Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
ஹிட்லருக்கு ஏற்பட்டிருந்த மைக்ரோபெனிஸ் பிரச்சனை என்றால் என்ன?
ஹிட்லர் உலகையே மிரட்டிய மாபெரும் சர்வாதிகாரி. முதலாம் மற்றும் இரண்டாம் உலக போரில் முக்கிய பங்குவகித்தவர். லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த மூர்க்கத்தனமாக மனிதர். ஆனால், இவருக்கு புகை, குடி என எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. எந்த பெண்ணுக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்தது இல்லை.
ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!
மனதளவில் மனிதன் அரக்கத்தனமாக இருந்தாலும், உடலளவில் மிகவும் சுத்தமான மனிதனாக கருதப்பட்டு வந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்டிருந்த ஆண்மை சார்ந்த பிரச்சனை தான் இதற்கான காரணம் என சமீபத்தில் வெளிவந்த ஓர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது உலக நாளேடுகளில் முதன்மை செய்தியாக இது பரவி வருகிறது.
அப்படி ஹிட்லருக்கு ஏற்பட்ட அந்த ஆண்மை சார்ந்த பிரச்சனை என்ன?

மைக்ரோ பெனிஸ் அபாயம் என்ன?
மைக்ரோபெனிஸ் என்பது மூன்று அங்குலத்திற்கும் குறைவான அளவு ஆணுறுப்பு இருப்பதாகும். இந்த பிரச்சனையின் காரணமாக ஆண்களுக்கு மிக அதிகமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை விட்டு வெளிவருவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

ஹிட்லரின் மருத்துவ குறிப்புகள்
சமீபத்திய புதிய புத்தகம் ஒன்றில் ஹிட்லரின் மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில், அவருக்கு ஆண்மை சார்ந்த எந்தெந்த பிரச்சனை ஏற்பட்டிருந்தது என அவருக்கு மருத்துவம் அளித்த மருத்துவர் கூறிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஹிட்லருக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகள்
பொதுவாக ஆண்களுக்கு இரண்டு விதைகள் இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு ஒரு விதை தான் இருந்துள்ளது. மேலும் ஆண்குறி துளைப் பிறழ்வு (Hypospadias) எனும் பிரச்சனையும் இருந்துள்ளது.

ஆண்குறி துளைப் பிறழ்வு
இந்த ஆண்குறி துளைப் பிறழ்வு (Hypospadias) பிரச்சனை தான் மைக்ரோபெனிஸ் பாதிப்பு ஏற்பாடுவதற்கான காரணியாக இருந்துள்ளது.

ஹிட்லரின் கடைசி நாட்கள்
ஹிட்லரின் கடைசி நாட்கள், நிமிடத்திற்கு, நிமிடம் என்ற பெயரில் வெளிவந்த அந்த புத்தகத்தில் தான் ஹிட்லரின் மருத்துவ குறிப்புகள் வெளியாகியுள்ளது.

ஹிட்லரின் கடைசி நாட்கள்
ஹிட்லருக்கு ஒரு விதை தான் இருந்தது என முதலில் இருந்தே ஒரு கருத்து நிலவி வந்தாலும், அவருக்கு சிறிய ஆணுறுப்பு பிரச்சனையும் இருந்துள்ளது என்பது இப்போது அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.

உடலுறவில் நாட்டம் இல்லாதவர்
ஹிட்லருக்கு மிகவும் நெருங்கி பழகியவர்கள் அவர் எந்த பெண்ணுடனும் உடலுறவில் ஈடுபட்டது இல்லை என்றும், அவருக்கு அதில் நாட்டமும் வந்தது இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரகசிய சிகிச்சை
ஹிட்லரின் மருத்துவர் இதற்கு தீர்வுக் காண ஹிட்லருக்கு உடலுறவு ஹார்மோனை ஊக்குவிக்க ஆம்பெடமைன்கள் மற்றும் கோகோயின் போன்றவற்றை அளித்துள்ளார்.

0.6%
உலகில் உள்ள ஆண்களில் 0.6% ஆண்களுக்கு இந்த மைக்ரோபெனிஸ் எனும் சிறிய ஆணுறுப்பு பிரச்சனை இருக்கிறது.

இப்போது ஏன்?
அனால், அவர் இறந்து இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மருத்துவ தகவல்கள் அடங்கிய புத்தகத்தை இப்போது வெளியிட்டுள்ளது ஏன் என்றும், அவரது மூர்க்கத்தனமாக குணத்திற்கும் இதற்கும் முடிச்சி போடுவது தவறு மற்றும் முறையற்ற செயல் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
