For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!

|

மன அழுத்தம் மற்றும் உயர் இரத்தக் கொதிப்பு மற்றும் ஓயாத வேலைகள் போன்றக் காரணத்தினால் ஒற்றைத் தலைவலி ஏற்படும் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால், உங்களின் உணவுப் பழக்கத்தினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

ஆம், திடீரென உணவுக் கட்டுபாட்டில் நீங்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள், அதிகமாக சாக்லேட் சாப்பிடுவது மற்றும் அல்கஹால் பானங்கள் அதிகமாக குடிப்பதுப் போன்றப் பழக்கங்கள் ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்களாக இருக்கின்றன.

சரி, இனி ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் வகையிலான உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றி முழுவதுமாய் தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக் கட்டுபாடு

உணவுக் கட்டுபாடு

திடீரென நீங்கள் உணவுக் கட்டுபாட்டை மாற்றும் போது, ஒற்றைத் தலைவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அல்கஹால் பானங்கள்

அல்கஹால் பானங்கள்

அல்கஹால் பானங்களில் இருக்கும் டைரமைன் மற்றும் பைட்டோக்கெமிக்கல் போன்ற வேதியல் மூலப்பொருள்கள் ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாக இருக்கின்றன.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட்டிலும் டைரமைன் எனும் வேதியல் மூலப்பொருள் தான் ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணியாக திகழ்கிறது.

காபி

காபி

அடிமைப்படுத்தும் தன்மையுடையது காபி. சிலர் காபிக் குடிப்பதனால் தலைவலி குறையும் என நினைத்து அதற்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். உண்மையில் காபிக்கு நீங்கள் அடிமையாகும் போது தான் தலைவலிப் பிரச்சனையே ஏற்படுகிறது.

சர்க்கரை

சர்க்கரை

இயற்கை சர்க்கரையினால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இல்லை ஆனால், சில உணவுகளில் சேர்க்கப் படும் செயற்கை இனிப்புப் பொருள்கள் தான் ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Give You A Headache

Do you know certain diet changes and foods that can give you migraine problems? read here.
Desktop Bottom Promotion