Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் ஏற்படுமா? அறியப்படாத தகவல்கள்!
வெஸ்டர்ன் முறையில் அமைந்த கழிப்பறையை பயன்படுத்த 90 டிகிரி அமைப்பில் அதன் மீது அமர்ந்து மலம் கழிக்க வேண்டும்; மேலும் அந்த கழிவறை குழியில் இருக்கும் நீர் உங்கள் பிறப்புறுப்பை தொடும் அபாயம் இந்த முறையில்
நமது வாழ்வில் தினந்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நாகரிக மாற்றங்களால், நம் பாரம்பரிய ஆரோக்கிய பழக்க வழக்கத்தை மறந்து கொண்டிருக்கிறோம். அதில் பல விஷயங்கள் அடங்கும்; உதாரணமாக கீழே சம்மணமிட்டு சாப்பிட்டு வந்த நாம், மேஜையேறி சாப்பிட தொடங்கியது, குத்துக்காலிட்டு மலம் கழித்து வந்த நாம் உட்கார்ந்து கழித்து உடலை கெடுத்துக் கொண்டது, பழைய சோறு உண்டு பெருவாழ்வு வாழ்ந்த நாம், பீட்ஸா - பர்கர் என்று போய் பழக்கம் மறந்தது என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நாம் மறந்த பழக்கங்களில் மிக முக்கியமான பழக்கத்தை குறித்து இந்த பதிப்பில் படித்து அறிந்து கொள்வோம்..!

குத்துக்கால் to குஷன் சேர் பொசிஷன்
குத்துக்காலிட்டு மலம் கழித்து, ஆரோக்கியமாக மலச்சிக்கல், மூலம் போன்ற எவ்வித ஆசனவாய் பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்தோம். ஆனால், நாகரீக மாற்றம் காரணமாக குத்துக்காலிட்டு மலம் கழிப்பதை அவமானமாக எண்ணத் தொடங்கினோம்; நாகரிக உணவுப்பழக்க வழக்கங்களை பின்பற்றி, நமது உடலின் நலத்தை நாமே கெடுத்து, குத்துக்காலிட்டு அமர்ந்து மலம் கழிக்கக் கூட முடியாததாக நம் உடலை நாமே மாற்றி வைத்துக் கொண்டோம்.
அவ்வாறு உருவான பலவீனமான உடல் நிலையை காரணம் காட்டி, இந்த வெஸ்டர்ன் டாய்லெட் பழக்கத்தை நம் வாழ்க்கை முறையில் அறிமுகப்படுத்தி, அத்யாவசிய தேவையாக மாற்றிக் கொண்டோம். இதனால் உடலுக்கு அதிக தீமைகள் விளைவதை அறிந்தும் அறியாதது போல், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறோம். இந்த பதிப்பில் வெஸ்டர்ன் டாய்லெட் பழக்க முறையால் என்னென்ன தீங்குகளை, நன்மைகளாய் எண்ணி நாம் பின்பற்றுகிறோம், அதனால் நாம் அடைகின்ற மற்றும் அடையப்போகும் பரிசுகள் - நோய்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.

நம் பாரம்பரிய முறை
முன்னோர்கள் மூலம் வழிவழியாக இப்படி தான் உண்ண வேண்டும், செயல்பட வேண்டும் என அனைத்து பழக்கங்களையும் கற்று பின்பற்றி வந்த நாம். தற்காலத்தில் நாகரிக மாற்றத்தால், அனைத்தையும் மறந்து மாறி வருகிறோம். அதில் முற்றிலுமாக நாம் மறந்து கொண்டு வரும் ஒரு பழக்கம் மலம் கழிக்கும் முறை.
முன்னோர்கள் நமக்கு குத்துக்காலிட்டு மலம் கழிக்க வேண்டும்; அதுவே சரியான முறை என்று கற்றுக்கொடுத்து விட்டு சென்றனர். ஆனால் நாம் அதை மறந்து வெஸ்டர்ன் கலாச்சாரத்திற்கு மாறி விட்டோம். நம் முன்னோர் அறிமுகப்படுத்திய முறையில் நாம் பெரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

குத்துக்கால் முறை - சிறப்புகள்!
குத்துக்கால் இட்டு மலம் கழிக்க மனித உடல் 35 டிகிரி நிலையை அடையும்; அதாவது உடல் பாகங்களை குறுக்கி, குத்துக்கால் போட்டு அமரும் போது, மலக்குடலில் உடலின் மற்ற பாகங்கள் அழுத்தம் அளித்து, மலக்குடலில் உள்ள மலம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்ற உதவுகிறது; இதனால், எந்தவித முக்கலும் முனங்கலும் இல்லாது, மலம் எளிதாக உடலை விட்டு வெளியேறுகிறது. மேலும் இந்த முறையால் நம்மை எந்த கிருமிகளும் தாக்காது, பிறரிடம் இருந்து எவ்வித நோய்த் தொற்றும் பரவாது. இந்த முறையில் மலம் கழித்து வருபவர்களுக்கு மூலம், மலச்சிக்கல் போன்ற நோய்க் குறைபாடுகள், வாழ்நாளில் எப்பொழுதும் ஏற்படாது.

