உடலுறவை மேம்படுத்த உதவும் ஆறு ஊட்டச்சத்துகள்!!!

By: John
Subscribe to Boldsky

அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்வியலில், உணவில் இருந்து உளவியல் வரை எல்லாமே ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. வெந்தும் வேகாத சமையலில் நாம் காட்டும் அவசரம் ,உங்கள் உடல் நலத்தையும் வெந்தும் வேகாத நிலைக்கி சீர்குலைந்து போக செய்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவு உங்கள் உடல் மட்டும் இல்லாது உடலுறவையும் மேம்படுத்த உதவுகிறது.

நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என அறிந்திருப்பீர்கள். ஆனால், உடலுறவுக் கொள்ள தேவையான ஆரோக்கியத்தையும் அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எப்படி உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் சில ஊட்டச்சத்துகள் நன்மை விளைவிக்கிறதோ, அதே போல உடலுறவிற்கு தேவையான ஆரோக்கியம் அதிகரிக்கவும் சில ஊட்டச்சத்துகள் உதவுகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ ஆண் மற்றும் பேன் இருபாலருக்கும் "அந்த" ஹார்மோன் அதிகரிக்க உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்கவும், வீரியம் அதிகரிக்கவும் பயன் தருகிறது. திராட்சை, மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு, பசலைக் கீரை, தக்காளி, மாம்பலம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ சத்து அதிகம் இருக்கிறது.

வைட்டமின் பி3

வைட்டமின் பி3

வைட்டமின் பி3 உடலியல் சக்தி அதிகரிக்க உதவுகிறது மற்றும் நரம்பியல் பகுதிக்கு ஊக்கமளிக்கிறது. வைட்டமின் பி3 இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் பாலியல் உணர்வை தூண்ட உதவுகிறது. சிக்கன், குடல், கோதுமை ரொட்டி போன்ற உணவுகளில் இந்த சத்து அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

வைட்டமின் பி 6 ஆண்மை அதிகரிக்க உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இவை உங்கள் உடலுறவை மேம்படுத்த உதவும். வாழைப்பழம், அவோகாடோ, தக்காளி போன்ற உணவுகளில் வைட்டமின் பி 6 சத்து அதிகம் இருக்கின்றன.

வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12

வைட்டமின் பி12 ஆண்களக்கு விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது. முட்டை, பீஃப் இறைச்சி மீன், சீஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் பி12 சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி கருவுருதலுக்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்க வெகுவாக உதவுகிறது. முக்கியமாக ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் பெருமளவில் சுரக்க செய்கிறது. இவை உங்கள் உடலுறவு மேம்பட உதவும் ஹார்மோன் ஆகும். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் கிடைக்கும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ'யை பொதுவாகவே "அந்த" விஷயத்திற்கான வைட்டமின் என்று தான் கூறுவார்கள். உங்கள் உடலுறவு காரசாரமாக இருக்க வைட்டமின் ஈ உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்களின் வீரியம் அதிகரிக்கும். வால்நட், முட்டை, பசலைக் கீரை போன்ற உணவுகளில் வைட்டமின் ஈ சத்து அதிகமாகக் கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Nutrition Strategies For A Stronger Inter Course Drive

Some people vouch for the effect of foods on their inter course drive, but extravagant claims for aphrodisiacs are not borne out by scientific studies. While sexual function may be our physical response to a cascade of hormones, inter course drive is basically maintained by an active mind in a healthy body.
Subscribe Newsletter