மூக்கு தும்மலைத் தொடங்குகிறது. உறுப்புகள் அவற்றின் இயல்பான நிலைக்கு வரும்வரை நீங்கள் தும்மிக் கொண்டேயிருப்பீர்கள்.

• புருவ முடிகளைத் திருத்தும் போதும் சில நேரங்களில் நீங்கள் தும்முகிறீர்கள். இது சில மூச்சுப்பாதை நரம்புகளைத் தூண்டி தும்மலுக்கு வழி வகுக்கிறது. முடி பறிக்கப்பட்ட பின் நரம்பு அமைதியாகும் வரை தும்மல் வந்துகொண்டேயிருக்கும்.

• சில சந்தர்ப்பங்களில், நீங்கள் பாலியல் உறவிற்குப் பின் தும்மலாம். பரவலான நரம்புகளின் தூண்டுதல் சிலருக்கு உற்சாகத்தில் உச்சநிலையை நோக்கி நகர்த்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அந்த நேரங்களில் தும்மல் நரம்புகளும் சிலருக்குத் தூண்டப்படுகிறது . இவர்களுக்கு 1 / 10th என்ற விகிதத்தில் தும்மல் தோன்றுகிறது. எனவே, பாலியில் உறவினால் ஏற்படும் சந்தோஷத்தோடு தும்மவும் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• சில நேரங்களில் மூக்கில் தோன்றும் சளியால் தும்மல் தோன்றுகிறது. சளியால் தும்மல் தோன்றும் போது, அது மூக்கிலிருந்து முற்றிலும் அகலும் வரை நீங்கள் தும்ம வேண்டும்.

• சில நேரங்களில் சைனஸ்களில் (sinuses) தோன்றும் குறுகுறுப்பால் அதிகமான தும்மல் தோன்றுகிறது. இது மூக்கின் உள்ளேயுள்ள முடிகள் காரணமாக ஏற்படுகிறது.

• உங்களில் சிலர் நல்ல வெயில் நாட்களில் பெரும்பாலும் தும்மல் வருவதாக புகார் செய்கிறீர்கள். அந்த நாட்களில் நீங்கள் வெளியே அதிக நேரம் செயல்படமுடிகிறது எனவே நுகரும் பல்வேறு தூசியால் ஒவ்வாமை ஏற்பட்டு தும்மல் ஆரம்பிக்கிறது. உங்களுடைய உடலால் எல்லாவற்றையும் நீக்கிவிட முடியாது, எனவே தும்மலை ஏற்படுத்தி அந்த வேலையைச் செய்கிறது.

• கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்கள் கூட அடிக்கடி உங்களை தும்மச் செய்ய கட்டாயப்படுத்துகின்றன. வானிலை மாற்றங்கள் மற்றும் புகை போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு , நீங்கள் ஒருமுறைக்கு மேல் தும்ம வழிவகுக்கிறது.

• NSAIDS மற்றும் இரத்த அழுத்தம் - குறைத்தல் மருந்துகளும் இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் ஏற்படுத்தும் காரணிகளாகின்றன.

• சில வலுவான மசாலா மற்றும் வாசனை திரவியங்களின் மணம் கூட உங்களை தும்மச் செய்யலாம். உங்கள் மனநிலை அழுத்தம் கூட சில நேரங்களில் அது குறையும் வரை உங்களில் தும்மலை உண்டாக்கலாம்.

• சிலர், வருடத்தில் எப்போதாவது தும்மல் கொள்வீர்கள். ஆனால் சிலரோ அடிக்கடி தும்மிக்கொண்டேயிருப்பீர்கள். அடிக்கடி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரக்தியே மிஞ்சும்.

தடுக்கக்கூடாது

தடுக்கக்கூடாது

உங்களுக்குத் தெரியுமா? தூக்கத்தின் போது உங்களால் தும்ம இயலாது . இது REM ஆடோனியாவினால் ஏற்படுகிறது(மோட்டார் நியூரான்கள் தூண்டுதலடையாத மற்றும் மூளைக்கு நிர்பந்தமான பிரதிபலிப்பு இல்லாத ஒரு உடல் நிலை.)

தும்மலைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். இது உங்கள் கண்களில் இரத்த நாளங்கள் உடைதல், மூளையில் இரத்த நாளங்கள் பலவீனமாதல், செவிப்பறை கிழிதல் அல்லது சவ்வு சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம் தேவைக்கதிகமாக தும்மாமலிருக்க முயற்சிக்கலாம். நீங்கள் ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு மாநாட்டில் இருக்கும்போது தும்மல் வர முயற்சித்தால் உடனே உங்கள் மூக்கில் தேய்க்கவும், உங்கள் மூக்கில் அடியில் உள்ள மேல் உதடுப் பகுதியை அழுத்தவும் அல்லது ஒரு பெரிய ஆழமான மூச்சை கட்டாயப்படுத்தி வெளியேற்றுங்கள்.

மணிக்கு இருநூறு மைல்கள் உச்ச வேகத்தில் தும்மலின் விசை பயணிக்கிறது.

ஒற்றைத் தும்மலானது உங்கள் மூக்கிலிருந்து 100,000 கிருமிகளை காற்றுக்குள் அனுப்பலாம். ஒவ்வொருமுறை நீங்கள் தும்மும் போது மூளையின் சில செல்கள் இறந்துவிடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, தும்மல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவ்வாறே உங்களை உருவாக்கியிருக்கிறாள் இயற்கை அன்னை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do We Sneeze Twice?

There is a saying that we sneeze twice or more because sneezes don’t like to come alone
Desktop Bottom Promotion