கோபம், சந்தோஷம் ரெண்டிலுமே இப்படி வெறித்தனமா சாப்பிடற ஆளா நீங்க?... அப்போ இத படிங்க...

By Vathimathi S
Subscribe to Boldsky

சாப்பாட்டு பிரியர்கள் பலர் இருப்பார்கள். இதில் அசைவம், சைவம் என்று பாகுபாடு கிடையாது. சாப்பாடு என்பது வெறும் உணவு மட்டுமின்றி சிலருக்கு அது உணர்வு பூர்வமான விஷயமாக மாறிவிடும். நாக்கு ருசியை இவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி

Emotional Eating

சாப்பிட சொல்லும். 3 வேலையும் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு உடலை அசைக்க படாதபாடு பாடுபடுவோரையும் நாம் பார்த்திருப்போம். இதன் விளைவு உடல் பருமன் உள்ளிட்ட பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதோடு 'சாப்பாட்டு ராமன்' என்று பலரது கேலி, கிண்டல்களுக்கும் ஆளாக நேரிடும். இதை தவிர்க்க இங்கே 15 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி பாருங்கள் நல்ல முடிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கவலைகளை உணருங்கள்

1. கவலைகளை உணருங்கள்

மன அழுத்த சூழ்நிலை உங்களது உண்மையான உணர்வுகளுக்கு தீர்வு இல்லாமல் அதிகப்படியாக ச £ப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திவிடும். அதனால் அதிகம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்றால் உங்களது கவலைகளை எதிர்கொள்ள தொடங்க வேண்டும். அது எந்த வகை கவலையாக இருந்தாலும் சரி. இதயமே வெடித்துவிடும் கவலையாக இருந்தாலும், நீண்ட கால ஆசையாக இருந்தாலும் சரி அதை

எதிர்கொண்டால் அதிகளவு உணவு சாப்பிடுவதை குறைந்துவிடும். அதோடு பிரச்னைகளையும் நிதானமாக கையாளலாம்.

2. உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

2. உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களை உணர்வுகளை நீங்களே புரிந்துகொண்டால் அதிக பிரச்னைகளை தவிர்த்துவிட முடியும். அதிக பிரச்னைகள் நீங்களே தவிர்க்காமல் இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். இது அதிக மன அழுத்தம், தாழ்வு மனப்பாண்மையாக மாறிவிடும். நீங்கள் குறைவான கவலை மற்றும் ஆசைகளோடு இருக்கும் சமயங்களில் உணவு பக்கம் உங்களது கவனத்தை திருப்பினால் நல்ல முறையில் இருக்கும். உங்களது கவலைகளை தடுக்கலாம். இந்த முறையில் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களில் இருந்து நீங்கள் சற்று மாறுபடலாம். மற்றவர்களை விட நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். இது உண்மை.

3. உண்மையிலேயே பசி இருக்கா?

3. உண்மையிலேயே பசி இருக்கா?

இதில் கொடுக்கப்பட்டுள்ள 2 விபரங்களை நேரம் எடுத்து நன்கு உணர்ந்து பின்னர் செயல்படுத்த வேண் டும். உங்களுக்கு பசி இருப்பதாக உணர்ந்தாலோ? அல்லது திடீரென ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலோ? ப்ரோகோலி சோதனையை மேற்கொள்ளுங்கள். ப்ரோக்கோலியை கற்பனை செய்து கொண்டு பசி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். இதில் தங்களுக்கு உடன்பாடான பதில் வந்தால் உண்மையிலேயே பசி என்று தான் அர்த்தம். இல்லை என்றால் உங்களுக்கு தேவையற்ற கலோரிகள் மீது ஆசை வந்துள்ளது என்று அர்த்தம்.

4. உங்களது தூண்டுதல்களை அங்கிகரியுங்கள்

4. உங்களது தூண்டுதல்களை அங்கிகரியுங்கள்

உப்பு மற்றும் இனிப்பு சார்ந்த உணவு பொருட்கள் மீது ஏற்படும் ஆசை தான் சாப்பாட்டு பிரியர்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. அதனால் உங்களது தூண்டுதல்களை அடையாளம் காணும் வகையில் அதை ஒரு நோட்டு புத்தகத்தில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக சினிமா பார்க்கும் போது, பணியில் இரு க்கும் போது, பொழுது போகாத சமயம், பணியில் சோகம் போன்ற சமயங்களில் சாப்பிட தோன்றும். அதனால் இத்தகைய சூழ்நிலைகளை பட்டியலிட்டு வைத்தால் அதிகம் சாப்பிடுவதை குறைக்கு உதவும்.

