மல்டி டாஸ்கிங் என்பது வரமா? சாபமா? - உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மல்டி டாஸ்கிங் என்பது உண்மையில் நல்ல திறமை தான். ஒருவர் பல வேலைகளை கற்று வைத்துக் கொள்வது கண்டிப்பாக நல்ல பலனளிக்கும். ஆனால், அனைத்தையும் எல்லா நேரங்களிலும் செய்வது தான் உங்கள் உடல்நலனை சீர்குலைத்து விடுகிறது.

ஓயாமல் வேலை செய்யும் ஐ.டி. வாசிகள் தவிர்க்க வேண்டிய சில உடல்நலத் தவறுகள்!!!

தெரிந்தோ, தெரியாமலோ உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடலுக்கு நீங்களே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, இதயத்தின் செயல் திறன் குறைபாடு என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையை பாதிக்கிறது

மூளையை பாதிக்கிறது

மல்டி டாஸ்கிங் செய்வதால் மூளை மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் "க்ரே மேட்டர்" எனப்படும் திசு பாதிக்கப்படுகிறது. இதனால் உங்களால் காலப்போக்கில் எதையும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம். இந்த திசு உங்கள் நரம்பமண்டல இயக்கத்தின் ஓர் முக்கிய அங்கம் ஆகும்.

மன அழுத்தம் அதிகரிக்கும்

மன அழுத்தம் அதிகரிக்கும்

மூளையில் ஏற்படும் இந்த திறன் குறைபாட்டினால், அழுத்தம் அதிகரிக்கும். இது உங்களை மனதளவில் பெரிதாய் பாதிக்கும். இதனால் நீங்கள் விரக்தியடையும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

உணர்வியல் சமநிலை இழப்பு

உணர்வியல் சமநிலை இழப்பு

மேல்கூறிய மாற்றங்களினால், நாள்பட உங்களது மனநிலை பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக உணர்வு ரீதியாக சமநிலை இழப்பு ஏற்படும். பதட்டம், மன சோர்வு போன்றவையின் காரணமாக இது நடக்க வாய்ப்பிருக்கிறது. இது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும்.

மறைமுகமாக உடல் எடை கூடும்

மறைமுகமாக உடல் எடை கூடும்

மல்டி டாஸ்கிங் முறையில் வேலை செய்யும் நபர்கள் அவர்களுக்கு தெரியாமல், நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தவறான நேரத்தில் அதிகமான அளவில் உணவருந்துதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், அவர்களுக்கே தெரியாமல் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

தூக்கமின்மை

தூக்கமின்மை

சோர்வு, அழுத்தம், பதட்டம், அதிகமாக உணவு உட்கொள்ளுதல், உடல்பருமன் போன்றவை ஒட்டுமொத்தமாக உங்களது உறக்கத்தை கெடுக்கிறது. சொல்ல போனால், உங்களது ஒரு நாள் சக்கரம் ஆனது மொத்தமாக பழுதடைந்து போகிறது.

முதிர்ச்சி

முதிர்ச்சி

மல்டி டாஸ்கிங் செய்வதால் நீங்கள் தொழில்முறையில் மட்டுமின்றி உடல் முறையிலும் கூட சீக்கிரம் முதிர்ச்சியாகி விடுவீர்கள். இதற்கு முக்கிய காரணம் நாம் முந்திய ஸ்லைடில் பார்த்த தூக்கமின்மை தான்.

இதயத்தை பாதிக்கிறது

இதயத்தை பாதிக்கிறது

மல்டி டாஸ்கிங் செய்வதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது உங்கள் இதயத்தை வெகுவாக பாதிப்படைய வைக்கிறது. நீங்கள் பலவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது தவறல்ல. ஆனால், அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய நினைப்பது, உங்களை நீங்களே வதைப்பட வைக்கும் செயலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Know The Dangers Of Multi Tasking

Do you know the hidden dangers of multi tasking? Read the article to know what are the dangers of multi tasking and unknown facts about multi tasking.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter