இந்த இரண்டும் நீரிழிவு நோயை இரட்டிப்பாக்கும் என தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

ஜீசியான சிக்கன், பட்டர் தடவிய மட்டன், அரைத்து போட்ட மசாலாக்கள், மறக்க முடியாத சுவை இவை நாவில் எச்சில் ஊறச்செய்கிறதா? இறைச்சியில் உள்ள அதிக கலோரிகள் உடலில் சூட்டை ஏற்றி இதயம் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது போன்ற செய்திகள், உங்களை ஒரு அசைவ உணவகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கிறதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிடித்த உணவுகளை சாப்பிட முடியவில்லையா?

பிடித்த உணவுகளை சாப்பிட முடியவில்லையா?

நமக்கு பிடித்த உணவுகளில் ஏராளமானவை ஆரோக்கியத்திற்கு சிறந்தவையல்ல என்று கூறுவது நியாமற்றது என தோன்றுகிறதா? உதாரணமாக, வெண்ணெய் அல்லது மாமிசத்தை எடுத்துக்கொள்வோம். வெண்ணெய் மற்றும் மாமிசம் பொருத்தமான மசாலாக்களுடன் இணைந்து எவ்வளவு சுவை தருகிறது. ஆனால் சுகாதார வல்லுனர்கள் இவற்றை அதிகமாக சாப்பிடுவதற்கு எதிராக இருக்கிறார்கள்.

இதயத்திற்கு கெடு விளைவிக்கும்

இதயத்திற்கு கெடு விளைவிக்கும்

நாம் என்ன தான் மாமிசம் மற்றும் வெண்ணெய் போன்றவை உடல் நலத்திற்கு கெடுவிளைவிக்குமா இல்லையா என பட்டிமன்றமே நடத்தினாலும், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இது கண்டிப்பாக இதயத்திற்கு கெடு விளைவிக்கும். மேலும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.

வெண்ணெய்யில் 51% கொழுப்பு அடங்கியுள்ளது. எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். எதை சாப்பிட்டாலும் சிறிதளவு மட்டுமே சாப்பிட வேண்டும். நாம் வாழ்கின்ற இந்த சூழலில், நாம் எதை சாப்பிடுகிறோம், அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாத ஒன்று. எனவே உணவுப்பழக்கங்களில் கவனம் தேவை.

சக்கரைநோய் இரண்டு மடங்காகுமா?

சக்கரைநோய் இரண்டு மடங்காகுமா?

வெண்ணெய் ஒரு கொழுப்பு ஆதாரம் என்பதால், அது பல வியாதிகளுக்கு காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் பொது சுகாதார சானின் ஸ்கூலை சேர்ந்த ஹார்வர்ட் டி.ஹெச் என்பவரது ஆய்வில், நாளுக்கு 12 கிராம் வெண்ணெய் சாப்பிடும் நபர்களுக்கு இரு மடங்கு அதிகமாக நீரிழிவு வளரும் ஆபத்து இருந்தது கண்டறியப்பட்டது.

வெண்ணெய்யை தீங்கு விளைவிக்க செய்வது எது?

வெண்ணெய்யை தீங்கு விளைவிக்க செய்வது எது?

வெண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா இல்லையா என்ற விவாதங்கள் தொடர்ந்தாலும், அதைவிட விட நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, வெண்ணெய் ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள். வீட்டில் வெண்ணெய் தயிர் ஆடை அல்லது பாலாடையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கடைகளில் கிடைக்கும் வெண்ணெய் பாலிருந்து எடுக்கப்படுகிறது. பின்னர் சிறிது நாட்கள் கழிந்து அதில் உப்பு சேர்க்கப்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாகும்

டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாகும்

முதன்மை எழுத்தாளர் மார்தா குஷ்சேர், என்பவர், வெண்ணெய் அல்லது சீஸ் ஆகியவற்றில் உள்ள விலங்கு கொழுப்புகளை உண்பதால், டைப் 2 நீரிழிவு நோயை அதிகமாகும் என கூறுகிறார். மேலும், யோகார்ட்டுடன் சேர்த்து உண்ணும் போது பாதிப்பு குறைகிறது எனவும் கூறுகிறார். இது போன்ற உணவு கொழுப்புகள் கார்டிவாஸ்குலர் இருதய நோய்க்கு காரணமாக அமைகின்றன.

ஆய்வு

ஆய்வு

ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 3,349 பேர், சக்கரை நோயின் ஆரம்ப நிலையிலும், இருதய நோயுடனும் இருந்தனர். சரியாக நான்கரை ஆண்டுகள் கழித்து அந்த ஆய்வில் கலந்து கொண்ட 266 பேர் சக்கரை நோய்க்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.

தாவர அடிப்படையிலான உணவின் நன்மைகள்

தாவர அடிப்படையிலான உணவின் நன்மைகள்

விலங்குகளின் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளில் இருந்து தப்பிக்க தாவர உணவுகளை உண்ணுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கிய வல்லுனர்கள் எப்போதும் மாமிசம், வெண்ணை போன்றவற்றை தவிர்த்து, தாவர உணவுகளை உண்ண மட்டுமே பரிந்துரை செய்கின்றனர்.

ஆபத்து குறைவு

ஆபத்து குறைவு

பருப்பு வகைகள், முழு தானிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் நிறைந்திருக்கும் தாவர அடிப்படையிலான உணவுகள், சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற விலங்கு சார்ந்த உணவுகளைவிட ஆரோக்கியமானது.

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

கூடுதலாக, ஒரு பழங்கால உணவு முறையான, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், குறைந்த புரதங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவை நாள்பட்ட நீரிழிவு நோய்களைத் தடுப்பதற்கு, குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் குறைய

கீரை, செலரி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள், நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்த காய்கறிகள் போன்றவை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Risks Of Having Meat and Chicken

here are the some Risks Of Having Meat and Chicken
Story first published: Friday, May 12, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter