For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சையை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா!!!

|

எந்த பொருளிலும் பல நன்மைகள் இருக்கின்றன, ஆனால் நாம் அதைப் பற்றி ஏதும் அறிந்துக் கொள்ளாமலேயே, அதன் முழுப் பயனையும் பெறாமலேயே அரையும், குறையுமாய் பயன்படுத்தி வருகிறோம்.

மக்களே... ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

அந்த வகையில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் எலுமிச்சையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கு, இன்று தெரிந்துக்கொள்ளலாம். எலுமிச்சை ஒரு சிறந்த அஜீரண நிவாரணி, வயிற்றுக் கோளாறுகளை தீர்க்க கூடியது.

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...

இதுமட்டுமல்லாது இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது எலுமிச்சை அதைப் பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலை சுத்தம் செய்யும்

உடலை சுத்தம் செய்யும்

தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.

செரிமானம்

செரிமானம்

செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்னை குணமாகும்.

குடலை சுத்தம் செய்கிறது.

குடலை சுத்தம் செய்கிறது.

எலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

கொசுக்களைக் கொல்லும்

கொசுக்களைக் கொல்லும்

காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை நம்மிடையே அண்டவிடாது துரத்த, அறுத்து வைத்த எலுமிச்சை பழத்தோடு இரண்டு, மூன்றுக் கிராம்பு சேர்த்து வைத்தால் போதும். இது கொசு உங்களை அண்டாது வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் கேட்டுப் போகாமல் இருக்க...

ஆப்பிள் கேட்டுப் போகாமல் இருக்க...

அறுத்து வைத்த ஆப்பிள் அல்லது வெண்ணெய் பழம் கெட்டுப் போகாது இருக்க எலுமிச்சை சிறிதளவு சேர்த்து வையுங்கள்.

சமையலரைக் கிருமிகள்

சமையலரைக் கிருமிகள்

உங்களது சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாருப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள் அண்டாது இருக்கும்.

எலுமிச்சை சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்க..

எலுமிச்சை சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்க..

கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால்,எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Ways You Are Not Using Lemons

In addition to enhancing the tangy taste to various delicacies, there are various other ways lemons can be used.
Desktop Bottom Promotion