நீங்கள் இப்படி சமைத்தால், உடலில் நச்சுக்கள் சேர்ந்திடும் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் சத்தான காய்கறிகளையே சமைக்கிறீர்கள் என்றாலும் கூட அதை எந்த முறையில் சமைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

ப்ரோகோலி நமக்கு ஆரோக்கியமான உணவு தான் என்றாலும் கூட, அதனை எண்ணெய்யில் போட்டு வறுத்து சாப்பிட்டால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த பகுதியில் நீங்கள் சமைக்க பயன்படுத்தும் மோசமான முறைகள் மற்றும் அவற்றால் உண்டாகும் தீமைகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொரித்தல்

பொரித்தல்

நீங்கள் என்ன தான் காரணம் கூறினாலும் சரி, எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கும் உணவானது, நிச்சயமாக ஆரோக்கியமான உணவாக இருக்க முடியாது. எண்ணெய் ஆனது அந்த உணவிற்கு கொழுப்பு சத்தை கொடுக்கிறது. இது இதய பாதிப்பை அதிகரிக்கிறது. அதிக கொதிநிலையானது உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சிவிடுகிறது.

ஃபேன் மூலம் வறுத்தல்

ஃபேன் மூலம் வறுத்தல்

ஃபேன் மூலம் வறுத்தல் என்பது உங்களது உடலில் நச்சுக்களை சேர்த்து விடுகிறது. ஃபேன் ஆனாது அதிக சூட்டை கொண்டதும் கூட.. இது உங்களது கொடு விளைவிக்கும்.

க்ரில்

க்ரில்

க்ரில் செய்வது ஆரோக்கியமான முறை தான் என்றாலும் கூட, நீங்கள் எந்த உணவை க்ரில் செய்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் க்ரில் செய்யப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உங்களுக்கு கேன்சர் அபாயத்தை கூட்டும். ஆனால் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை க்ரில் செய்து சாப்பிடலாம்.

புகையால் சமைப்பது

புகையால் சமைப்பது

புகைப்பது நமது உடலுக்கு தீங்கானது என்பது நமக்கு தெரியும். அதுபோல தான் புகைபோட்டு சமைப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகும். இது கேன்சரை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

மைக்ரோவேவ் சமையல்

மைக்ரோவேவ் சமையல்

பல ஆராய்ச்சிகள் மைக்ரோவேவ் ஓவன் ஆனது ரேடியேஷனை வெளியிடுகிறது என்று கூறுகின்றது. 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பானது ரேடியேஷனை கொண்டு சமைப்பது மற்றும் உணவை சூடு செய்வது மூளை கேன்சருக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

unhealthy ways of cooking foods

unhealthy ways of cooking foods
Story first published: Saturday, October 7, 2017, 11:06 [IST]