Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆண்களுக்கு புற்றுநோய் வரபோவதற்கான அறிகுறிகள்
புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் புற்றுநோயின் அறிகுறிகள் மற்ற நோயின் அறிகுறிகளை போலவே இருக்கும். அதற்கென நாம் அலட்சியமாக விட்டுவிட முடியாது.
புற்றுநோய் என்பது இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அரக்கனாகும். புற்றுநோயால் சிறு பாதிப்புகளில் இருந்து தொடங்கி உயிரிழப்பு வரை கூட ஏற்படலாம். பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கவழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல் என புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆனால் புகை பிடிக்காதவர்கள், சீரான உணவு பழக்கவழக்கம் உள்ளவர்கள் கூட புற்றுநோயால் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான ஒன்று.

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது சுலபம் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசாக கிடைக்கும். புற்றுநோய் அறிகுறிகளை பலரும் அலட்சியமாக விட காரணம் இதன் அறிகுறிகள் மற்ற நோயின் அறிகுறிகளை போலவே இருப்பதுதான். எனவே உடலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது. இங்கே கூறப்படும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். ஏனென்றால் இவை அனைத்தும் நீங்கள் சாதரணமாக எண்ணி அலட்சியமாக கருதக்கூடிய அறிகுறிகள்.

வாய்ப்புண்
பனியால் ஏற்படக்கூடிய வாய்ப்புண் விரைவில் குணமடைந்துவிடும் அல்லது ஒருமுறை மருத்துவரிடம் சென்று வந்தால் போதும் குணமடைந்துவிடும். ஆனால் நீண்ட நாளாகியும் சரியாகாத வாய்ப்புண்களோ, நாக்கு அல்லது ஈறுகளில் சிவப்பு நிற தடிப்புகளோ அல்லது தாடையை சுற்றிய பகுதிகளில் உணர்வின்மையோ இருப்பின் அவை வாய்ப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். புகை பிடிப்பவர்களுக்கோ அல்லது பான் பொருட்களை வாயில் போட்டு மெல்லுபவர்க்ளுக்கோ வாய் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பழக்கம் உள்ளவர்கள் இதில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

எடை குறைதல்
எடை குறைதல் என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறியாகும். எந்த காரணமும் இன்றி உடல் எடை ஐந்து கிலோக்கலுக்கு மேல் குறைந்தால் நிச்சயம் அது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் அதிக எடை இழப்பை உணரும்போது உடனடியாக புற்றுநோய் பரிசோதனை செய்துபார்க்கவும். இது பெரும்பாலும் கணையம், வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

சிறுநீர் கழித்தலில் சிரமம்
சிறுநீர் கழித்தலில் சிரமம், சிறுநீர் அல்லது விந்தணுக்களுடன் இரத்தம் சேர்ந்து வருதல் அல்லது விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள். இவை புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு தீவிரமடைந்த பின்பே அறிகுறிகளை அறிய இயலும். இருப்பினும், இந்த அறிகுறிகள் இருக்கும்போதே பரிசோதித்து பார்ப்பது பெரிய ஆபத்திலிருந்து உங்களை பாதுகாக்கும்.

தோலில் ஏற்படும் மாற்றங்கள்
பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிக அளவு தோல் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். காரணம், பெண்களை விட ஆண்கள் அதிகளவு வெயிலில் இருக்கிறார்கள் மேலும் பெண்களை போல ஆண்களுக்கு சூரிய ஒளியை தாங்கும் அளவிற்கு தலைமுடி இல்லை. சருமத்தில் ஒரு பகுதி மட்டும் கருத்து, வீங்கி மேலே எழுந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகவும். இது மெலோனமா என்றழைக்கப்படும் தோல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

இருமல்
சளி அல்லது மற்ற ஒவ்வாமைகளால் ஏற்படும் இருமல் மூன்று வாரங்களுக்கு மேல் நிலைத்திருக்காது. ஒருவேளை மூன்று வாரமாகியும் உங்களுக்கு இருமல் நிற்கவில்லை என்றால் அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். அது மட்டுமின்றி இருமும்போது இரத்தம் வந்தால் சற்றும் தாமதிக்கக்கூடாது. அதேபோல் மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ச்சியாக வலி இருப்பதும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்தான்.

மலத்தில் இரத்தம்
இது ஹேமர்ஹாய்ட்ஸ் அல்லது அதைவிட அதிக தீங்கானதாக இருக்கும். பெரும்பாலும் இது குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். இது 50 வயதை கடந்தவர்களுக்குத்தான் ஏற்படும் என்ற கருத்து உள்ளது ஆனால் இப்பொழுது இளைஞர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட தொடங்கிவிட்டனர். இதனை மலச்சிக்கல் என நாம் அலட்சியமாக விட வாய்ப்புகள் அதிகம் ஆனால் இந்த அலட்சியம் உங்கள் உயிரையே பறிக்கக்கூடும்.

சோர்வு
நாம் மிகவும் அலட்சியமாக விட்டுவிடும் அறிகுறி இதுவாகும். காரணம் சோர்வு என்பது அனைவருக்கும் எளிதில் ஏற்படக்கூடியது. நாம் வேலைப்பளு காரணமாக சோர்வடைந்திருக்கிறோம் என எண்ணுவோம் ஆனால் காரணமற்ற ஓய்வு புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது சில சமயம் லூக்கோமியாவாக இருக்கலாம் அல்லது வயிற்றில் ஏற்படும் புற்றுநோயாகவும் இருக்கலாம்.

வயிற்றுவலி
செரிமானத்தில் பிரச்சினை இருந்தால் வயிறு அதிகமாக வலித்தால் அதனை அஜீரணம் என விட்டுவிட வேண்டாம். அது குடல், வயிறு, கணைய புற்றுநோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது சாதாரண அல்சராகவும் இருக்க வாய்ப்புள்ளது ஆனால் அதனை சோதனை செய்து உறுதி செய்வதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

காய்ச்சல்
காலநிலை மாறும்போது காய்ச்சல் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைத்துவிடாதீர்கள். இரத்த புற்றுநோய் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். எனவே நமக்கு எளிதில் அலர்ஜிகள் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். திடீரென காய்ச்சல் வந்தால் உடனடியாக சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும். அது இரத்த புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
முடிந்தளவு தீய பழக்கங்களை குறைத்து கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தொடர்ச்சியாக மருத்துவர்களை ஆலோசித்தாலே போதும் புற்றுநோயிலிருந்து எளிதில் தப்பிவிடலாம்.



Click it and Unblock the Notifications
