டிஜிட்டல் குவாலிட்டி, உங்க உடல் நலத்தோட குவாலிட்டிய குறைக்குதாம்! தெரிஞ்சுக்குங்க மக்களே!!!

Posted By:
Subscribe to Boldsky

டி.வி., மொபைல் ஃபோன், கேமரா, மியூசிக் பிளேயர் அது, இது என்று ஏதாச்சும் ஒரு டிஜிட்டல் விஷயம், உங்கள் வாழ்க்கையில் 24மணி நேரமும் ஓட்டி உறவாடிட்டு தான் இருக்கின்றது.

பாதங்களில் உள்ள ஏழு அழுத்தப் புள்ளிகளை தூண்டுவதனால் பெறும் நன்மைகள்!!!

டிஜிட்டலில் குவாலிட்டி, திறன், செயல்பாடு என்று அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், அதை அதிகம் பயன்படுத்துவதனால் உடல்நலத்தின் குவாலிட்டி குறைகிறது என்பதை மட்டும் ஏன் அறிந்துக்கொள்ளவில்லை.

ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!

இன்னும் தெளிவாக சொல் வேண்டுமானால், அந்நியன் விக்ரம் போல படம் எடுத்து தான் காட்ட வேண்டும். இதுனால எல்லாமா பிரச்சனை வரும் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை என்னவெனில், இதனால் மட்டும் தான் அதிக பிரச்சனையே வருகிறது.

உயிருக்கு உலை வைக்கும் மார்டன் ஃபேஷன் உபகரணங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்!!!

இனி, டிஜிட்டல் பொருள்களோடு வாழும் உங்களது பழக்கவழக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

பெரும்பாலான உடல்நலக் கோளாறுகளுக்கு முதன்மை காரணமாக இருப்பது, தூக்கமின்மை. டிஜிட்டல் பழக்கவழக்கங்களினால் ஏற்படும் முதல் குறைபாடே தூக்கமின்மை தான். ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என்று இராத்திரியை முழுக்க இதில் தான் தொலைக்கின்றனர் பலர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இன்டர்நெட்டில் சிறு தடங்கல் அல்லது, வேகம் சரியாக கிடைக்காவிட்டால் கூட பலர் மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கோபத்தின் உச்சிக்கு சென்று மொபைல் சேவை நிறுவனங்களை திட்டி தீர்த்துவிடுகின்றனர்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

குறுஞ்செய்திக்கு பதில் வரவில்லை எனில், பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகளுக்கு, ஸ்டேட்டஸ்களுக்கு, போட்டோக்களுக்கு லைக், கமெண்ட்ஸ் வரவில்லை எனில் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் இன்றைய இளைஞர்கள்.

ஈகோ

ஈகோ

தங்களது போடோக்களை விட மற்றவர்களுக்கு லைக் அல்லது கமெண்ட்டுகள் அதிகம் வந்தால் அவர்கள் மீது தேவையற்ற ஈகோ வளர்கிறது. இது, நல்ல உறவுகளில் கூட விரிசல் விட காரணமாகிவிடுகிறது.

கண் கோளாறுகள்

கண் கோளாறுகள்

டிஜிட்டல் பழக்கவழக்கங்களினால் மிகவும் அதிகமாக பரவி வருவது கண் சார்ந்த பிரச்சனைகள் தான். முக்கியமாக இரவு நேரங்களில் அதிகமாக மொபைல், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு நிறைய பார்வை கோளாறுகள் ஏற்படுகின்றன.

கவனம் சிதறுதல்

கவனம் சிதறுதல்

டிஜிட்டல் பழக்கவழக்கங்களினால் ஏற்படும் மற்றுமொரு பெரிய பிரச்னை, கவனம் சிதறுதல். சமூக வலைதளங்களில் ஏதேனும் அறிவிப்பு (notification) வந்திருக்கிறதா, இல்லையா என்று ஒவ்வொரு நிமிடமும் பார்க்கும் பழக்கம் ஒருமுகப்படுத்தும் தன்மையை இழக்க செய்கிறது.

மூளை பாதிப்பு

மூளை பாதிப்பு

அதிகமாக இதில் நாட்டம் கொண்டு, இரவு பகல் பாராமல் பயன்படுத்தி வருவதனால் மூளை சோர்வடைகிறது. இந்த பழக்கம் தொடர்ச்சியாக இருக்குமெனில், மூளை சார்ந்த பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Just How Unhealthy Are Your Digital Habits

Do you know about how unhealthy are your digital habits? read here.
Story first published: Saturday, April 25, 2015, 16:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter