Latest Updates
-
சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
அன்னையர் தினத்தில் பூக்களுக்குப் பதில் இதை கொடுங்க… அம்மாவின் ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் பலமடங்கு உயரும்! -
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை! -
மே 7-ம் தேதி இந்த திசையில் மணி பிளாண்ட் வையுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
பாபா வங்கா கணிப்பு படி அடுத்த 100 வருடத்தில் உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் என்னென்ன தெரியுமா? -
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
"ஹல்திராம்ஸ்" மனிதர்கள் உண்ண தகுந்தது அல்ல - அமெரிக்க உணவு நிர்வாகம் தடை!!!
மேகியில் ஆரம்பித்த இரசாயானக் கலப்படம் எனும் அலாவுதீன் பூதம் இன்று உலகளவில் மாபெரும் உருவெடுத்து நிற்கிறது. இந்தியா முழுதும் அனைத்து பேக்கேஜ் உணவுகளையும் பரிசோதனை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்திய இனிப்பு மற்றும் கார உணவுகள் தயாரிப்பு நிறுவனமான "ஹல்திராம்ஸ்" உணவுகள் மனிதர்கள் சாப்பிட தகுந்த உணவல்ல என்று கூறியிருக்கிறது.
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் கலக்கப்படும் இரசாயனங்களும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும்!!!
பேகேஜ் உணவுகள் மற்றும் பதப்படுத்தி வைக்கும் உணவுகள் மனிதர்களின் உடல் நலத்திற்கு கேடு என்று பல முறை நமது தமிழ் போல்ட்ஸ்கை, தனது பல கட்டுரைகளின் மூலம் எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது...
மேலும் நீங்கள் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியவை...
அழகு சாதனங்களில் இருக்கும் இரசாயனங்கள் மார்பக புற்றுநோயை உண்டாக்குமாம் ! - ஷாக் ரிப்போர்ட்!!
ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
ஆர்.ஓ குடிநீர் குடிப்பது பொது மக்களின் உடல்நலத்துக்கு தீங்கானதா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!!!
இனி, "ஹால்திராம்ஸ்" உணவு தடைக் குறித்துக் காணலாம்....

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
இந்திய நிறுவனமான ஹல்திராம்சின் உணவுத் தயாரிப்புகள் உண்ணத் தகுந்ததல்ல என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இந்தியாவின் பல நொறுக்கு தீனிகள்
ஹல்திராம்ஸ் மட்டுமின்றி இந்தியாவில் தயாரிக்கப்படும் 500க்கும் மேற்பட்ட பல நொறுக்குத்தீனிகள் விற்பனைக்கு தகுதியானதாக இல்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த செய்தி தகவல்கள் அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ரசாயனங்கள்
நாக்பூரை மையமாகக் கொண்ட ஹல்திராம்ஸ் உணவு தயாரிப்பு நிறுவனத்தின் உணவுகளில் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹல்திராம்ஸ் நிறுவனம் மறுப்பு
தங்களது உணவுகள் 100 சதவீதம் பாதுகாப்பான முறையில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், சில ரசாயனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் அமெரிக்காவல் அது அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி
அது எப்படி அமெரிக்காவில் நலன் கருதி தடை செய்யப்படும் ஓர் இரசாயனம், இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது இதுப் போன்று பல உணவுகள் இந்திய சந்தையில் விற்கப்பட்டு வருகிறதா? எனவும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?
மேலும், இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உணவுகளையும், மக்களின் நலன் கருதி, இந்திய அரசு கடுமையாக பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Click it and Unblock the Notifications