5. சாப்பாட்டை திட்டமிட்டு குறிப்பெடுங்கள்

5. சாப்பாட்டை திட்டமிட்டு குறிப்பெடுங்கள்

அடுத்த நாள் சாப்பாடு குறித்து முடிவெடுப்பது அவசியம். எந்த திட்டம் அல்லது இலக்கு என்றாலும் அதை எழுதிவைக்கும் வரை எதுவும் நடக்காது. ஒரு முறை எழுதி வைத்துவிட்டால் அது உங்களது மூளையில் பதிந்துவிடும். அதன் பின்னர் அந்த திட்டத்தை விரும்பி பின் தொடர்வீர்கள். இதை தொடங்க சிறிது தாமதம் ஏற்படும். ஆனால், தொடங்கிவிட்டால் சாப்பாடு குறித்து முடிவு எடுப்பதை நிச்சயம் நீங்கள் தொடர்வீர்கள். சாப்பாடு குறித்து திட்டமிடும் போது, எப்போது? என்ன உணவு? எவ்வளவு உணவு? சாப்பிட வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். இது உங்களை நீங்கள் ஏமாற்றிவிட்டு கூடுதல் கலோரிகளை சாப்பிட முயலும் போது மூளை நினைவுபடுத்தும்.

6. மளிகை பொருட்கள் வாங்க செல்லுங்கள்

6. மளிகை பொருட்கள் வாங்க செல்லுங்கள்

நீங்கள் உங்களது சாப்பாட்டிற்கு திட்டமிடும் போது அதற்கு தேவைப்படும் சில பொருட்களை வாங்க மளிகை கடைக்கு செல்ல நேரிடும். இந்த வாய்ப்பு மூலம் உங்களது சமையலறையை பிரம்மாண்ட முறையில் மாற்றி அமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வகையான ஜங்க் புட் வகைகளை தூக்கி எறியுங்கள் அல்லது தானம் செய்துவிடுங்கள். காய்கறி, பழம், ஆரோக்கிய கொழுப்பு, மெலிந்த புரதங்கள், மசாலா, மூலிகை, பால் போன்ற பொருட்களை வாங்கி வந்து ப்ரிட்ஜ் மற்றும் சமையலறை அலமாரிகளில் வைத்துவிடுங்கள். உங்களது வீட்டில் ஜங்க் புட் அல்லாத பிடித்த உணவு தயாராக இல்லை என்றால் அதன் மீதான ஆசை குறைய தொடங்கிவிடும்.

7. சமைத்து சாப்பிடுங்கள்

7. சமைத்து சாப்பிடுங்கள்

உங்களது உணவை நீங்கள் தான் சமைக்க வேண்டும். அல்லது ஆரோக்கிய உணவு வகைகளை சமை க்குமாறு உங்களது சமையல் பணியாளருக்கு அறிவுரை வழங்குங்கள். 4 முதல் 5 வகையான காய்கறி, இதயத்துக்கு ஆரோக்கியமான எண்ணெய், மூலிகை, மசாலா ஆகியவை உணவில் சேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வார இறுதி நாட்களில் காய்கறிகளுக்கு குட் பை சொல்லலாம். ஜிப் போட்டு பூட்ட க்கூடிய பைகளில் காய்கறிகளை அடைத்து வைத்து பின்னர் இதர நாட்களில் அதை பயன்படுத்த வேண்டும். அதிகாலை நேரங்களில் எழுந்து உங்களது உணவை தயார் செய்யுங்கள்.

8. தண்ணீர் பருகுங்கள்

8. தண்ணீர் பருகுங்கள்

சமயங்களில் தாகம் எடுக்கும் போது பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் அப்போது தாகம் மட்டுமே எடுப்பது உண்மை. அதனால் சம்மந்தம் இல்லாத நேரத்தில் பசி எடுப்பது போன்று உணர்ந்தால் சிறிதளவு தண்ணீர் குடியுங்கள். இது உங்களது தாகத்தை தடுப்பதோடு, கூடுதல் உணவு சாப்பிடுவதை தவிர்த்துவிடும். அதோடு தண்ணீர் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படும். மலச்சிக்கலை தடுக்கும். உள்ளூர நிகழ்வுகளை சீர்படுத்தும். ஹோமியோஸ்டேஸிஸை பராமரிக்கும். 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது பல ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். வளர்சிதை மாற்ற சதவீதத்தை ஊக்கப்படுத்தும்.

9. ஆசையை எதிர்கொள்ள தயாராகுங்கள்

9. ஆசையை எதிர்கொள்ள தயாராகுங்கள்

தேவையில்லாத நேரத்தில் எதையாச்சும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் இருப்பவர்கள் உடனடியாக இதை தங்களது ஆசைகளை நிறுத்துவது கடினம். அதனால் இதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கேரட், வெள்ளரி, கிரீன் டீ, கருப்ப காபி, 80 சதவீதம் அல்லது அதற்கு மேலான அடர் சாக்லேட், உப்பற்ற பாப்கார்ன், பிஸ்தானியன், தயிர், ஹம்மஸ், குழந்தை கீரை ஆகியற்வறை ஃப்ரிட்ஜ் அல்லது சமையலறையில் வைத்திருக்க வேண்டும். இனிப்பு அல்லது உப்பு நிறைந்த நொறுக்கு தீனிகள் மீது உங்களது நாட்டம் செல்லும் போது இவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதை சாப்பிடுவது என்பதும் ஒரு அளவு தான். அதிக ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

