Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
குடற்புழு பிரச்சனையை போக்கும் எளிய வீட்டு மருத்துவம்!
குடற்புழுக்கள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க நீங்கள் தொடர்ந்து வீட்டில் கடைபிடிக்க வேண்டிய சில மருத்துவ முறைகள்
நம்முடைய உடலில் பலவிதமான புழுக்கள் தாக்கக்கூடும். அவற்றை நாம் கண்காணித்து அதனை போக்குவதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் அவை அதிகரித்து தொடர்ந்து நம் உடல் நலக் குறைபாட்டினை அதிகரிக்கும்.
குடலில் ஏற்படுகிற புழுக்களின் தாக்கம் என்பது ஒருவர் வாழுமிடம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றை எல்லாம் காரணமாக இருக்கிறது. குடலில் புழுக்கள் வந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும், அவற்றைத் தடுக்க என்னென்ன உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அறிகுறிகள் :
குடற்புழுக்கள் இருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து நாம் உணர்ந்தாலும் முறையான மருத்துவ பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொண்ட பிறகே மேற்கொண்டு சிகிச்சைகளை பெற வேண்டும். அடிவயிற்றில் வலி, வயிற்றுப் போக்கு,வாந்தி,வயிற்றில் கேஸ் தொல்லை, காரணமின்றி எடை குறைவு ஆகியவை ஏற்படும்.
சில நேரங்களில் மலம் வெளியேறும் போது ரத்தம் வெளியேறும். சிலருக்கு பல மாதங்கள் வரை எந்த அறிகுறியும் தெரியாமலும் இருக்கும்.

காரணம் :
குடலில் புழுக்கள் உருவாவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. நோய் தாக்கிய விலங்குகளை சாப்பிடுவது, அழுக்குத் தண்ணீர்,சுத்தமில்லாத இடங்களில் வசிப்பது ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு ஏனென்றால் அவர்கள் மணலில் காலணி கூட அணியாமல் விளையாடுவார் அதை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு ஆபத்து நேர்ந்திடும்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆணையின் படி வளரும் நாடுகளில் பத்து சதவீத மக்கள் குடற்புழு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பரிசோதனை :
மேற்சொன்ன அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தாலோ அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மலத்தை பரிசோதிப்பார்கள் அல்லது டேப் டெஸ் மேற்கொள்ளப்படும். அதிலும் சரியாக தெரியவில்லை எனில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சில தவிர்க்க முடியாத பட்சத்தில் எக்ஸ் ரே மற்றும் கம்ப்யூட்டட் டோமோகிராபி அல்லது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் மூலமாக துல்லியமாக நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்தை கண்டறியலாம்.
இந்த குடற்புழுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் உங்களுடைய உணவுப் பழக்கத்தை வாழும் இடத்தின் சுகாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

தேங்காய் :
தேங்காய் பால் எடுத்து அடிக்கடி குடிக்கலாம் இவை உங்களது குடலில் இருக்கிற புழுக்களை அழித்திடும். தேங்காயில் இருக்கிற ஆண்ட்டி பராசிடிக் துகள்கள் புழுக்களை அழிக்க வல்லது. காலையில் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்துச் சாப்பிடலாம். இது குடல் புழுக்களை அழிக்கும்.

பூண்டு :
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிற மிக முக்கியமான சமையல் பொருட்களில் பூண்டும் ஒன்று. பூண்டில் அதிகப்படியான சல்ஃபர் இருக்கிறது. அவற்றை உட்கொண்டால் அது ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி ஃபன்கல் துகள்களாக செயல்படும்.புழுக்களை அழிக்கவும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை தவிர்க்கவும் செய்திடும்.

பப்பாளி :
ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. பப்பாளிச் சாறில் லேடெக்ஸ் இருகிறது. அதோடு பப்பாளியில் பப்பைன் இருக்கிறது. குடற்புழுக்களை அழிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகிறது.
பாப்பாளிப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள். பப்பாளி ஜூஸும் குடிக்கலாம்.

பூசணி விதைகள் :
பூசணி விதைகளில் குகுர்பிடாசின் இருக்கிறது இவை குடலுக்கு வலுவூட்டும் அதோடு உடலில் தேங்கியிருக்கிற டாக்சின்களை அழிக்கும். பூசணி விதைகளை அப்படியே கடித்துச் சாப்பிடலாம் அப்படியில்லை என்றால் அதனை பொடியாக்கி தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். இது ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

மாதுளம் பழம் :
மாதுளம் பழத்தோல் அல்லது மாதுளம் பழ இலை மற்றும் மரப்பட்டைகளை நாம் பயன்படுத்துவதில்லை ஆனால் அதிலும் மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் அதிகப்படியான புனிசின் இருக்கிறது இதில் டாக்ஸிக் தன்மை அதிகம் கொண்டதாகும். இதைத் தொடர்ந்து உட்கொண்டால் குடற்புழுக்களை தவிர்க்கலாம்.

திராட்சை :
திராட்சைப் பழத்தில் அமிலத்தன்மை அதிகம். திராட்சை ஜூஸ் குடிக்கலாம். கடைகளில் திராட்சை விதைகளில் தயாரிக்கப்பட்ட சிரப் கிடைக்கிறது அவற்றையும் வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். ஆயுர்வேத மருந்து கடைகளில் அவை கிடைக்கும். குடற்புழுக்களுக்கு எதிராக அவை போராடும்.

மஞ்சள் :
அன்றாடம் பயன்படுத்தக்கூடியது உடனடி நிவாரணம் அளிக்கும் முதன்மையான பொருள் இந்த மஞ்சள். குடற்புழுக்களை அழிப்பதுடன் அது ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்தும் நம்மை காக்க உதவிடுகிறது. பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இது சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
இதைத் தவிர கிராம்பை பொடி செய்து அவற்றையும் இதில் கலந்து குடிக்கலாம். குடற்புழுக்களை போக்குவதில் அவை முக்கிய பங்காற்றுகிறது. அதோடு பிற்காலத்தில் பாதிப்பு ஏற்பாடாமல் தடுக்கவும் உதவிடுகிறது.

கேரட் :
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருக்கிறது. இவை குடற்புழுக்களை அழிப்பதில் முக்கியமான பங்காற்றுகிறது. இதிலிருக்கும் விட்டமின் ஏ குடலுக்கு வலுவூட்டுகிறது. அதோடு இதிலிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் ஜிங்க் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதனால் குடற்புழுக்கள் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.



Click it and Unblock the Notifications











