இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இதற்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான நேரத்திற்கு சரியான உணவை தான் சாப்பிடுகிறீர்களா என்பது. ஆம்! சில உணவுகளை காலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மாலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும். காலை வேளைகளில் நீங்கள் கடினமான உணவுகளை உட்கொள்ளலாம் ஏனெனில் நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்ய போகிறீர்கள், உங்களது உடலில் கலோரிகள் தங்காது கரைத்து விட முடியும். ஆனால் அதே கடின உணவுகளை இரவு வேளைகளில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் வரும். காலை கடனை கூட கழிக்க முடியாத பெரிய கடனாளியாகி விடுவீர்கள்.

காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!

இதெல்லாம் உங்களுக்கு தேவையா? சரியான நேரத்திற்கு சாப்பிடுகிறோமா என்பதை தாண்டி சரியான உணவை தான் சாப்பிடுகிறோம்? என்ற கேள்வியை நீங்கள் புரிந்து நேரத்திற்கு ஏற்ற உணவை உட்கொள்வது அவசியமானது. பலருக்கு அஜீரணம், மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட இது போன்று நேரத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடாதது தான் காரணமாய் இருக்கிறது. இதில் பெரும்பாலும் காலை மற்றும் மதிய வேலை உணவுகள் உங்களுக்கு பிரச்சனை அளிக்காது. ஏனெனில், நீங்கள் செய்யும் வேலை அந்த கலோரிகளை கரைத்துவிடும். ஆனால், இரவில் அப்படி இல்லை. இரவு நேர சாப்பாடு முடிந்தவுடன் டி.வி. பார்ப்போம் பின்பு தூங்கிவிடுவோம். எனவே இரவு நேர உணவுகளில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். இனி, இரவு நேரங்களில் நீங்கள் சாப்பிட கூடாத உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் அப்பெண்டிக்ஸ்...! 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால்

ஆல்கஹால்

சிலர் படுக்கைக்கு போகும் முன் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது சரியான முறை அல்ல. நீங்கள் மது அருந்திவிட்டு அப்படியே தூங்கும் போது, வயிற்றில் மிகுதியான அமிலத்தன்மை உள்ள மது தங்குவதால் பல உடலநல கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

சோடா

சோடா

இரவு நேர உணவுகளுடன் சோடாவை சேர்ப்பது தவறானது. இது குடல் வால்வுகளை பாதித்து விடும். இயற்கையிலேயே சோடாவில் அதிகப்படியான அமிலச்சத்து இருப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட்டில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் இரவு வேளைகளில் சாக்லேட் சாப்பிடுவது உங்களது உடல் பருமனை அதிகரித்துவிடும்.

சீஸ்

சீஸ்

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் முதன்மை உணவு பால் உணவுகள். அதிலும் சீஸில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இரவு நேரத்தில் சீஸை சாப்பிடுவதும் உடல் எடையை கூட்டிக்கொள்வதும் ஒன்றுதான்.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும் இது உங்களுக்கு காலை வேளைகளில் வயிற்று உபாதைகள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே, இரவு நேரங்களில் காபி குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

சிட்ரஸ்

சிட்ரஸ்

இரவு நேரங்களில் சிட்ரஸ் உணவுகளையோ அல்லது ஜூஸ் வகைகளையோ பருகுவது நல்லது அல்ல என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கு பதிலாக நீங்கள் ஆப்பிள் போன்ற பழங்களை நேரடியாக உண்பது உடல்நலத்திற்கு உகந்தது.

நட்ஸ்

நட்ஸ்

கொழுப்பு என்று எடுத்துக்கொண்டால் அது என்ன உணவாக இருந்தாலும் தவிர்ப்பது தான் சரியானது. நட்ஸ் உணவுகளை மற்ற நேரங்களில் உண்பது உடல் நலத்திற்கு எவ்வளவு நல்லதோ அந்த அளவு இரவு நேரங்களில் உண்பது தீங்கானது. முந்திரி, பாதாம், பிஸ்தா என அனைத்து நட்ஸ் உணவுகளும் கொழுப்புச்சத்து நிறைந்தது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 7 Worst Foods To Eat At Night

Do you know about the 7 worst foods to eat at night? If no, read here.
Subscribe Newsletter