Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
டான்ஸிலிடிஸைக் கட்டுப்படுத்தும் வெங்காயச் சாறு!
டான்ஸிலிடிஸ் என்பது சிறு நாக்கின் பக்கவாட்டில் வரும் ஒரு தொற்று. பெரும்பாலும் சுத்தமில்லாத நீரினை குடித்தால், அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் இந்த டான்ஸிலிடிஸ் ஏற்படும்.
அது போல அதிக இனிப்புகளை உண்டாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும்.நமது தொண்டைக்கு மேலிருக்கும் அடி நாக்கு மிகவும் மென்மையான பகுதியாகும். எனவே கிருமிகள் எளிதில் அங்கு சென்றடையும்.

அவை அதிகமாக பெருகி, பாதிப்பினை உண்டாக்கும். அதைதான் டான்ஸிலிடிஸ் என்று கூறுவர். இது சிலருக்கு வாரக்கணக்கிலிருந்து, மாதங்கள் வரை கூட நீடிக்கும்.
இந்த டான்ஸிலிடிஸ்க்கு உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தீர்வளிக்க வில்லையென்றால், வெங்காயச் சாறில் கொப்பளித்தால், எளிதில் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.
வெங்காயத்தில் கிருமியை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவற்றில் காரத்தன்மை கிருமிகளை அழிக்கின்றன. வீக்கத்தினை குறைந்து டான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை அளிக்கும்.
தேவையானவை :
வெங்காயம் - 1
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
வெங்காயத்தை அரைத்து அதன் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளியுங்கள். தினமும் இருவேளை இப்படி செய்தால், எளிதில் வீக்கம் குறைந்து நிவாரணம் தரும்.
ஆனால் உங்களுக்கு டான்ஸிலிடிஸ் மிக தீவிரமான நிலையில் இருந்தால் இதனை எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
அதேப்போல் வெங்காயச் சாறு உங்களுக்கு அசௌகரியம் கொடுத்ததென்றால், குறைந்த அளவு சாறினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளியுங்கள். இது வெங்காயத்தின் அடர்த்தியை குறைத்தாலும், பலன் அளிக்கும். கிருமிகளை அழிக்கும்.
அதோடு சூடான நீரினையும் வெதுவெதுப்பான உணவுகளையுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பின்பற்றினால், டான்சிலிடிஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் டான்ஸிலிடிஸ் கட்டுப்பட்டதும் உடனே இனிப்பு, கார வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மீண்டும் கிருமிகள் தொற்றிக் கொள்ள வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