10. மெதுவாக சாப்பிடுங்கள்

10. மெதுவாக சாப்பிடுங்கள்

உணவை முறையாக மென்று சாப்பிட வேண்டும். சிறிய அளவு தட்டு மற்றும் கரண்டியை பயன்படுத்தி மெதுவாக சாப்பிட்டு உணவின் ருசியை அனுபவிக்க வேண்டும். மெதுவாக சாப்பிடும் போது விரைந்து திகட்டும் நிலையை உணர்வீர்கள். குறைவான கலோரிகளை சாப்பிடுவீர்கள். குறைந்த காற்றை விழுங் குவீர்கள். நீண்ட நேரம் சாப்பிட்ட பின்னர் பசி தெரியாது. 2 முதல் 3 மணி நேரம் வரை என்ற குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடலாம். இந்த முறையில் சாப்பிட்டால் அடுத்த முறை உணவு சாப்பிடும் வரை பசி உணர்வு இருக்காது.

11: தொடர் உடற்பயிற்சி

11: தொடர் உடற்பயிற்சி

உடல் பருமன் மற்றும் சாப்பாட்டை குறைக்கும் செயல்பாட்டில் உடற்பயிற்சி என்பது முக்கியமான விஷயமாகும். இது உங்களது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். உடலை சுத்தப்படுத்தவும் பயிற்சி உதவும். இதன் மூலம் நல்ல ஹார்மோன்கள் இருப்பதை உணர்வீர்கள். உடல் எடை குறையும். உணவு மீதான நாட்டம் குறையும். மன கவலை அடையும் போது கலோரிகள் நிறைந்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக வாக்கிங், ரன்னிங், நீச்சல், வெளிப்புற விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளலாம். தினமும் தியானம் மற்றும் ரிலாக்ஸூக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். இது உங்கள் மனதையும், உடலையும் பத்திரமாக வைத்துக் கொள்ளும்.

12. சீட் மீல் டே

12. சீட் மீல் டே

சீட் மீல் டே எனப்படும் உணவு கட்டுப்பாட்டை வாரம் ஒரு முறை பின்பற்ற வேண்டும். சிறந்த வாழ்க்கை முறைக்கு இது உதவும். இதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கடைபிடிக்க வேண்டும். தியானம், ஆரோக்கிய சாப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொண்டால் இந்த உணவு கட்டுப்பாடு தினம் என்பது சிரமமாக இருக்காது.

13. டிவி, லேப்டாப் வேண்டாம்

13. டிவி, லேப்டாப் வேண்டாம்

சாப்பிடும் போது உங்களது உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். அதனால் அனைத்து விதமான எல க்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்துவிட்டு உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு சாப்பீட்டீர்கள் என்பதை கணக்கிட முடியும். அதோடு உணவையும் ருசித்து சாப்பிட முடியும். சாப்பாட்டில் கவனம் இல்லை என்றால் குறைவாக சாப்பிட்டதாக எண்ணி அடுத்த சாப்பாட்டிற்கு தயாராகிவி டுவீர்கள்.

14. நல்ல ஓய்வு வேண்டும்

14. நல்ல ஓய்வு வேண்டும்

எதிர்மறையான சிந்தனைகளுக்கு நல்ல ஓய்வு மூலமே தீர்வு காண முடியும். வேலை சுமை மற்றும் ஏதேனும் கவலை இருந்தால் அதற்கு தூக்கம் மட்டுமே சிறந்த மருந்தாகும். 6 முதல் 7 மணி நேரம் வரை தூக்கம் இல்லை என்றால் எதிர்மறையான செயல்பாடுகள் இருக்கும். உடல் அசதியாக உணர்வீர்கள். விபரீதங்களுக்கும் வழி வகுத்துவிடும். ரிலாக்ஸாக இருக்க புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், புது மொழி கற்றுக் கொள்ளுதல் அல்லது புதிய திறன் வளர்த்தல், செல்லப் பிராணிகளுடன் காலார நடந்து செல்லுதல் அல்லது நண்பர்களுடன் உரையாடல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

15. வல்லுனர்களின் உதவியை பெறலாம்

15. வல்லுனர்களின் உதவியை பெறலாம்

மேற்கண்ட எந்த ஆலோசனைகளும் உதவி செய்யவில்லை என்றால் சிறந்த வல்லுனரை நாடிச் செல்வது அவசியம். அதிகப்படியாக சாப்பிடுவது என்பது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். உங்களது சுய மதிப்பீட்டை எதிர்மறையாக கணக்கிட செய்யும். இந்த சுய வெறுப்பு உங்களது வாழ்ககை வளர்ச்சியை தடுத்துவிடும். அதனால் வல்லுனருடன் கலந்து ஆலோசிப்பது உங்களது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்த உதவும். உணர்வு பூர்வமான ம £ற்றங்களால் ஏற்படுத்தும் உணவு பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

அதிகப்படியாக சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த 15 சிறந்த வழிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள். 2 வாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: health
  English summary

  15 Ways To Stop Emotional Eating

  If you are an emotional eater, food is more than “just food” for you. It’s a way of healing yourself.
  Story first published: Monday, May 7, 2018, 17:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more