பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் சமநிலை இழப்பு குறித்த அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மத்தியில் ஹார்மோன் சமநிலை இழப்பு உண்டானால் அவர்களது குணாதிசயங்களில் திடீரென பல மாற்றங்கள் காணப்படும். தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் இருக்காது. தேவையின்றி அடிக்கடி கோபம் கொள்வார்கள், திட்டுவார்கள். யாரிடமும் சரியாக பேசமாட்டார்கள்.

உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!

உடல்நல குறைபாடுகள் என்றால் கண்கூட பார்த்தே கண்டறியலாம். ஆனால், ஹார்மோன் சமநிலை இழப்பை எதை வைத்து கண்டறிவது? என்ற கேள்வி எழுகிறதா. உடலில் எந்தவொரு நேர்மறை, எதிர்மறை மாற்றம் உண்டானாலும், நமது உடலே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

பெண்ணுறுப்பு விரிவடைவதை பற்றிய உண்மை தகவல்கள்!!!

அந்த அறிகுறிகளை வைத்து, நமது உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என எளிதாக கண்டறியலாம். அந்த வகையில், பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் சமநிலை இழப்பு குறித்த அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியர்வை

வியர்வை

பெரிதாக வேலை செய்யாமலே அதிகமாக வியர்ப்பது. முக்கியமாக இரவில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இது ஹார்மோன் சமநிலை இழப்பின் அறிகுறியாகும். ஏறத்தாழ ஹார்மோன் சமநிலை இழப்பு ஏற்படும் பெண்களுக்கு 75% இந்த அறிகுறி தென்படுகிறது.

ஞாபகம்

ஞாபகம்

பெண்களிடம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அளவு குறையும் போது, அவர்களுக்கு இந்த மறதி உண்டாகும். கையிலேயே சீப்பை வைத்துக் கொண்டு, எங்கே வைத்தேன் என தேடுவார்கள். இதனால், அவர்களது மன அழுத்தம் அதிகரிக்கிறது.

தாம்பத்திய உணர்வு

தாம்பத்திய உணர்வு

பெண்களிடம் ஹார்மோன் சமநிலை இழப்பு உண்டானால், அவர்களால் உடலுறவில் சரிவர ஈடுபட முடியாது. அவர்களுக்கு அந்த உணர்வு மிக குறைவாக இருக்கும், நாட்டமே செலுத்த மாட்டார்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

சரியாக தூக்கம் வராது, நள்ளிரவில் விழித்துக் கொள்வார்கள். உடல் அசதியாக இருப்பினும் கூட நல்ல உறக்கம் வராமல் பாடாய்ப்படுத்தும்.

வறட்சி உணர்வு

வறட்சி உணர்வு

பெண்ணுறுப்பு வறட்சியாக உணர்வார்கள். இதனால் உறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக உணர்வார்கள். இந்த அறிகுறி தான் பெண்கள் அதிகம் பயப்படும் அறிகுறி.

மனநிலை

மனநிலை

மனநிலை சரியாக இருக்காது. எப்போதும் மந்தமான மன நிலையிலேயே இருப்பார்கள். யாரிடமும் சரிவர பேசமாட்டார்கள். தனிமையிலேயே இருப்பார்கள். தேவையில்லாமல் கோபம் அதிகரிக்கும்.

மயக்கம்

மயக்கம்

சரியாக உறக்கம் இல்லாததால், அடிக்கடி மயக்கம் வரும். சில சமயம் காரணமே இன்றி மயக்க நிலையில் இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன் சமநிலை இழப்பு தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முடி உதிர்வு

முடி உதிர்வு

வயதாக, வயதாக பெண்களுக்கு முடி உதிர்வு அதிகரிக்கும். ஆனால், அளவுக்கு மீறி கூந்தல் உதிர்வு அதிகரிப்பதற்கு ஹார்மோன் சமநிலை இழப்பு தான் காரணம்.

தலைவலி

தலைவலி

ஹார்மோன் சமநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் போது, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் காரணத்தால் மூளையில் உண்டாகும் தாக்கத்தால் தலைவலி அடிக்கடி ஏற்படும்.

முகப்பரு

முகப்பரு

பெண்களின் திடீரென 30-40 வயதில் கூட முகப்பரு வரும். இதை வைத்து, அவர்களது உடலில் ஹார்மோன் சமநிலை இழப்பு உண்டாகி இருக்கிறது என அறிந்துக் கொள்ளலாம்.

செரிமான கோளாறுகள்

செரிமான கோளாறுகள்

சில ஹார்மோன்களில் சமநிலை இழப்பு ஏற்படும் போது குமட்டல், செரிமான கோளாறு, வாயுத்தொல்லை போன்றவை கூட அதிகரிக்குமாம். இதை வைத்தும் கூட பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகி இருப்பதை கண்டறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Of Hormone Imbalance You Should Stop Ignoring

Signs Of Hormone Imbalance You Should Stop Ignoring, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter