ஆண்களுக்கு ஏற்படும் தர்மசங்கடமான உடல்நல பிரச்சனைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, விறைப்புத் தன்மை, விந்து தள்ளுதல், என ஆண்களை மனதளவில் பாதிக்கும் தர்மசங்கடமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றை மருத்துவர்களிடம் சென்று சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் தீர்வுக் கண்டுவிடலாம்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்...

ஆனால், இதை தெரிந்துக் கொள்ளாமல் நிறைய ஆண்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள தயங்குகிறார்கள். இதனால், அதிகமான பதட்டம், மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றால் பதிக்கப்படும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!!!

ஆண்மை சார்ந்து மட்டுமில்லாது, ஆண்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆட்படுத்தும் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இது நீரிழிவுக்கான ஓர் அறிகுறி எனிலும் கூட, சிலருக்கு இது சாதாரணமாக ஏற்படும். எங்கு வெளியில் சென்றாலும் இவர்களால் ஒரு மணிநேரம் கூட சிறுநீரை அடக்க முடியாது. இது இவர்களை பெருமளவு தர்மசங்கடமான நிலைக்கு ஆட்படுத்தும்.

விறைப்பு குறைபாடு

விறைப்பு குறைபாடு

ஆண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய தர்மசங்கடமான பிரச்சனை இது தான். இது குறித்து ஆண்கள் பெரும்பாலும் வெளியே சொல்வதே கிடையாது. இதை குணமாக்க சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், ஆண்கள் பலர் இதை வெளியில் கூற அச்சம் கொண்டு கூறுவதே இல்லை. நீரிழிவு நோய் ஏற்பட்டால் கூட விறைப்பு குறைபாடு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முன்கூட்டியே விந்து தள்ளல்

முன்கூட்டியே விந்து தள்ளல்

முன்கூட்டியே விந்து தள்ளல், ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதட்டம் போன்றவை அதிகமாக இது காரணமாக இருக்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

புகை, மது, பாக்கு போன்றவற்றால் ஆண்களுக்கு ஏற்படும் மற்றுமொரு தர்மசங்கடமான பிரச்சனை வாய் துர்நாற்றம். சகஜமாக ஒருவர் அருகில் நின்று கூட பேச முடியாது. அதிகமாக உட்கொள்ளும் ஃபாஸ்ட் புட் கூட இதற்கு ஓர் காரணமாக இருக்கிறது.

புட்டத்தில் பருக்கள்

புட்டத்தில் பருக்கள்

வெளியிடங்களுக்கு செல்லும் போது, மற்றவரோடு தங்கியிருக்கும் போது புட்டத்தில் பருக்கள் இருப்பவர்களால் சாதாரணமாக உடை மாற்ற முடியாது, மிகவும் தயக்கமாக இருப்பார்கள். புட்டத்தில் பருக்கள் ஏற்படுவதை சாதரணமாக விட்டுவிட வேண்டாம். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு தீர்வுக் காணுங்கள்.

வாயுத்தொல்லை

வாயுத்தொல்லை

இருப்பதிலேயே இது தான் பெரும் தொல்லை. டமால், டுமீல் என்று வெடித்தல் அருகில் இருப்பவர்களுக்கு கஷ்டம், இதை வெடிக்காமல் அடக்க முன்றால், உங்கள் உடலுக்கு கஷ்டம்.

பீர் தொந்தி

பீர் தொந்தி

தொப்பை கல்லு மாதிரி இருந்தால் கூட பரவாயில்லை. சிலருக்கு மிகவும் பிசைந்து வாய்த்த மைதா மாவு போன்று இருக்கும். வேடிக்கைகாக இப்படி கூறலாம் உண்மையில் இவர்களால் சகஜமாக எந்த வேலையும் செய்ய முடியாது. எளிதில் சோர்வடைந்து விடுவார்கள்.

"அந்த" இடத்தில் அரிப்பு

அலர்ஜி, சரியாக குளிக்காமல் இருப்பது, உள்ளாடை சமாச்சாரங்களில் அக்கறையின்றி இருப்பது போன்ற காரணத்தினால் அந்த இடத்தில் அடிக்கடி அரிக்கும். இந்த பிரச்சனை இருக்கும் உங்கள் நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் சிலரை கூட நீங்கள் தினம், தினம் காணலாம். இதற்கு சரியான தீர்வை ஆரம்பத்திலேயே கண்டுவிட வேண்டும். இல்லையேல் அவ்விடத்தில் தொற்று பெரிதாக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆண்மையின்மை

ஆண்மையின்மை

தற்போதையே காலக்கட்டத்தில், ஆண்கள் மத்தியில் நிலவும் பெரும் பிரச்சனையாக இருப்பது ஆண்மையின்மை தான், அதிகமான குடி என்பதை தாண்டி உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, உணவு முறை மாற்றம் என பலவன இதற்கு காரணமாக இருக்கின்றன. இதை சரியான சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம்

பெண்களைவிட, ஆண்களுக்கு தான் உடல் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? வாசனை திரவியம் கூட ஒரு வகையில் உடல் துர்நாற்றம் அதிகரிக்க காரணமாக இருக்கிறதாம். இதனால், ஆண்கள் பெண்களின் அருகிலேயே செல்ல முடியாத அளவு தர்மசங்கடமான தருணங்கள் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Embarrassing Health Problems Of Men

Do you know about the 10 Embarrassing Health Problems Of Men? read here.
Story first published: Tuesday, September 22, 2015, 12:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter