Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
மது அருந்தினால் முகப்பரு வரும் என்பது உண்மையா?
இன்றைய காலத்தில் மது அருந்துவது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அதிலும் தற்போது மன வேதனை, மன அழுத்தம், டென்சன், போர் அடித்தால் என எதற்கு எடுத்தாலும், பொழுதைப் போக்குவதற்கு மது அருத்துவோர் ஏராளம். நீங்களும் அப்படி தானா?
பொதுவாக மதுவை அளவாக அருந்தினால் ஆபத்து இல்லை. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக பருகினால், நினைக்க முடியாத அளவில் ஆபத்தை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் மது அருந்தினால், சிலருக்கு மறுநாள் முகத்தில் பருக்கள் வரும்.
உண்மையிலேயே முகத்தில் பருக்கள் வருவதற்கு மது காரணமாக இருக்குமா? இல்லை அது வெறும் பொய் தானா? என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மது மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
பல ஆய்வுகளில் மதுவிற்கும், முகப்பருவிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் ஆல்கஹால் பருகிய பின் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக முகப்பருவிற்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம்
தொடர்ச்சியான மது அருந்தி வருபவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட முடியாத அளவில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.

மது மற்றும் கல்லீரல் பாதிப்பு
பலருக்கும் அதிகப்படியான அளவில் மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பது தெரியும். உடலில் ஹார்மோன்களின் சீரான இயக்கத்தில் கல்லீரல் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் கல்லீரல் தான் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. அப்படிப்பட்ட கல்லீரல் மது அருந்தி பலவீனமாகிவிட்டால், டாக்ஸின்கள் உடலிலேயே தங்கி, அதன் காரணமாக முகப்பருக்கள் வரும்.

மது மற்றும் ஈஸ்ட்
மதுவில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் பொருள் அதிகம் உள்ளது. எப்போது ஒருவர் அதிகப்படியான அளவில் ஈஸ்ட் அல்லது சர்க்கரையை எடுக்கிறார்களோ, அப்போது இரத்தத்தில் ஈஸ்ட் தேக்கம் அதிகரித்து, அதனால் பருக்கள் வரும். பீர், காக்டைல் போன்றவற்றில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மது மற்றும் மன அழுத்தம்
பல ஆண்களும், பெண்களும் மன வேதனையாக இருக்கும் போது மது அருந்துவார்கள். சாதாரணமாக மன அழுத்தத்தின் போது ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், அத்துடன் மதுவை அதிகம் அருந்தினால், பருக்கள் வளரும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க மது அருந்துவது என்பது தவறான எண்ணமாகும்.

மது மற்றும் வறுத்த உணவுகள்
பொதுவாக மது அருந்தும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளைத் தான் பலரும் சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி மதுவுடன், எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் சருமத்தில் எண்ணெயின் உற்பத்தி அதிகரித்து, அதனால் பருக்கள் வர ஆரம்பிக்கும். எனவே எப்போது மதுவிற்கு சைடு டிஷ்ஷாக எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
