Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கொலஸ்ட்ராலை சட்டென குறைத்து ஒல்லியாக வேண்டுமா..? அப்போ சீமை மாதுளையை சாப்பிடுங்க..!
இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் பருமன் தான். உடல் எடை கூடி கொண்டே போவதால் நம்மால் எந்த வித வேலையையும் செய்ய முடிவதில்லை. இதே நிலை பல நாட்கள் நீடித்தால், உடல் சோர்வு, இதய நோய்கள், மாரடைப்பு, மலசிக்கல் போன்றவை நம்மை தாக்க கூடும்.

நம் எல்லோருக்கும் மாதுளை பழம் தெரியும். ஆனால், சீமை மாதுளை தெரியுமா..? இந்த பழத்தின் மகிமையை நாம் இதனை நாட்கள் கண்டுகொள்ளாமலே இருந்திருப்போம். ஆனால், இந்த பழம் தான் உங்களின் உடல் எடை பிரச்சினை முதல் இதய கோளாறுகள் வரை சரி செய்கிறதாம். அது எப்படி என்பதை இனி நாம் அறிந்து கொள்வோம்.

சீமை மாதுளையா..?
இது வரை நாம் கேள்விப்பட்டிராத பல பழங்களின் பெயரில் சீமை மாதுளையும் ஒன்று. பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் பளீச்சென்று இருக்க கூடிய இந்த பழத்தின் மகிமைகள் பல. இதில் வைட்டமின் எ, பி, சி, நார்ச்சத்துக்கள், தாதுக்கள், காப்பர், ஜின்க், பாஸ்பரஸ், இரும்புசத்து போன்றவை அதிக அளவில் உள்ளதாம்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை...
இந்த சீமை மாதுளையில் எண்ணற்ற அளவில் ஆண்டின் ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறதாம். எனவே, இவற்றை நாம் சாப்பிடுவதால் செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். எனவே, நாம் விரைவில் வயதாகாமல் இருக்கலாம். மேலும், இவை இதயம் சார்ந்த நோய்களையும் தடுக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற...
நமது உடலில் சேர கூடிய கொலெஸ்ட்ரால்கள் இரு வகைப்படும். ஒன்று கெட்ட கொலெஸ்ட்ரோல், வேறொன்று நல்ல கொலெஸ்ட்ரோல். இதில் கேட்ட கொலெஸ்ட்ரோல் தான் நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. சீமை மாதுளையை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய தொடங்கும்.

சீனர்களின் முறை...
சீனர்கள் இந்த பழத்தின் விதையை கொண்டு கண் சார்ந்த நோய்களை குணப்படுத்தி கொள்வார்களாம். சீமை மாதுளையை சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள் மற்றும் கண் நோய்கள் குணமாகும். மேலும், வீக்கம், வறண்ட தொண்டை ஆகிய பிரச்சினைகளையும் சரி செய்து விடுமாம்.

குடல் புண்களுக்கு...
இப்போதெல்லாம் தேவையற்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டு விட்டு கண்ட நோய்களுக்கு ஆளாகின்றோம். இந்த வரிசையில் இந்த அல்சரும் ஒன்று. குடல் புண்கள், நோய்கள் கொண்டவர்கள் சீமை மாதுளை சாற்றை சாப்பிட்டு வந்தாலே போதும். விரைவில் குணமடைந்து விடும்.

உடல் எடை குறைய...
உடல் எடை குறைவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..? இனி இந்த கவலையை விட்டு தள்ளுங்கள். வெறும் 57 கலோரிகள் மட்டுமே கொண்ட இந்த சீமை மாதுளையை உங்களின் டயட்டில் சேர்த்து கொள்வதால், உடல் எடை சீக்கிரமாகவே குறைய தொடங்கும்.

புற்றுநோயை தடுக்க...
புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் ஆற்றல் இந்த சீமை மாதுளைக்கு உள்ளது. இதில் உள்ள டானின் என்கிற மூல பொருள் குடலில் உருவாக கூடிய புற்றநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. அத்துடன் இவை குடல் பகுதியில் உள்ள நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்த
இந்த சீமை மாதுளை பழத்தை சாப்பிடுவதால் பல காலை வேளை பலன்கள் சீராக நிறைவேறும். மலச்சிக்கல் பிரச்சினை கொண்டவர்கள் இந்த பழத்தின் சாற்றை தேனுடன் கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் விரைவில் சரியாகி விடும்.

வீக்கங்களை குறைக்க...
வைட்டமின் சி இந்த சீமை மாதுளையில் அதிக அளவில் உள்ளது. இதனை சாப்பிடுவதால் குடல் வீக்கம், சரும வீக்கம், ஒவ்வாமை, சொறி ஆகியவை குணமாகுமாம். மேலும், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டாலும் இந்த பழத்தை சாப்பிட்டால் சரி செய்து விடலாம்.

சுவாச பிரச்சினைக்கு...
சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு இந்த பழம் சிறந்த தீர்வாகவும். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது தொண்டை வறட்சி, ஆஸ்துமா, இரத்த சோகை போன்றவற்றை சரி செய்ய பயன்படும். மேலும், காச நோயாளிகளுக்கும் சீமை மாதுளை சிறந்த மருந்தாகும்.

மன அழுத்தம் போக்க...
சீமை மாதுளையை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எனவே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். அத்துடன் அடிக்கடி ஏற்பட கூடிய மன அழுத்தமும் விரைவில் குறைந்து விடுமாம்.
இத்தகைய மகத்துவமான சீமை மாதுளையை நீங்களும் உண்டு மகிழுங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் தோழர்களுடனும் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications











