Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா?
பெருங்காயம் சிறிதளவு சேர்த்தாலே அது அதிக வாசனையை தரக்கூடியது. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பெருங்காயத்தில் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது.
தென்னிந்திய உணவுகளில் பெருங்காயத்திற்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. குறிப்பாக சாம்பார், ரசம் போன்றவற்றில் பெருங்காயம் சேர்க்காமல் சமைப்பது என்னும் பழக்கமே கிடையாது. வாசனைக்காக சேர்க்கப்படும் பெருங்காயத்தில் பலவித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. நம் முன்னோர்கள் உணவில் சேர்த்த ஒவ்வொரு பொருளிலும் ஒரு ஆரோக்கிய நன்மை இருந்தது.

பெருங்காயம் சிறிதளவு சேர்த்தாலே அது அதிக வாசனையை தரக்கூடியது. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பெருங்காயத்தில் சில பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பிட்ட அளவை தாண்டும்போது அது பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தினமும் 5 முதல் 30 மிகி பெருங்காயம் எடுத்துக்கொள்வதே நல்லது. பெருங்காயத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

சரும எரிச்சல்
பெருங்காயம் குறிப்பிட்ட அளவை தாண்டும்போது அது சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவேளை உங்கள் சருமம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால் பெருங்காயத்தால் ஏற்படும் பாதிப்புகள் மோசமானதாக இருக்கும். பாதிப்புகள் அதிகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

உதடுகளில் வீக்கம்
சிலர் தங்கள் உதடுகளில் அசாதரணமான தொல்லைகளை உணருவார்கள். நிலைமை மோசமடையும்போது இது தொண்டை மற்றும் முகத்திலும் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ உதவிகள் பெறவேண்டியது அவசியம்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள்
வாயுக்கோளாறு, வயிற்றில் எரிச்சல் உணர்வு மற்றும் வாந்தி போன்றவை பெருங்காயத்தின் முக்கிய பக்கவிளைவுகளாகும். வயிற்றுபோக்கு ஏற்படுவதும் கூட இதன் அறிகுறிதான். மேலும் அடிவயிற்றில் வாயு பிரச்சினை மற்றும் தொடர்ச்சியான ஏப்பம் போன்றவை இதனால் ஏற்படும் மற்ற அசௌகரியங்கள் ஆகும்.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது
ஏற்கனவே உயர் அழுத்தம் மற்றும் ஹைபர்டென்சன் அல்லது ஹிபோடென்சன்உள்ளவர்கள் பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும் இல்லையெனில் இரத்த அழுத்தம் அதிகரித்து இதய கோளாறுகளை உருவாக்கும்.

தலைவலி மற்றும் மயக்கம்
அதிகளவு பெருங்காயம் சேர்த்துக்கொள்வது தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இதனால் நினைவு இழப்பு மற்றும் கவனக்குறைவு போன்ற எதிர்மறை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பக்கவிளைவுகள் தாற்காலிகமானவைதான்.

கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலம்
கர்ப்பிணி பெண்கள் உணவில் அதிகளவு பெருங்காயத்தை சேர்த்து கொள்வது அவர்களுக்கு நல்லதல்ல. இதனால் கருச்சிதைவு கூட ஏற்படலாம். அதேபோல தாய்ப்பாலூட்டும் பெண்களும் உணவில் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தாய்ப்பால் மூலம் இது குழந்தைக்கு செல்லும்போது அது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் இரத்தம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

வாதம்
உங்களுக்கு வாதம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உணவில் பெருங்காயம் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்கள் பெருங்காயம் சாப்பிடுவது அவர்களின் பாதிப்பை அதிகரிக்கும்.

மற்ற கோளாறுகள்
அதிகளவு பெருங்காயம் உட்கொள்வது சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், தொண்டை பாதிப்புகள், மறதி மற்றும் ஈரலில் நச்சுப்பொருட்களை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். பெண்களை பொறுத்தவரையில் அதிகளவு பெருங்காயம் சாப்பிடுவது அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications