Latest Updates
-
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஆண்களே! மலப்புழையில் மசாஜ் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும் தெரியுமா?
புரோஸ்டேட் ஒரு மர்மமான மற்றும் தவறாக புரிந்து கொள்ளும்படியான உறுப்பு. இந்த உறுப்பு வால்நட் அளவில் ஆண்களின் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே அமைந்துள்ளது. புரோஸ்டேட் சுரப்பியின் முக்கிய செயல்பாடு, விந்துவை உற்பத்தி செய்து, ஆண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது வெளியேற்றுவதாகும். இந்த புரோஸ்டேட் சுரப்பியை ஆண்களின் ஜி-ஸ்பாட் என்றும் அழைக்கலாம். இந்த சுரப்பியில் தூண்டுதலைக் கொடுக்கும் போது, ஆண்களின் பாலுணர்ச்சி அதிகமாக தூண்டப்பட்டு, சில சமயங்களில் இந்த தூண்டுதலினாலேயே விந்து வெளியேறிவிடும்.
அந்த அளவில் புரோஸ்டேட் சுரப்பி ஆண்களின் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். பல ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியில் தூண்டுதலை ஏற்படுத்துவது எப்படி என்று தெரிந்தும், அதை மேற்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். சிலருக்கு புரோஸ்டேட் சுரப்பியில் தூண்டுதலை எப்படி கொடுப்பது என்று தெரியாது. அது வேறொன்றும் இல்லை, மலப்புழையின் வழியே தூண்டுதலைக் கொடுக்க வேண்டும்.

முக்கியமாக புரோஸ்டேட் சுரப்பியில் தூண்டுதலைக் கொடுப்பதற்கு என்றே புரோஸ்டேட் மசாஜ் கருவிகள் கடந்த 5 வருடங்களாக அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன என்றால் பாருங்கள். குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் இந்த வகை புரோஸ்டேட் மசாஜ் கருவிகளை அதிகம் பயன்படுத்துகின்றனராம். மேலும் சில மருத்துவர்களும் ஆண்கள் தொடர்ச்சியாக புரோஸ்டேட் மசாஜ் செய்வதை ஊக்குவிக்கின்றனர். ஆனால் இந்த மசாஜை தனியாகவோ அல்லது உரிமம் பெற்ற பயிற்சியாளர் மூலமாகவோ செய்வதே நல்லது. இல்லாவிட்டால், பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
இந்த தலைப்பைப் படிக்கும் போதே பலர் அருவெறுப்பு அடையலாம். ஆனால் ஆண்களின் ஆரோக்கியம் என்று வரும் போது, இதைப் பற்றி தெரிந்து கொண்டு மேற்கொள்வதில் தவறேதும் இல்லையே. சொல்லப்போனால் புரோஸ்டேட் மசாஜ் செய்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் ஆண்களுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா? இந்த கட்டுரையில் புரோஸ்டேட் மசாஜ் மூலம் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்
புரோஸ்டேட் மசாஜ் செய்வதால் விறைப்புத்தன்மை செயல்பாடு மேம்படும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும், மருத்துவர்களிடம் இதுக்குறித்து கேட்டால், அவர்கள் இந்த வகை மசாஜ் நல்ல மாற்றத்தை ஏற்டுத்தும் என்று தான் கூறுகிறார்கள். ஏனென்றால், புரோஸ்டேட் மசாஜ் செய்யும் போது, அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு மேம்பட்டு, அதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகிறது.
பொதுவாக விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பது. எனவே புரோஸ்டேட் மசாஜ் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனையில் விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிறுநீர் சரியாக வெளியேறும்
சிறுநீரானது சரியான அளவில் வெளியேற வேண்டியது அவசியம். ஆனால் ஒரு ஆணின் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துடனோ அல்லது அழற்சியுடனோ இருந்தால், புரோஸ்டேட் சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறுவதில் இடையூறை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் வெளியேற்றைத்தையே நிறுத்திவிடும்.
ஆனால் புரோஸ்டேட் மசாஸை சீராக செய்யும் போது, புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள அழற்சியின் அளவு குறைந்து, சிறுநீர் பிரச்சனைகள் நீங்கி, சிறுநீர் வெளியேற்றத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆண்கள் சிறுநீர் வெளியேற்றுவதில் பிரச்சனையை சந்தித்தால், கெகல் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் விடுபடலாம்.

