சுயிங் கம் சாப்பிட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாமாம்..!

ஒவ்வொருவருக்கும் பல வித பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. சிலர் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பார், சிலர் நிறைய உணவுகள் உண்ணுவார், சிலர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பார்...அந்த வகையில் பலருக்கு பிடித்தமான ஒரு அன்றாட பழக்கம் இருக்கிறது. அதுதான் சுயிங் கம் சாப்பிடும் பழக்கம்.

Chewing Gum: Good or Bad?

பார்க்கும் போதெல்லாம் சுயிங் கம் ஒன்றை வாயில் போட்டு கொண்டு ஸ்டைலாக மென்று கொண்டிருப்பவர்கள் பலர். இது ஒரு வகையான ட்ரெண்டாக கூட மாறி வருகிறது. இந்த சுயிங் கம் சாப்பிடுவதால் பல்வேறு நலன்களும், சில வகையான தீமைகளும் இருக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயிங் கம்

சுயிங் கம்

இந்த சுயிங் கம் பல்வேறு வகையான நிறங்களிலும், ருசிகளிலும் இருக்கிறது. இது முதன்முதலில் ஃபின்லாந்தில் தயாரிக்கப்பட்டதாக வரலாறுகள் சொல்கிறது. மிகவும் மென்மையாக இருக்கும் இந்த சுயிங் கம் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இதில் முட்டை போன்றும் விட்டு குழந்தைகள் விளையாடுவார்கள்.

சுயிங் கம் ஆபத்தானதா..?

சுயிங் கம் ஆபத்தானதா..?

இந்த சுயிங் கம்மில் பல்வேறு வகையான மூல பொருட்கள் சேர்க்கப்டுகிறது. சில வகையான கம்பெனிகளில் உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடிய மூல பொருளை சேர்ப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நல்ல மூல பொருட்களை சேர்த்துள்ள சுயிங் கம் அவ்வளவும் ஆபத்தை விளைவிக்காதாம்.

ஞாபக சக்தியை கூட்டுமா..?

ஞாபக சக்தியை கூட்டுமா..?

சுயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுவதால் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது. குறிப்பாக இது மூளையின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, ஞாபக சக்தியை கூட்டுமாம். மறதி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது கிட்டத்தட்ட 24% முதல் 35% வரை உதவும் என ஆய்வுகள் சொல்கிறது.

பற்சிதைவை தடுக்கும்

பற்சிதைவை தடுக்கும்

பற்கள் சிதைவடையாமல் சுயிங் கம் உங்களை காப்பாற்றுகிறது. சுயிங் கம் மெல்லும்போது எச்சில் உருவாகி கிருமிகளை கொள்ளும். அத்துடன் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதையும் இது தடுக்குமாம். குறிப்பாக பற்களில் ஏற்பட கூடிய சொத்தைகளை ஏற்படாமல் சுயிங் கம் காக்கும்.

மன அழுத்தம் குறைய

மன அழுத்தம் குறைய

சுயிங் கம் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து விடுமாம். மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதால் இது மன அழுத்தம் பிரச்சினை உள்ளவர்களுக்கு நன்கு உதவும். முக்கியமாக ரத்த ஓட்டத்தை சமமாக பாய வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எடையை குறைக்க

எடையை குறைக்க

உடல் பருமனால் இன்று முக்கால் வாசி மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதனை சரி செய்ய இந்த அருமையான வழி இருக்கிறது. சுயிங் கம் சாப்பிடுவதால் அதிக பசியை குறைக்கிறது. எனவே, நிறைய உண்ண வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கபடும். மேலும், தின்பண்டம் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பும் இருக்காதாம்.

புகைக்கு டாட்...!

புகைக்கு டாட்...!

புகை பழத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். புகையை நிறுத்த முடியாமல் தவிப்பவர்க்ளுக்கு ஒரு நல்ல வழி உள்ளது. புகை பழக்கம் உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த சுயிங் கம் இருக்கிறது. இப்போதெல்லாம் பிரத்தியேகமாக புகை பழக்கத்திற்கென்றே ஒரு சிறப்பு சுயிங் கம் வந்துள்ளது. "நிகோடின் சுயிங்கம்" என்று அழைக்கப்படும் இந்த சுயிங் கம் புகை பழக்கத்தை நிறுத்த உதவும்.

உடலை இலகுவாக்கும் கம்..!

உடலை இலகுவாக்கும் கம்..!

சுயிங் கம் மெல்லுவதால் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு உடலை செம்மைப்படுத்தும். குறிப்பாக புதினா மற்றும் ஸ்பியர்மின்ட் சுவைகள் உடலில் அமிலத் தன்மையை சமமாக வைத்து கொள்ளும். மேலும், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் சுயிங் கம் தடுக்கும்.உடலை இலகுவாக வைத்து கொள்ள சுயிங் கம் நன்கு உதவும்.

தலைவலி

தலைவலி

சுயிங் கம் அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில தீமைகளும் உள்ளன. இதனை அதிகமாக மென்றால் தலை வலி ஏற்படும். சில சமயங்களில் இது எரிச்சலையும் தந்து விடும். எனவே, சுயிங் கம் அதிகமாக சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தாடை வலி

தாடை வலி

அதிக அளவில் சுயிங் கம் மென்றால் அது தாடையை பாதிக்கும். பல முறை தாடையை அசைத்து கொண்டே இருப்பதால், தாடையில் அதிக வலி ஏற்படும். மேலும் சில சமயங்களில் வயிற்று வலி, வயிற்று போக்கு போன்றவையும் இதனால் ஏற்படும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion