Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
செக்ஸ் பற்றிய இளைஞர்களின் ஆச்சர்யமான சந்தேகங்களும் நிபுணர்களின் தீர்வுகளும்
இங்கே செக்ஸ் வாழ்க்கைப் பற்றிய 19 வயது இளைஞர்களின் கேள்விகளும் அதற்கான நிபுணர்களின் பதில்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கலவி என்பது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்குமான அடிப்படையான விஷயம். அதாவது இனப்பெருக்கத்துக்கான செயல்பாடு தான் செக்ஸ் என்பது.

அது தன்னுடைய அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான ஒரு காரணியாக இருப்பதோடு, தனக்கும் மனது மற்றும் உடல் அளவில் இன்பத்தைக் கொடுக்கின்ற ஒரு விஷயமாகவே இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் பார்க்கின்றன.

கலவி வாழ்க்கை
கலவி வாழ்க்கை என்பது எல்லா உயிர்களுக்கும் இன்பம் தரக்கூடியது. ஆனால் அதில் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்காது. அதனால் நிறைய கேள்விகள் மனதுக்குள் வந்து போகும். ஆணுறுப்பை எப்படி பெரிதாக்குவது, அதன் நீளத்துக்கும் இன்பத்துக்குள் சம்பந்தம் இருக்கிறதா, பெண்களை எப்படி திருப்திப்படுத்துவது, இப்படி பல கேள்விகள் வந்து போகும். இப்படி ஒரு 19 வயது இளைஞனுக்கு மனதுக்குள் தோன்றிய கேள்விகளையும் அதற்கு நிபுணர்களின் பதில்களையும் இங்கே காண்போம்.

கேள்வி 1
ஆண்களுக்கு உடலுறவு முடித்தவுடன் (திருப்தி) அடைந்தவுடன் விந்து வெளியேறிவிடுகிறது. அதேபோல் பெண்களுக்கு விந்து வெளியேற்றம் நடக்குமா?
பெண்களுக்கும் உறவில் உச்சம் உண்டாகும். ஆனால் ஆண்களைப் போல் விந்து வெளியேற்றம் என்பது இருக்காது. கண்ணாடி போன்ற திரவம் அவர்கள் உச்சமடையும் போது பிறப்புறப்பில் வெளிப்படும். ஆனால் அது விந்து அல்ல.

கேள்வி 2
உடலுறவின் போது ஆண் முதலில் உச்சமடைந்து, உறுப்பை வெளியே எடுத்துவிட்டாலோ அல்லது பெண் முதலில் விந்து வருவதற்கு முன் உச்சமடைந்தாலோ கர்ப்பம் உண்டாகுமா?
இந்த கேள்வியில் சில புரிதல் இன்மை இருக்கிறது. அதாவது இருவரும் உடலுறவில் ஈடுபடுகிற போது, ஒரே நேரத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உச்சம் ஏற்பட்டு, ஆண் விந்தை உள்ளே செலுத்திவிட்டால் நிச்சயம் கர்ப்பம் தரிக்கும். கர்ப்பம் தரிப்பதை எந்த பாதுகாப்ப உபகரணமும் பயன்படுத்தாமலே உறுதிப்படுத்தி சொல்லிவிட முடியாது. அதனால் முடிந்தவரை கர்ப்பத்துக்கு திட்டமிட்டால், ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது.

கேள்வி 3
பெண் மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளும்போது உதிரப்போக்கிளால் உச்சம் தடைபடுமா?
நீங்கள் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்படுவதால் இந்த சந்தேகம் வந்திருக்கிறது. மாதவிடாயின் போது உண்டாகும் உதிரப் போக்கு கருப்பைக் குழாய் வழியாகத் தான் வெளியேறும் என்றாலும் பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ள மெல்லிய டிஸ்யூ தான் உச்சம் அடையும்போது வெளியேறும். அது மாதவிடாய் ரத்தத்தோடு ஒட்டாது. தனியே வழவழவென அந்த திரவம் இருக்கும்.

கேள்வி 4
விந்துவை உச்சம் உண்டாகும் முன்னே வெளியேற்றிவிட்டால் கர்ப்பத்தை தடுக்க முடியுமா?
அப்படியெல்லாம் முடியாது. எப்போது உறவின் வழி விந்து வெளியேறிவிட்டதோ அப்போதே கர்ப்பம் தரிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. அப்படி நிகழக் கூடாது என்று நினைத்தால் நிச்சயம் காண்டம் தான் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி 5
ஒருவேளை ஆணுறை பயன்படுத்தினால் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரை எடுத்துக் கொள்ளத் தேவையில்லையா?
நீங்கள் ஆணுறை சரியாகப் பயன்படுத்தினாலோ, அது இடையில் ஏதும் கிழிந்து விடாமல் இருந்தாலோ பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

கேள்வி 6
அவசரப் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைக்கும் காலை- இரவு என வழக்கமாக சாப்பிடும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்? பாதுகாப்பு முறையின்றி உடலுறவு கொள்ளும்போது, பெண்கள் மட்டும் இதைப் பயன்படுத்தினால் போதுமா?
எமர்ஜென்ஜி பில்ஸ் என்பது எதிர்பாராத வேளையில் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிற போது, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பின் 24 முதல் 72 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டிய மாத்திரை. இதுவே வழக்கமாக காலை, மாலையென பயன்படுத்துகிற கருத்தடை மாத்திரைகள் அடுத்த மாதவிடாய் சுழற்சி ஏற்படும் வரை பயன்படுத்த வேண்டும். இது கர்ப்பம் உண்டாகாமல் தடுக்குமே ஒழிய பாலியல் நோய்களைத் தடுக்காது.

கேள்வி 7
இயல்பாக இருக்கும் ஆண் குறியினை வைத்து உடலுறவு கொள்வதற்கும் சுன்னத் செய்யப்பட்ட (அதாவது முன்தோல் நீக்கப்பட்ட) ஆணுறுப்புடன் உறவில் ஈடுபடுவதற்கும் என்ன வித்தியாசம்? இன்பம் மாறுபடுமா?
இயல்பாக இருக்கும் ஆண் குறியிலேயே உறவு கொள்வதால் இன்பத்தில் உங்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உச்சமடைகிற போது, முன் தோல் நீக்கப்பட்ட ஆண்குறியாக இருந்தால் இன்பம் அதிகம் இருப்பது போல் உணர்வதற்கான காரணம் அந்த தோல் நீக்கப்பட்டதில் ஏராளமான நரம்பு முடிச்சுகள் அந்த இடத்தில் இருக்கும். அதை வேறு எந்த தோல் பகுதியிலும் தடையின்றி இருப்பதால் உணர்ச்சிகளும் இன்பமும் அதிகமாக இருப்பது போல் தோன்றும்.

கேள்வி 8
வாய்வழி உறவு மற்றும் குதவழி உறவின் மூலம் எய்ட்ஸ் வருமா?
எய்ட்ஸைப் பொருத்தவரையில், பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக உறவு கொள்வதிலிருந்து பரவுவதை விடவும் வாய்வழி உறவில் மிக்க குறைவு தான். ஆனால் பாதுகாப்பற்ற முறையில் குதவழி உறவில் ஈடுபட்டால் எய்ட்ஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நீங்கள் பிறப்புறுப்பு வழி உறவு கொள்வதைத் தவிர்த்துவிட்டு, குதவழியில் ஈடுபட நினைத்தால், ஆணுறை பயன்படுத்தி உறவு கொள்ளுங்கள்.

கேள்வி 9
உடலுறவில் மிக ஆரோக்கியமாக இருக்க வேறு ஏதாவது இருக்கிறதா?
உடலுறவு மற்றும் இன்பத்தைப் பொருத்தவரையில், உங்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய செக்ஸ் உறுப்பு என்பது ஆணுறுப்பு கிடையாது. உங்களுடைய மூளை தான் உங்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய செக்ஸ் உறுப்பு. அதனால் உடலுறவுக்கு முன்னும் உறவின் போதும், கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய உறுப்பு அளவின் நீளத்துக்கும் மற்ற விஷயங்களுக்கும் இன்பத்தின் அளவுக்கு சம்நபந்தம் இல்லை என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications