Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
முட்டையை விட அதிக புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்கள்!!!
பலரும் முட்டையில் தான் புரோட்டீன் அதிகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முட்டையை விட அதிக அளவில் ஒருசில உணவுகளில் புரோட்டீன் வளமாக உள்ளது. ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது.
சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முட்டைக்கு இணையான புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்து புரோட்டீன் சத்தைப் பெறுங்கள்.

ஸ்பைரூலினா
ஸ்பைரூலினாவில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அதிலும் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஸ்பைரூலினாவில் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே இதனை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமெனில் ஸ்பைரூலினா காப்சூல்களை வாங்கி தினமும் 2 சாப்பிடலாம்.

சோயா பீன்ஸ்
1/4 கப் சோயா பீன்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே நீங்கள் சைவ உணவாளியாக இருந்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் சோயா பீன்ஸ் கொண்டு மசாலா, குருமா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தயிர்
அனைவருக்கும் தயிரில் புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அதில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.

சீஸ்
பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சீஸை உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும் வெண்ணெயை விட சீஸ் தான் சிறந்ததும் கூட.

பூசணிக்காய் விதை
பூசணிக்காய் விதையில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே அதனை தினமும் சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications
