உடல்நலத்தை ஊக்குவிக்கும் இயற்கையான வழிமுறைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வளர்சிதை மாற்றம் என்பது உங்கள் உடலில் உள்ள உயிர் செல்களுக்குள் நடக்கும் வேதியில் மாற்றம் ஆகும். இந்த செயல் உங்கள் உடலில் இருக்கும் உயிர் செல்கள் நன்கு வளரவும், புதிப்பிக்கவும் உதவுகிறது. மற்றும் இது உங்கள் உடற்திறனை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பயனளிக்கிறது.

பலரும் இதற்காக சந்தையில் விற்கும் சில இராசாயன கலப்புக் கொண்ட எனர்ஜி ட்ரிங்க்கை குடித்து வருகின்றனர். இது உங்கள் உடல்நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை இயற்கையான வழிகளில் ஊக்கப்படுத்த வேண்டியது அத்தியாவசியம் ஆகும். வளர்சிதை மாற்றத்தை இயற்கையான வழிகளில் ஊக்கப்படுத்த உதவும் எட்டு வழிகள் பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைசெப்ஃபீனால் ஏ (bisphenol A, or BPA)

பைசெப்ஃபீனால் ஏ (bisphenol A, or BPA)

பைசெப்ஃபீனால் ஏ எனும் இரசாயனம் நாம் பயன்படுத்தும் அனைத்து வகையிலான பிளாஸ்டிக் பொருட்களிலும், அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவு எடுத்து செல்லும் டப்பாக்களில் இருந்து தண்ணீர் பருகும் பாட்டில்கள் வரை அனைத்திலும் இந்த இரசாயனம் கலந்திருக்கிறது. இந்த இரசாயனம் நம் உடலுக்கு எதிர்வினை பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது ஆகும். மற்றும் இவை உங்களது வளர்சிதை மாற்றத்தை சீரான முறையில் செயல்படவிடாமல் தடுக்கிறது.

ஃபோலேட் சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

ஃபோலேட் சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள் உடல் பருமன் அதிகரிக்காது பாதுகாக்கின்றன. மற்றும் நச்சு கிருமிகளை அழிக்க உதவுகின்றன. மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இது உடலுக்கு ஏற்படும் எதிர்வினை பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது என கூறுகின்றனர். ஃபோலேட் சத்துகள் இதய கோளாறுகள் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக போராடும் சக்தி கொண்டது.

கருகிய இறைச்சி உணவுகள் வேண்டாம்

கருகிய இறைச்சி உணவுகள் வேண்டாம்

கிரில் மற்றும் கருகி சமைக்கப்படும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். இது நைட்ரோசமைன் எனும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியை உண்டாக்குவது ஆகும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு கேடு விளைவிக்கும்.

காய்கறிகள்

காய்கறிகள்

முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேல், ப்ராக்கோலி போன்ற உணவுகளில் ஃபோலேட் சத்து நிறைந்து இருக்கிறது. இது இதய பாதிப்புகளை குறைக்கும், உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும், மனநிலையை சாந்தமாக வைக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.

சோடாவை தவித்துவிடுங்கள்

சோடாவை தவித்துவிடுங்கள்

அனைத்து வகை சோடா பானங்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குணம் கொண்டவை ஆகும். அதில் இருக்கும் உயர் உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் உங்கள் உடல்நலத்தை பாதிக்கும். டயட் சோடாவும் ஆரோக்கியத்தை பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை உணவு அவசியம்

காலை உணவு அவசியம்

தினமும் காலை உணவை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இரவு முழுதும் 6 முதல் 7 மணி நேரம் உறங்கிய பின் உடலுக்கு கண்டிப்பாக கலோரிகள் தேவைப்படும். உங்கள் உடற்திறனை அதிகரிக்கவும் சீரான நிலையில் வைத்துக் கொள்ளவும் காலை உணவு அவசியம்.

தயிர்

தயிர்

உங்களது அன்றாட உணவு பழக்கத்தில் தயிரை சேர்த்துக் கொள்வது அவசியம். முடிந்த அளவில் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கோடை காலத்தில் மோராக கூட குடிக்கலாம். தயிர் உங்களுக்கு வயிறு சார்ந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். மற்றும் செரிமானத்தை சீரான முறையில் நடக்க உதவும்.

டீ, காபி

டீ, காபி

டீ மற்றும் காபி உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீரான முறையில் ஊக்குவிக்கிறது. வெறும் டீயாக அல்லாது கிரீன் டீ, கருப்பட்டி டீ , இஞ்சி டீ போன்றவை குடிப்பது உங்களது உடல்நலத்தை அதிகரிக்கும். காபி ஒருநாளுக்கு அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Natural Ways To Boost Your Metabolism

Everyone need to maintain their metabolism for a good and healthy life. Here we have suggested you eight natural ways to boost your metabolism.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter