Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
மன அழுத்தத்தை குறைக்கணுமா? இதை செஞ்சா போதும்
மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும், அதை குறைப்பதற்கான எளிய வழிகள்.
மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்

இந்த மன அழுத்தம் தற்காலிக சோர்வு முதல் நிரந்தர மூளைக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானவை. இந்த மன அழுத்தத்தை சரி செய்கிறோம் என பல தனியார் அமைப்புகள் மக்களை ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள். ஆனால் நம் மனதும், மூளையும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய மன அழுத்தத்தை நீங்களே குறைக்க பல எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

1. தியானம்
இது மிகவும் பயன்தர கூடிய ஒரு வழி. தினமும் இதற்கென சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்வது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல வேண்டுமென அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடி " நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என மனப்பூர்வமாக உணர்ந்து சொல்லுங்கள். இது உங்களின் அன்றைய நாளின் போக்கையே மாற்றிவிடும். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என நம்முடைய எண்ணங்கள்தான் முடிவு செய்யும்.

2. ஆழமாக மூச்சு விடுதல்
ஒரு அழுத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ள போகிறோம் என நீங்கள் உணர்ந்தால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள். நேராக உட்கார்ந்து, கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். ஆழமாக மூச்சு விடுவது இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தெளிந்த மனநிலையுடன் இருக்கும்போது எந்த சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

3. வெளியே செல்லுங்கள்
மன அழுத்தம் அதிகரிக்கும் போது சோர்வடையாமல் சிறிது நேரம் வெளியே செல்லுங்கள். நொடிக்கு நொடி மாறும் காட்சிகளும், சுத்தமான காற்றும் உங்கள் மனநிலையை மாற்றி புத்துணர்ச்சியாய் உணரச்செய்யும்.

4. உரையாடல்
மன அழுத்தம் அதிகரிக்கும் போது உங்களுக்கு தேவை அதனை குறைக்க ஒரு வடிகால் மட்டும்தான். அது உங்களுக்கு பிடித்தவரை தவிர வேறு யாராக இருக்க முடியும். எனவே அவர் உங்கள் அருகில் இருப்பவராய் இருந்தால் நேரில் சென்று பேசுங்கள் அது முடியவில்லை எனில் தொலைபேசியிலாவது பேசுங்கள். இதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது.

5. சிரித்தல்
நீங்கள் படங்களில் பார்த்திருப்பீர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிலர் சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் அது பலன் தரக்கூடிய ஒன்றுதான். சிரிக்கும்போது அது மன அழுத்தத்தை தரும் கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது மேலும் நம் மனநிலையை மாற்றக்கூடிய எண்டோர்பின்ஸ் எனப்படும் மூளை இரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே முடிந்த வரை சிரிக்க முயலுங்கள். மன அழுத்தத்தை புன்னகையால் தோற்கடியுங்கள்.

6. உணவு
இது சற்று வேடிக்கையாக இருக்கலாம். " மன அழுத்தத்தில் இருக்கும்போது எப்படி சாப்பிடுவது?" என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆனால் மன அழுத்தம் உங்களின் உடல் தேவைகளை உங்களை கவனித்துக்கொள்ள விடாது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது அதுவே உங்கள் மனநிலையை மோசமாக்கும். எனவே சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உங்கள் மனநிலையை சீராக்கும். அதிலும் உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் கூடுதல் பலனை தரும்.



Click it and Unblock the Notifications