Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஆண்மை குறைவு முதல் உடல் இளமை வரை அனைத்திற்கும் உதவும் இறால்..!
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு வித நன்மைகள் இருக்கிறது. உணவு என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவையாக கருதப்படுகிறது. சில உணவுகளில் அதிக ஊட்டசத்துக்கள் இருக்கும். சிலவற்றில் மிக சில சத்துக்களே இருக்கும். ஆனால், ஒரு சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட பல்வேறு உணவுகளில் நாம் சாப்பிடும் கடல் சார்ந்த உணவும் ஒன்று.

மீன் முதல் சிறு கடற்பாசி வரை எல்லாவற்றிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இறாலில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பற்றியும், அவற்றினால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் இந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்வோம்.

கடற்தாயின் படைப்புகள்..!
கடலில் பல வகையான ஜீவ ராசிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை இன்னும் நாம் அறியாமலே இருந்து வருகின்றோம். கடல் சார்ந்த உணவுகள் அனைத்தும் அத்துணை ருசியாகவும், நலன்கள் தர கூடியதாகவும் இருக்குமாம். கடல் உணவுகளில் பல வகையான சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

இறாலின் நலன்கள்..!
இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. உலக அளவில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் இவை கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள்...
எண்ணற்ற நன்மைகளை இந்த இறால் கொண்டுள்ளது.
- மிகவும் குறைந்த அளவிலான கொழுப்புகள்
- அதிகமான புரதம்
- கலோரிகள்
- கால்சியம்
- பொட்டாசியம்
- செலினியம்
- விட்டமின் எ, ஈ
- பாஸ்பரஸ்

எதிர்ப்பு சக்தியை கூட்டும் இறால்..!
பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.

ஒல்லி-பெல்லி உடலுக்கு..!
பலரின் நீண்ட கால ஆசையாக இருப்பது, கச்சிதமான இடையுடன் கூடிய உடல் அமைப்பு வேண்டும் என்பதே. ஒருவருக்கு அழகான உடல் அமைப்பை இந்த இறால்கள் பெற்று தருகிறது. இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. எனவே இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.

ஆண்மை குறைவும் இறாலும்..!
சீனர்களின் மருத்துவத்தில் இந்த இறாலை ஆண்களின் பிரச்சினைகளை குணப்படுத்த பயன்படுத்துவார்களாம். குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ள ஆண்களுக்கு இறால் அற்புத மருந்தாகும். பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இல்லற வாழ்வில் நலம் பெற இவை செய்கிறது.

புற்றுநோயை கட்டுப்படுத்தும்..!
பொதுவாக ஒரு சில உணவு வகைகளே புற்றுநோயை தடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் கடல் உணவுகள் பலவகை நோய்களை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாம். இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். அத்துடன் எந்த வித நோய்களையும் அண்டாமல் காக்குமாம்.

ரத்த அழுத்தத்தை போக்கும்..!
உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்தால் சிறந்த மருந்தாக இந்த இறால் இருக்குமாம். இவை, உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்த முறையில் உதவுகிறது.

ஒமேகா 3
இறாலில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடலில் சீரான செயல்பாட்டை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மூளையின் செயல்திறனை இறால் மேம்படுத்துகிறது.

செலினியம் கொண்ட இறால்...!
இறாலில் உள்ள சில முக்கிய சத்துக்களில் இந்த செலினியமும் ஒன்று. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உற்பத்தியை நிகழ்த்த செலினியம் பெரிதும் உதவுகிறது. எனவே இவை உடலின் செல்களை சுறுசுறுப்பாக வைத்து இளமையான உடல் சூழலை ஏற்படுத்தி தருகிறது.

கிட்னியும் இறாலும்..!
கிட்னியில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இறால்கள் பெரிதும் உதவுகிறது. ரத்த நாளங்களை சீராக்கி கிட்னியின் ஏற்பட கூடிய கோளாறுகளை இவை தடுக்க கூடியதாம். அத்துடன் ரத்த ஓட்டத்தையும் உடலில் செம்மைப்படுத்துகிறதாம்.

ஜாக்கிரதை #1 #2
- என்னதான் இறாலில் கம்மியான கொழுப்புகள் இருந்தாலும், இவற்றில் அதிகமான கொலெஸ்ட்ரோல்கள் இருக்கிறது. எனவே இதய நோயாளிகள் இவற்றை எடுத்து கொள்ள வேண்டாம்.
- கடலின் சுத்த தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது, அதாவது இவற்றின் நச்சு தன்மை அதிகமாகி கொண்டே போகிறது. எனவே, நச்சு தன்மை கொண்ட இறால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஜாக்கிரதை #3 #4
- இறால்களின் தோல் விரைவில் செரிமானம் ஆகாது. எனவே இவை வயிற்று கோளாறுகளை ஏற்படுத்த கூடும். ஜெரிமான பிரச்சினை கொண்டவர்கள் இதனை தவிர்ப்பது நன்று.
- சிலருக்கு இறால் சாப்பிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்பட கூடும். அவர்கள் கண்டிப்பாக இதனை சாப்பிடாமல் இருந்து விடலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications