ஆண்கள் ஏன் ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணியக் கூடாது?

Posted By:
Subscribe to Boldsky

ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. முன்பு, அக்கம், பக்கம் கடைகளுக்கு சென்று வர, வீட்டில் பாத்ரூம் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி வரப்பட்ட ஃபிலிப் ஃப்லாப் காலணிகள், இன்று ஆபிஸிற்கு அணிந்து செல்லும் அளவிற்கு பெருகிவிட்டது.

ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாய் இருக்கும் பிரச்சனைகள்!

பல வண்ணங்கள், ஸ்டைல், டிஸைன் என கிடைப்பதால், ஆண், பெண் இருவரும் கேசுவல் உடைகளுக்கும் ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இது குதிகால் மற்றும் கால் ஆரோக்கியத்திற்கு விபரீதமாக அமைகிறது என பாத நோய் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிலிப் ஃப்லாப் பயன்பாடு:

ஃபிலிப் ஃப்லாப் பயன்பாடு:

பாத நோய் மருத்துவ நிபுணர்களான போடியாத்ரிஸ்ட் (podiatrists) ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணிவது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என தெரிவித்துள்ளனர்.

பீச், நீச்சல்குளம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது தற்காலிகமாக அணியலாமே தவிர, நாள் முழுக்க அல்லது தினசரி ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணிவது தவறு என எச்சரிக்கின்றனர்.

குதிகால் பாதிப்பு:

குதிகால் பாதிப்பு:

ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் நமது கால் பாதத்தின் அடிப்பகுதியில் இருக்கும் ஆர்ச் வடிவிலான வளைவில் அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இதனால், குதிகால் பகுதி திசுப்படலத்தில் பிரச்சனைகள் உண்டாகமால்.

அமெரிக்க பாத நோய் நிபுணர்:

அமெரிக்க பாத நோய் நிபுணர்:

அமெரிக்கன் பாத நோய் மருத்துவ அகாடமியின் தலைவர் மருத்துவர் அலெக்ஸ் என்பவர், ஃபிலிப் ஃப்லாப் போன்ற தட்டையான காலணிகள் அணிவது கால்களின் நலனுக்கு உகந்தது அல்ல என அறிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து இதை பயன்படுத்துவது கால்களுக்கு அபாயமாக அமையலாம் என்றும் கூறியுள்ளார்.

அழுத்தம்:

அழுத்தம்:

ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் ஒருபோதும் கால் விரல்களுக்கு நல்ல பிடிப்பும், குதிகாலுக்கு சீரான நிலையம் தருவது இடையாது. குதிகால் பிடிப்பின்றி, சீரான நிலையின்றி இருப்பதால், கால் விரல்களுக்கான அழுத்தம் அதிகரிக்கிறது.

ஆரோக்கிய பாதிப்புகள்:

ஆரோக்கிய பாதிப்புகள்:

மேலும், தொடர்ந்து ஃபிலிப் ஃப்லாப் காலணிகள் அணிவதால், தசைநாண் அழற்சி, கால் குறைபாடுகள், கால் வலி, அழுத்தம் அதிகரித்தல், குதிகால் வலி, நகத்தில் பிரச்சனைகள் மற்றும் கால் பகுதியில் இருக்கும் மிருதுவான சருமத்தில் கூட பிரச்சனைகள் உண்டாகலாம் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men Shouldn’t Wear Flip-Flops, But Not Because Feet Are Gross

Men Shouldn’t Wear Flip-Flops, But Not Because Feet Are Gross, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter