Latest Updates
-
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்?
ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!
சீனர்கள் என்றாலே உணவை தாறுமாறாக சமைப்பவர்கள், உண்பவர்கள். நாய்களை துடிக்க, துடிக்க அரக்கத்தனமான முறையில் அரை உயிரோடு சமைத்து உண்பதற்கு என்றே ஓர் திருவிழா வைத்து கொண்டாடுபவர்கள் சீனர்கள்.
இதுமட்டுமின்றி உயிரோட விலங்குகளையும், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றை சமைக்கும் போட்டி ஒன்று கூட சீனாவில் மிக பிரபலம். சரி அப்படியும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவுகளை இவர்கள் உட்கொள்கின்றனரா என்றால் அதுவும் இல்லை.
கடந்த ஜூலை மாதம் தான் சீனாவில் பல ஆண்டுகள் பழமையான ஒரு லட்சம் டன் இறைச்சிகளை சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் மடக்கிபிடித்தனர். இந்த செயல் உலகில் பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இப்போது சமீபத்தில், ஆல்கஹாலில் வயாகராவை கலந்து உடல்நலத்திற்கு நல்லது என இரண்டு மதுபான விற்பனையாளர்கள் விற்றுள்ள செயல் மீண்டும் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.....

அல்கஹாலில் வயாகரா
உடல் நலத்தை அதிகரிக்கும் குணாதிசயங்கள் உள்ள பானம் என்ற பெயரில் சீனாவின் இரண்டு மதுபான தயாரிப்பாளர்கள் மது விற்று வந்துள்ளனர். அப்படி என்ன உடல்நலத்திற்கு நன்மை தருமளவு அந்த பானத்தில் உள்ளது என ஆராய்ந்து பார்த்ததில், ஆல்கஹாலில் வயாகராவை கலந்து விற்றுவந்துள்ளனர் என கண்டறியப்பட்டது என பி.பி.சி.-யின் அறிக்கை தெரிவிக்கிறது.

சீன உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் நடவடிக்கை
இதுபோன்று சீனாவின் உணவு மற்றும் மருந்து சட்டத்திற்கு எதிராக மதுபான விற்பனை நடப்பதை அறிந்த சீனாவின் உணவு மற்றும் மருந்து துறையினர் விரைந்து சென்று அங்கு தயார் நிலையில் இருந்த 5,300 பாட்டில் ஆல்கஹாலை பறிமுதல் செய்தனர்.

சீனாவின் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம்
சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் செய்த ஆய்வில், தடைசெய்யப்பட்ட மருந்தான Sildenafil மற்றும் Tadalafil கலப்புடன் மதுபானம் விற்றுவந்தது தெரியவந்தது. பைஜியூ (Baijiu) எனும் சீனாவின் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் மதுபானங்கள் அவை என தெரியவந்துள்ளது.

1,13,000 டாலர்கள் மதிப்பு
சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் பறிமுதல் செய்த அந்த மதுபானங்களின் விலைமதிப்பு ஏறத்தாழ 1,13,000 டாலர்கள் என கூறப்படுகிறது. இது சீனாவின் பண மதிப்பில் ஏழு லட்சன் யான்கள் (Yuan) ஆகும்.

விஷத்தன்மை கொண்ட பொருள் விற்பனை குற்றப்பிரிவு
ஆல்கஹாலில் வயாகர கலந்து மதுபானம் விற்ற இரண்டு மது தயாரிப்பாளர்களும் விஷத்தன்மை கொண்ட பொருள்களை விற்றதற்கான குற்றப்பிரிவில் சீன போலிசாரால் கைது செய்பட்டுள்ளனர்.

பால் கலப்படம்
இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு பால் பொருளில் கலப்படம் செய்ததால் ஆறு குழந்தைகள் உயரிழந்த சம்பவம் சீனாவில் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