வலிமிக்க விந்து வெளியேற்றம் குணமாகும்
விந்து வெளியேறும் போது வலி ஏற்படுவது என்பது அரிதான ஒன்று தான். ஆனால் சில ஆண்களுக்கு இப்பிரச்சனையும் உள்ளது. இதற்கு காரணம் விரைகளின் அருகே உள்ள எபிடிடிமிஸ் என்னும் குழாய், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப் பாதைகளில் தொற்றுகள் அல்லது அழற்சி ஏற்பட்டிருந்தால் வலியை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறி விந்துப்பையில் உள்ள அடைப்பையும் குறிக்கும்.
ஆனால் புரோஸ்டேட் மசாஜ் செய்வதன் மூலம், புரோஸ்டேட்டில் உள்ள அழற்சி குறைவதோடு, விந்து வெளியேற்றத்தின் போது சந்திக்கும் வலியின் அளவும் குறையும். வலிமிக்க விந்து வெளியேற்றத்திற்கான மற்றொரு காரணி, புரோஸ்டேட்டில் உள்ள அழற்சி அல்லது தொற்றுக்களால், இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்திருப்பதனாலும் இருக்கலாம். இதற்கு புரோஸ்டேட் மசாஜ் அல்லது கெகல் பயிற்சியை ஆண்கள் செய்து வந்தாலே சரியாகிவிடும்.

புரோஸ்டேட் அழற்சிக்கு சிகிச்சை அளிக்க உதவும்
புரோஸ்டாடிஸ் என்பது புரோஸ்டேட் சுரப்பில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும். இவ்வகை அழற்சியானது பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும். ஒரு ஆணுக்கு புரோஸ்டாடிஸ் இருந்தால், அந்த ஆண் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சலை சந்திக்கக்கூடும், விதைப்பையின் கீழ் பகுதி மற்றும் மலக்குடலின் பின்புறத்தில் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும்.
பொதுவாக புரோஸ்டாடிஸ் பிரச்சனைக்கு ஆன்டி-பயாடிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் சில மருத்துவர்கள் புரோஸ்டேட் மசாஜ் மூலம் நேர்மறை பலனைப் பெறலாம் என்று கூறுகின்றனர். இருப்பினும் இது எவ்வித விஞ்ஞான ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்படவில்லை.

புரோஸ்டேட் வீக்கத்தில் இருந்து விடுவிக்க உதவும்
ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளுள் ஒன்று புரோஸ்டேட் வீக்கம். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் இவ்வகை புரோஸ்டேட் பிரச்சனையை சந்திப்பார்கள். புரோஸ்டேட் வீக்கத்திற்கான அறிகுறிகள் புரோஸ்டாடிஸைப் போன்று வலிமிக்க சிறுநீர் வெளியேற்றம், சிறுநீர் தேக்கம் மற்றும் அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு போன்றவற்றை உண்டாக்கும்.
இந்த புரோஸ்டேட் வீக்கம் கொண்ட ஆண்களுக்கு, ஆல்பா ப்ளாக்கர்களைக் கொண்டு சிறுநீர்ப்பை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்தால், அவர்களால் எளிதில் சிறுநீர் கழிக்க முடியும். இல்லாவிட்டால், புரோஸ்டேட் சுரப்பின் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன்களை 5-ஆல்பா ரிடக்டஸ் தடுப்பான்களைக் கொண்டு தடுத்து, வீக்கத்தின் அளவைக் குறைக்கலாம்.
2006-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தொடர்ச்சியான புரோஸ்டேட் மசாஜ் செய்வதுடன், மேலே குறிப்பிட்ட மருந்துகளையும் உடன் எடுத்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நல்ல உணர்வைக் கொடுக்கும்
ஆண் ஜி-ஸ்பாட்டானது ஆயிரக்கணக்கான நரம்பு முடிகளைக் கொண்டிருப்பதால், இவ்விடத்தில் தூண்டுதலைக் கொடுக்கும் போது, அது ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சில ஆண்கள் வெறும் புரோஸ்டேட் தூண்டுதலின் மூலமே உச்சக்கட்ட இன்பத்தை அடைவதாக கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications