For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேரியா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்!

|

ஏப்ரல் 25, இன்று உலக மலேரியா தினம். உலகம் முழுவதும் 106 நாடுகளில் வாழும் 330 கோடி மக்களுக்கு மலேரியா தாக்கம் ஏற்படும் அபாயத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மலேரியா தாக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

டெங்கு, மலேரியாவை தவிர கொசுவால் பரவும் தீவிரமான நோய்கள்!

இதில் வருத்தத்திற்குரிய தகவல் என்னவெனில், மலேரியா தாக்கத்தால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். ஏறத்தாழ உலக மக்கள் தொகையில் 40% மக்களை அச்சுறுத்தும் நோயாக இருந்து வரும் மலேரியா குறித்த விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்பதற்காக தான் இந்த உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

சில புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவரும் தகவல் என்னவெனில், மலேரியாவில் தாக்கத்தால் மட்டுமே ஏறத்தாழ வருடத்திற்கு 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது வருத்தத்திற்குரியது.

தகவல் #2

தகவல் #2

மலேரியா தாக்கம் உண்டாகியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிகுறி காய்ச்சல். மேலும், தலைவலி, உடல் அதிகமாக சில்லென இருப்பது போன்றவையும் கூட மலேரியாவிற்கான அறிகுறிகள் தான்.

தகவல் #3

தகவல் #3

பெரும்பாலும் மலேரியா திடீர் காலநிலை மாற்றத்தின் போது தான் அதிகமாக பரவுகிறது.

தகவல் #4

தகவல் #4

சில சமயங்களில் மலேரியா தாக்கம் உண்டானே ஓரிரு நாட்களில் இறந்தவர்களும் உண்டு. எனவே, கால நிலை மாற்றங்கள் மற்றும் ஊரில் மலேரியா தாக்கம் அதிகரிக்கும் போது உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தகவல் #5

தகவல் #5

கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா தாக்கம் உண்டாவது, கருவில் வளரும் சிசுவையும் தாக்க வாய்ப்புகள் உண்டு. இந்த தாகத்தால் குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்கலாம்.

தகவல் #6

தகவல் #6

மலேரியா தொற்றுநோய் அல்ல. பாதித்த நபரை தொட்டு பேசுவதால் மலேரியா பரவுவதில்லை.

தகவல் #7

தகவல் #7

கொசு வலை, வீட்டில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மலேரியா பரவாமல் பாதுகாக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Malaria

World Malaria Day: Facts About Malaria, take a look on here.
Desktop Bottom Promotion