For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா..? இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன...?

|

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நமது ஆரோக்கியத்தை பற்றி ஆழமாக வெளிப்படுத்தி விடும். அந்த வகையில் உங்களின் கைகளில் உள்ள விரல்களும் அடங்கும். விரலில் எப்படி உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும் என நினைக்கிறீர்களா..? இது சாத்தியம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 உங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா..? இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன..?

உங்களின் தாம்பத்திய பிரச்சினைகள் முதல் இதய பிரச்சினை வரை, எல்லாவற்றையும் விரலில் உள்ள இந்த பிறை போன்ற வடிவம் தெளிவாக சொல்லி விடும். ஒவ்வொரு விரலுக்கும் உள்ள அர்த்தத்தை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..!

நமது விரல்கள் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் உள்ளதாம். விரலில் உள்ள பிறை போன்ற குறி, எப்படிப்பட்ட குறைபாடுகள், நோய்கள் உடலில் உள்ளது என்பதை தெளிவாக கூறிவிடுகிறது. அத்துடன் இந்த பிறை சின்னம் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையும் இவை வெளிப்படுத்துகின்றதாம். இது சாத்தியமா..? என்ற கேள்விக்கு இனி வரும் பத்தியில் பதில்கள் காத்துள்ளன.

சுண்டு விரல்

சுண்டு விரல்

பலருக்கு பிடித்தமான விரல் என்றால் அது சுண்டு விறல் தான். இதில் பிறை போன்ற சின்னம் இல்லையென்றாலோ அல்லது பெரியதாக இருந்தாலோ ஆபத்திற்கான அறிகுறியாகும். அதாவது, உங்களின் சிறுநீரகம், சிறுகுடல், இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்பதை இது குறிக்கிறது. மேலும், இந்த பிறை பெரிதாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளது என அர்த்தமாம்.

மோதிர விரல்

மோதிர விரல்

தம்பதிகளின் நெருக்கத்தை நீண்ட காலம் அழைத்து செல்லும் இந்த விரல் தான், உங்களின் தாம்பத்திய வாழ்வு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறது. அதாவது, மோதிர விரலில் இந்த பிறை சின்னம் இல்லையென்றால் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு உள்ளது என அர்த்தமாம். மேலும், மிக லேசாக இந்த பிறை தெரிந்தால் செரிமான கோளாறுகள் உள்ளது என்பதை குறிக்கிறது.

நடு விரல்

நடு விரல்

மூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை குறிப்பதற்கு இந்த விரலில் உள்ள பிறை சின்னம் உதவுகிறது. உங்கள் விரலில் இது போன்று இல்லையெனில் இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது. இல்லையெனில் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும்.

MOST READ: வெறும் இரண்டு வாரம் இளநீரை தொடர்ந்து குடித்தால், தொப்பையை முழுமையாக குறைத்து விடலாம்..!

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரல்

விரல்களில் இவை ஒருவரை சுட்டி காட்ட பெரிதும் பயன்படுகிறது. இந்த விரலில் இந்த பிறை சின்னம் இல்லாமலோ, மிக குறைவாக இருந்தாலோ கணையம், குடல் பகுதியில் செயல்பாடு சீராக நடைபெறவில்லை என அர்த்தமாம்.

கட்டை விரல்

கட்டை விரல்

நுரையீரல் மற்றும் மண்ணீரல் வேலைப்பாட்டை குறிக்கிறது இந்த கட்டை விரல். இந்த விரலில் பிறை சின்னம் இல்லையெனில் இந்த உறுப்புகளில் பிரச்சினை உள்ளது என அர்த்தமாம். இவை புகை பிடிக்கும் பழக்கம் கொண்டோருக்கு மிக குறைவாக இருக்குமாம்.

நிறங்கள் மாற்றமா..?

நிறங்கள் மாற்றமா..?

இந்த பிறை வடிவத்தில் ஏதேனும் நிற மாற்றம் தெரிந்தால் பல வித ஆபத்துக்களை குறிக்கிறதாம். சாம்பல் நிறம், செரிமான கோளாறுகள், ஊட்டசத்து குறைபாடு, பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அர்த்தம். சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்புள்ளதாம். கருப்பு நிறம், அபாயகரமான எச்சரிக்கையை உங்களுக்கு தருகிறது.

எது சரியான நிறம்..?

எது சரியான நிறம்..?

மேலும், ஊதா நிறத்தில் இந்த பிறை சின்னம் இருந்தால் குறைவான ரத்த ஓட்டம், உறுப்புகளில் ஆக்சிஜென் பற்றாக்குறைஇருப்பதாக சொல்கிறது. உங்களின் விரலில் இந்த பிறை வெள்ளையாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

MOST READ: ப்ரேக்-அப், கிட்னி செயலிழப்பு, மரணத்தின் விளிம்புநிலை... பாடகி நடிகையின் ரணமான வாழ்க்கை!

பிறை அதிகமாக உள்ளதா..?

பிறை அதிகமாக உள்ளதா..?

பொதுவாக இந்த பிறை சின்னம் உங்கள் விரலின் முக்கால் வாசி பகுதியை பிடித்து கொண்டால் உடல் நல கோளாறுகள் அதிகம் ஏற்படும் என அர்த்தமாம். குறிப்பாக இதய கோளறுகள், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சு பிடிப்பு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.

மிக சிறிய பிறையா..?

மிக சிறிய பிறையா..?

விரல்களில் இந்த பிறை மிக சின்னதாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற உடல்நிலை உள்ளது என்பதை உணர்த்துகிறது. எதிர்ப்பு சக்தி குறைவு, இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் பி12 குறைவு ஆகியவற்றை இவை குறிக்கிறது. மேலும், இதனால் குறைந்த ரத்த அழுத்தம் அல்லது சீரான ரத்த ஓட்டம் தடை பட கூடும்.

பிறையே இல்லையா..?

பிறையே இல்லையா..?

உங்களின் கைகளில் இந்த பிறை சின்னமே இல்லையெனில்... மேற்சொன்ன பிரச்சினைகளால் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருக்கலாம் என்பதாம். மேலும், இந்த பிறை இல்லையெனில் தைராயிட் அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என அர்த்தமாம். குழந்தைகளுக்கு இவை அதிகம் தோன்றாது. எனவே இதை நினைத்து பயப்பட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Moons On Your Each Nails Can Reveal Your Health Problems

What is the moon on your nails reveal to you?
Desktop Bottom Promotion