Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு எப்படியெல்லாம் இறப்பு வரும்?
தனியாக தங்கி வேலை செய்யும் ஆண்களுக்கு பக்கவாதம் வந்து மரணத்தை தழுவும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிகாலையில் எழுந்தால், இரவு படுக்கையில் விழும் வரைக்கும் பரபர வாழ்க்கைதான்! நகர்ப்புறங்களில் இன்று மனிதர்கள் அத்தனைபேருமே ஏதோ இயந்திரம் போல ஒரே வேலையையே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். பெருகி வரும் தேவைகள், அத்தனையாய் உழைப்பை கோருகின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?

இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைப்பது, வேலையினிமித்தம் குடும்பத்தை ஓரிடத்தில் விட்டுவிட்டு, வேறு எங்கோ தங்கி பணியாற்றுவது என்று மனிதர்கள் பல்வேறு தியாகங்களை செய்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனிமை
அளவுக்கு அதிகமான கடின உழைப்பு தரும் பக்க விளைவுகள், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான் என்றாலும், குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இன்னும் ஆணுக்குதான் அதிகமாக இருக்கிறது. ஆணை தான், குடும்பத்திற்கு உணவளிப்பவனாக சமுதாயம் பார்க்கிறது.
தனியாக தங்கி வேலை செய்யும் ஆண்களுக்கு பக்கவாதம் வந்து மரணத்தை தழுவும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆண்களும் மரணமும்
மேற்கு ஸ்வீடனில் பக்கவாதம் தாக்கிய 70 வயதுக்குட்பட்ட 1,090 பேரிடம் ஓர் ஆய்வு செய்யப்பட்டது. சால்கிரென்ஸ்கா அகாடமி என்ற அமைப்பிற்காக டாக்டர் பெட்ரா ரெட்ஃபோர்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இரத்த ஓட்டம் தடை படுவதால் ஏற்படும் பக்கவாதம் குறித்த இந்த ஆய்வில் ஆண்களுக்கு அதிலும் தனியாக வாழ்பவர்கள் மரணிக்கும் விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பக்கவாதம் தாக்கி 12 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் நோயாளிகளில் 36 சதவீதம் பேர் தனியாக வசிப்பவர்கள் என்றும், குடும்பத்தோடு வாழ்பவர்களுள் மரணத்தை தழுவும் சதவீதம் 17 தான் என்றும் ரெட்ஃபோர்ஸ், முனைவர் பட்டத்திற்காக செய்த ஆய்வு விளக்குகிறது.

காரணங்கள்
தனியாக வாழ்பவர்கள் அதிக அளவில் மரணிக்க, குறைவான உடல் இயக்கம், அதிக அளவு மது, குறைந்த கல்வி அறிவு ஆகியவற்றுடன் இன்னும் சில ஆபத்தான காரியங்களும் காரணமாகின்றன.
"தனியாக வசிப்பவர்களின் வாழ்வு ஆரோக்கியம் குறைவானதாக உள்ளது. மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதில்லை என்பதுடன், அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் மருத்துவ உதவியை நாட தாமதித்தல் ஆகியவையும் மரணத்திற்கு காரணமாக அமைகிறது," என்று ரெட்ஃபோர்ஸ் கூறுகிறார்.

பக்கவாதம்
இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு வரும் மற்றும் இதயத்திலிருந்து இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் பெரும் இரத்த நாளங்கள் ஏற்படும் பாதிப்பு காரணமாக பக்கவாதம் வந்தோருக்கு ஆபத்தின் அளவு அதிகம்.

நீரிழிவு
நீரிழிவு, இதய தமனி நோய் போன்றவை ஆண்களுக்கு மரணத்தை வர வழைக்கும் அளவுக்கு ஆபத்தானவை. குறைவான உடல் இயக்கம், பக்கவாதம் தாக்கிய பிறகு இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஏழு ஆண்டுகள் தொடர்ந்த ஆய்வில் பக்கவாதம் தாக்கியோரில் பெரும்பாலோனோருக்கு நினைவுத்திறன், கவனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவை பாதிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

கூட்டு வாழ்க்கை
தனியாக வசிக்கும் ஆண்களின் தேவைகளை கரிசனையோடு அணுகி, ஆதரவாய் விளங்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உடல்நலத்தை பாதுகாத்து எதிர்காலத்திலும் ஆரோக்கிமாக வாழ்வதற்கு இந்த ஆய்வு உதவுகிறது;வழிகாட்டுகிறது.



Click it and Unblock the Notifications