வெஸ்டர்ன் முறை - அசிங்கங்கள்
வெஸ்டர்ன் முறையில் அமைந்த கழிப்பறையை பயன்படுத்த 90 டிகிரி அமைப்பில், அக்கழிப்பறையின்மீது அமர்ந்து மலம் கழிக்க வேண்டும்; மேலும் அந்த கழிவறை குழியில் இருக்கும் நீர் உங்கள் பிறப்புறுப்பின் மீது படும்அபாயம் இந்த முறையில் அதிகம் உள்ளது. இவ்வாறு 90 டிகிரி நிலையில் அமர்ந்து மலம் கழிக்க முயல்வது, மலக்குடலில் உள்ள மலத்தை முழுமையாக வெளியேற்றாது. இதனால், மலம் குடலில் இருந்து வெளியேறாமல் கொஞ்சம் கொஞ்சமாக படியத்தொடங்கி பலவித உடல் குறைபாடுகளை, மலக்குடல் புற்றுநோயை, மலச்சிக்கல், பைல்ஸ் என்று கூறப்படும் மூலம் போன்ற நோய்களை உடலில் தோற்றுவிக்கும் தன்மை கொண்டது, இந்த வெஸ்டர்ன் அசிங்க முறை.

மூலம்
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவதால், முதல் மற்றும் முக்கியமாக தோன்றும் உடல் குறைபாடு மூலம் - மூலநோய் எனும் பைல்ஸ் ஆகும். இதனை HEMORRHOID - ஹீமோராய்ட் என்றும் அழைப்பர்; இது உட்காரும் இடத்தில, அதாவது மனிதனின் பின்புட்டத்தில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் மற்றும் அசௌகரியம் காரணமாக ஏற்படும் நோய் தான் மூலநோய். மூல நோய் என்றால் என்ன, அது தனக்கு ஏற்பட்டுள்ளதா என்ன என்று அறியாமலேயே பல மக்கள் வாழ்ந்து, எதற்கு உடலில் பிரச்சனைகள் தோன்றுகின்றன என்று அறியாமலேயே மடியும் நிலைக்கு சென்று விடுகின்றனர். மூலத்தை உடலில் உண்டாக்கும் முக்கிய காரணி கழிவறை முறை; அதிலும் அதிக வெஸ்டர்ன் டாய்லெட் பயன்பாடு கண்டிப்பாக மூலநோயை உடலில் ஏற்படுத்தும். இந்த வெஸ்டர்ன் டாய்லெட் பற்றிய ஆய்வு தகவல்களை கீழே படித்தறியுங்கள்!

மலக்குடல் நோய்கள்!
ஆசியா, மத்திய கிழக்கு கண்டம், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பைல்ஸ் போன்ற மலக்குடல் நோய்கள் ஏற்படுவதில்லை; ஏற்படும் வாய்ப்பும் மிகக்குறைவு என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இதுவே உலகின் மற்ற கண்டங்களில் மலக்குடல் நோய்கள் அதிகம் ஏற்படுவதாகவும், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கழிவறை முறையான வெஸ்டர்ன் கழிவறை முறையே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களிலும் மலக்குடல் தொடர்பான நோய்கள் ஏற்பட்டு, அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்த கண்டத்து மக்கள் அமர்ந்த கழிவறை நிலையில் இருந்து, வெஸ்டர்ன் கழிவறை முறையை பின்பற்ற ஆரம்பித்ததே காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியது!
கழிவறை முறைகளின் பண்புகளையும், அவற்றின் நன்மை - தீமைகள், அவற்றை பயன்படுத்துவதின் மூலம் அவை நமக்கு தரும் பரிசுகள் போன்றவற்றை படித்தறிந்திருப்பீர். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று சிந்தியுங்கள்!
முதலில் உங்கள் வீட்டில், இந்த வெஸ்டர்ன் கழிவறை இருந்தால், அதை மாற்றி குத்துக்கால் கழிவறையை அமைக்க முயலுங்கள்!
இது பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லாததால் தான், பல இடங்களில், பொது இடங்களில், வெஸ்டர்ன் முறையிலான கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் விழிப்புணர்வு அடைய இந்த தகவலை உங்களால் முடிந்த வரை பரப்புங்கள்.
இந்த மாற்றம் குறித்த நடவடிக்கைகளை உங்கள் வீடு, கிராமம், நகரம் என தொடங்கி, நாடு முழுதும் பின்பற்ற உங்களால் முடிந்த உங்கள் பங்களிப்பை நல்குங்கள்!
என்னால் முடிந்த எனது பங்களிப்பை இந்த பதிப்பின் வாயிலாக அளித்துவிட்டேன், இனி உங்கள் கடமையே! பதிப்பை பரப்பி பாரதத்தை விழிப்படையச் செய்யுங்கள் அன்பு உறவுகளே!



Click it and Unblock the Notifications