For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் பார்பி கேர்ளாக மாறிய விசித்திர பெண்!!!

|

"Muscular Dystrophy" என்பது தசைநார் தோய்வு நோயாகும். இது, பரம்பரை மரபணுக்களால் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது எனில், தசையின் வலு இழக்கப்படும், எலும்புகளின் வலிமை குறையும், சரியாக நடக்க முடியாது, உட்கார முடியாது, கழிவறை சென்று வருவது கூட சிரமமாக தான் இருக்கும்.

உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!!

தசைநார் தோய்வு நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்டிப்பாக ஓர் நபரின் துணை எப்போதும் தேவைப்படும். வெளியிடங்களுக்கு சென்றால் மட்டுமல்ல, வீட்டினுள் நடமாட கூட அவர்களக்கு ஓர் நபரின் துணை தேவை. இந்த நோய் தாக்கம் ஏற்பட்டவர் தான் அம்பர் குஸ்மான்.

இந்திய மருத்துவ உலகை கதிகலங்க வைத்த சில திகைப்பூட்டும் நோய்கள்!!!

தனக்கு ஏற்பட்ட இந்த அரியவகை உடல்நல குறைப்பாட்டை இவர் எப்படி நேர்மறையாக எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஓர் முன் மாதிரியாக வாழ்கிறார் என்பதை பற்றி இனி காணலாம்.....

குண்டுமணி - குண்டூசி: 11 மாதத்தில் 86 கிலோ எடை குறைத்த ஆக்லாந்து இளம்பெண்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு இல்லாத குறைபாடு

தீர்வு இல்லாத குறைபாடு

அம்பர் குஸ்மான், ஓர் 28 வயது இளம் மங்கை. ஆனால், இவருக்கு ஏற்பட்ட தசைநார் தோய்வு நோயின் காரணமாக ஏறத்தாழ ஓர் வயதான நபர் போல மாறினார். இந்த தசைநார் தோய்வு குறைபாட்டிற்கு தீர்வு இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் இவர் மனமுடைந்து போய்விடவில்லை.

நீண்ட தூரம் நடக்க முடியாது

நீண்ட தூரம் நடக்க முடியாது

இவரால் நீண்ட தூரம் தொடர்ந்து நடக்க முடியாது. உணவை சரியாக விழுங்க கூட முடியாத நிலையினால் மிகவும் மெலிந்து போனார் அம்பர் குஸ்மான். எங்கு சென்றாலும் இவருக்கு ஓர் துணை தேவைப்பட்டது.

18 வயதில் தென்பட்ட மாற்றம்

18 வயதில் தென்பட்ட மாற்றம்

18 வயதில் தான் அம்பர் குஸ்மானுக்கு தனது உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்தார். முதலில் அவரது தோள்களில் தான் தசைநார் தோய்வு ஏற்பட்டது. பிறகு கால்களிலும் அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. இந்த மாற்றம் ஏற்பட ஆரம்பித்த குறுகிய காலத்திலயே தனது துணையை (கணவர்) கண்டறிந்தார் அம்பர் குஸ்மான்.

அனைத்தையும் எடை அதிகமாக உணர்ந்தேன்

அனைத்தையும் எடை அதிகமாக உணர்ந்தேன்

இவர் என்ன உடை அணிந்தாலும், மிக மெல்லிய உடையை அணிந்தாலும் கூட அதை எடை அதிகமாக உணர தொடங்கினர். அம்பர் குஸ்மான், "எந்த உடை அணிந்தாலும் எடை அதிகமாக உணர்வேன். மூட்டுகள் வலிக்கும், யாரவது கைகளை தாங்கியப்படி தான் எங்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என கூறியிருக்கிறார்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

மருத்துவர்களிடம் தொடர்ந்து பரிசோதனைக்கு சென்ற பிறகு தான் எனது உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டது, இதனாலான தாக்கம் எவ்வாறு இருக்கும் என அறிந்துக் கொண்டேன். கடந்த 2012 ஆண்டு பரிசோதனைக்கு செல்லும் முன் வரை இதன் தாக்கம் பெரும் வலியாக இருந்து வந்தது என கூறுகிறார் அம்பர் குஸ்மான்.

முதலில் பயம் தொற்றிக் கொண்டது

முதலில் பயம் தொற்றிக் கொண்டது

இந்த அரியவகை குறைபாடான தசைநார் தோய்வுடன் அதிக நாள் வாழ்வது சிரமம் என மருத்துவர்கள் கூறியது என்னுள் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. பிறகு மெல்ல மெல்ல வெளிவர தொடங்கினேன். அப்போது தான் என் மனதில் ஓர் புதிய சிந்தனை பிறந்தது. அதன் வெளிபாடு தான் தற்போதைய எனது தோற்றம் என கூறுகிறார் அம்பர் குஸ்மான்.

பார்பி கேர்ளாக உருமாற்றம்

பார்பி கேர்ளாக உருமாற்றம்

சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த போதே, தன்னை பார்பி கேர்ள் போல உருமாற்றி கொண்டார் அம்பர் குஸ்மான். தனது குறைபாட்டையே தனக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டார். மெலிந்த உடல்வாகு அவருக்கு உண்மையிலேயே பார்பி கேர்ள் தோற்றத்தை கொடுத்தது.

ஆன்லைனில் காணொளிப் பதிவுகள்

ஆன்லைனில் காணொளிப் பதிவுகள்

உடை, விக்கு, அலங்காரம் என முற்றிலுமாக பார்பி கேர்ளாக மாறிய அம்பர் குஸ்மான், ஆன்லைனில் காணொளிப் பதிவுகளை பகிர தொடங்கினர். இதனால் இவருக்கு நிறைய ரசிகர்களும் கிடைத்தனர்.

ஊக்கவிப்பு

ஊக்கவிப்பு

தனது தசைநார் தோய்வு குறைபாடை பற்றி விவரமாக மற்றும் அந்த கோளாறு உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த என நிறைய காணொளிகளை பதிவு செய்ய ஆரம்பித்தார் அம்பர் குஸ்மான். இதன் பயனாக தனக்கு இரண்டு பார்பி உடைகள் பரிசாய் கிடைத்தன என்றும் கூறியிருக்கிறார் அம்பர் குஸ்மான்.

தன்னபிக்கையுடன் இருக்கும் அம்பர் குஸ்மான்

தன்னபிக்கையுடன் இருக்கும் அம்பர் குஸ்மான்

தீர்வில்லாத குறைபாடு என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் தனது தன்னம்பிக்கையின் காரணமாக தன்னை வாழும் பார்பியாக உருமாற்றி கொண்டு தனது துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அம்பர் குஸ்மான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy : New Dog Media

English summary

Real Life Human Barbie Doll With Rare Medical Condition

This woman's medical condition gradually turns her into a real life human barbie doll. Take a look.
Desktop Bottom Promotion