ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி தும்மல் ஏற்படுவது ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் ஒவ்வொருவருக்கும் தும்மல் ஏற்படும் ஆனால், அனைவரும் ஒரே மாதிரி தும்முவது கிடையாது. சிலர் தும்மினால் சத்தமே வராது, சிலர் தும்மினால் இடி விழுந்தது போல சத்தம் வரும். இது எதனால் என்று என்றாவது நீங்கள் உணர்ந்தது உண்டா? அல்லது இந்த கேள்வியை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்து உண்டா?

இப்படி விதவிதமாக தும்மல் ஏற்படுவதற்கு காரணம் நாமே தான் என்கிறது அறிவியல். நமது உடல் வாகு மற்றும் தசைகளின் கட்டமைப்பு, சுவாசக் குழாய் போன்றவை தான் இதற்கு காரணம் என்று அறிவியல் கூறுகிறது. இனி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தும்மல் ஏற்பட என்ன காரணம் என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தும்மல் எப்படி ஏற்படுகிறது

தும்மல் எப்படி ஏற்படுகிறது

நுரையீரலில் இருந்து திடீரென வெளிவரும் காற்று வாய் மற்றும் மூக்கு வழியாக வெளிவருவது தான் தும்மல் எனப்படுகிறது. தும்மல் ஏற்படும் போது நமது முகம், மார்பு மற்றும் தொண்டை போன்ற பகுதிகளில் தசைச் சுருக்கங்கள் தோன்றும்.

வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும்

வெளிச்சத்தினால் கூட தும்மல் ஏற்படும்

பெரும்பாலும் தூசு இருக்கும் இடத்தில் தான் தும்மல் வரும் என்று நாம் கருதுகிறோம். ஆனால், பிரகாசமான வெளிச்சம் தோன்றும் போது கூட தும்மல் ஏற்படுமாம். இதைப் ‘போட்டிக் ஸ்னீஸிங்க்' என்று கூறுகிறார்கள். இது போன்ற தும்மல் ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது.

உடலமைப்பு

உடலமைப்பு

ஒவ்வொருவரின் உடலமைப்பை பொறுத்து, அவர்களுக்கு ஏற்படும் தும்மல் வேறுபடுகிறது. இதற்கு நுரையீரல், சுவாசக் குழாய் ஆகியவற்றின் அளவுகள், மேலும் தொண்டை, மார்பினை சுற்றி அமைந்துள்ள தசைப் பகுதி போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தும்மும் போது மூக்கிற்கு அழுத்தம் தரவேண்டாம்

தும்மும் போது மூக்கிற்கு அழுத்தம் தரவேண்டாம்

ஆய்வாளர்கள் தும்மல் ஏற்படும் போது அதை தடுக்கும் வகையில் மூக்கிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது உங்களின் காதில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஒரு சில வேளைகளில் இது சிறுநீர் வெளியேற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

தும்மல் பற்றிய ஆய்வு

தும்மல் பற்றிய ஆய்வு

தும்மலின் வேறுப்பாடு மற்றும் வகைகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், அதிக சத்தத்துடன் தும்மல் போடுபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு கொண்டவர்களாக இருப்பதாகவும், குறைந்த சத்தத்துடன் தும்முவோர் குறைந்த தன்னம்பிக்கை, வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இம்புட்டு விஷயமா

இம்புட்டு விஷயமா

இதுநாள் வரை தும்மல் என்பது வெறும் சாதாரண விஷயம் என்று தான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், இதற்கு பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Types of Sneezing

Do you know about the types of sneezing and why sneezing happens? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter