35 வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் செய்துக் கொள்ள வேண்டிய 7 பரிசோதனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் இருக்கும் மனைவி, மகள், அம்மா என அனைவரும் ஆண்களின் உடல் நலத்தின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஆண்களோ, அவர் தம்மீது என பெண்களின் உடல் நலத்தின் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பெரிய கேள்விக் குறி தான்.

Top 7 Tests Every Woman Above 35 Should Do

முக்கியமாக நடுவயதை நெருங்கும் பெண்கள் ஒருசில உடல்நல பரிசோதனைகளை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடுப்பு மற்றும் பேப் ஸ்மியர்!

இடுப்பு மற்றும் பேப் ஸ்மியர்!

முப்பது வயதை கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் இடுப்பு மற்றும் பேப் ஸ்மியர் (PAP SMEAR) பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இது ஒரு முழுமையான இடுப்பு பகுதி பரிசோதனை ஆகும்.

கருப்பை புற்றுநோய் இப்போது இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இதற்கான மருத்துவம் அறிமுகமாகியுள்ளது. குறைந்தபட்சம் மூன்று வருட சிகிச்சை எடுத்துக் கொண்டால் தான் தீர்வு காண முடியும்.

மார்பக பரிசோதனை!

மார்பக பரிசோதனை!

புற்றுநோய் மரணங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோய் வகை மார்பக புற்றுநோய். நாற்பது வயதை கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் மார்பக பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக பரிசோதனை அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை!

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை!

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST), 35 வயதில் இருந்து பெண்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு ஏற்படலாம். ஏறத்தாழ 80% பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெருமளவில் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பெண்கள் எலும்புகளின் வலிமை குறித்து பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தைராய்டு பரிசோதனை!

தைராய்டு பரிசோதனை!

பெரும்பாலான பெண்கள் திடீர் உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், நகங்கள் வலுவிழந்து போவது போன்றவை குறித்து தங்கள் கேள்விகளை முன் வைக்கின்றனர். இதற்கு தைராய்டு பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம்.

நீரிழிவு பரிசோதனை!

நீரிழிவு பரிசோதனை!

இரத்த சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயம். இன்று யாருக்கு நீரிழவு நோய் பாதிப்பு வரும் என யாருக்கும் தெரியாது. இன்று பெண்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகப்பெரிய கருவியாக வளர்ந்து நிற்கிறது நீரிழிவு.

லிப்பிட் பரிசோதனை!

லிப்பிட் பரிசோதனை!

லிப்பிட் பரிசோதனை (LIPID PROFILE TEST) என்பது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் கண்டறியும் பரிசோதனை ஆகும். கொலஸ்ட்ரால் காரணத்தால் இதயம், இரத்த நாளங்கள் மற்றும் மூளை பெருமளவு பாதிக்கப்படுகிறது.

வைட்டமின் டி பரிசோதனை!

வைட்டமின் டி பரிசோதனை!

அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் டி. இது தான் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும், நீரிழிவு, இதய நோய், சில வகை புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் வைட்டமின் டி துணை புரிகிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது வைட்டமின் டி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: women, பெண்கள்
English summary

Top 7 Tests Every Woman Above 35 Should Do

Top 7 Tests Every Woman Above 35 Should Do
Please Wait while comments are loading...
Subscribe Newsletter