For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகெங்கிலும் இருக்கும் வியக்கத்தக்க சில ஆரோக்கிய ரகசியங்கள்!!!

|

ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல, ஒவ்வொரு நாட்டிலும் ஒருவகை தனித்துவமான மருத்துவம் அல்லது ஆரோக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் இரசாயனம், வேதியல் ஊடகம் என எந்த ஊடுருவலும் கலப்புகளும் இல்லாத இயற்கையான முறைகள் ஆகும்.

பொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா!!!

உணவை விட சிறந்த மருந்தொன்றும் இல்லை என்ற போதும், சில வேளையில் அந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளததினாலும், அளவிற்கு அதிகமாக உட்கொள்வதினாலும் கூட உடல் பிரச்சனைகள் வருகின்றன. அவ்வாறு நமது உடலில் பிரச்சனைகளோ அல்லது கோளாறுகளோ ஏற்படும் போது இந்நாட்டவர்கள் எல்லாம் எந்தெந்த மாதிரியான ஆரோக்கிய வழிகளை பின்பற்றுகின்றனர் என தெரிந்துக் கொள்ள வேண்டுமா....? தொடர்ந்து படியுங்கள்...

உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தியானம்/யோகா - இந்தியா

தியானம்/யோகா - இந்தியா

இந்தியாவின் தனி சிறப்பு வாய்ந்த ஆரோக்கிய ரகசியம் என்பது தியானமும், யோகாவும். இன்றைய தலைமுறை கொஞ்சம் மறந்திருந்தாலும், இன்று உலகம் முழுவதும் இதை கற்றுக்கொள்ள உச்சி முகர்ந்து முன்வருகின்றனர். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்த உதவும் யோகாவை வைத்து புற்றுநோய்களுக்கு கூட தீர்வு கண்டிருக்கின்றனர்.

அக்குபஞ்சர் - சீனா

அக்குபஞ்சர் - சீனா

சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறை தான் இந்த அக்குபஞ்சர். இப்போது அமெரிக்காவிலும் இது பிரபலம் அடைந்து வருகிறது. ஓர் மெல்லிய ஊசியை உடலில் நரம்பு பகுதிகளில் குத்தி உடல்நிலையை சரி செய்வது தான் இந்த மருத்துவ முறை. இது சோர்வு, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற பல உடல்நல கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது.

மத்தியதரைக்கடல் உணவு - கிரீஸ்

மத்தியதரைக்கடல் உணவு - கிரீஸ்

கிரீஸ் நாட்டில் மத்தியதரைக்கடல் உணவு முறை மிகவும் பிரசித்திப் பெற்றவை. நீங்கள் இதை பற்றி கேள்விப்பட்டிருந்தால் சந்தேகம் அடைய வேண்டாம் அது உண்மை தான். பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன் மற்றும் கோழி, முழு தானியங்கள் போன்ற உணவுகளை பயன்படுத்தி தான் அவர்கள் ஆரோக்கியத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால் இதய கோளாறுகள், வாதம், கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவருகின்றனர்.

முசெலி - சுவிட்சர்லாந்து

முசெலி - சுவிட்சர்லாந்து

முசெலி என்பது ஒரு உணவு வகை. சுவிட்சர்லாந்து மருத்துவர் ஒருவர் நூறு வருடங்களுக்கு முன்பு தனது நோயாளிகளுக்கு வழங்கி வந்து உணவு இது. சுவிட்சர்லாந்து மக்கள் பலரும் இதை காலை உணவாகவும் இரவு உணவாகவும் உண்டு வருகின்றனர். முசெலி எனும் உணவு ஓட்ஸ், தானியங்கள், பழங்கள், மற்றும் நார்ச்சத்து போன்ற கலவையில் உருவாக்கப்படும் உணவு ஆகும். இதை வீட்டிலேயே மிக எளிதாக தயாரித்துவிடலாம்

கப்பிங் தெரபி - எகிப்து

கப்பிங் தெரபி - எகிப்து

இது பண்டைய எகிப்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இந்த முறை சீனாவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் கூட பயன்பாட்டில் இருந்துள்ளது. முதுகில் குவளையை வைத்து அழுத்தம் தந்து செய்யப்படும் இந்த முறையினால் சருமம், மற்றும் இரத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவந்துள்ளனர்.

பான்யா (Banya -sauna) - ரஷ்யா

பான்யா (Banya -sauna) - ரஷ்யா

ரஷ்யாவின் பாரம்பரிய மருத்துவ முறையான பான்யா, மன இறுக்கம் மற்றும் உடல் எடை குறைய பயன்படுகிறது. மற்றும் இது, நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது, சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

குட்டி தூக்கம் - ஜப்பான்

குட்டி தூக்கம் - ஜப்பான்

மதிய உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம். இந்த குட்டி தூக்கத்தை நாம் கடைச்யாக எல்.கே.ஜி அல்லது யு.கே.ஜி.'யில் தான் தூங்கியிருப்போம். இதை பலரும் வேடிக்கையாக நினைக்கலாம். ஆனால், கூகுள் நிறுவனத்தில் பின்பற்றப்பட்டு வரும் முறை இதுவாகும். இது உங்கள் மன இறுக்கத்தையும், மன சோர்வையும் குறைக்கிறது. பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமாக இருப்பது இந்த மன அழுத்தம் தான் அதை சரி செய்ய தான் இந்த முறையை ஜப்பான் மக்கள் பின்பற்றுகின்றனர்.

சைக்கிலிங்க் - நெதர்லாந்து

சைக்கிலிங்க் - நெதர்லாந்து

நெதர்லாந்து மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சைக்கிலிங்க் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்த நாட்டில் 30%-திற்கும் மேலானவர்கள் தங்களது தினசரி பயணத்திற்கு சைக்கிலிங்க் தான் செய்கின்றனர். இது அவர்களது உடல்நலத்தை அதிகரிக்க நன்கு உதவுகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Health Secrets From Around the World

Your personal routine to stay healthy might seem universal, but there are so many different ways people around the world strive to live a healthy lifestyle, both mentally and physically.
Story first published: Thursday, April 2, 2015, 17:59 [IST]
Desktop Bottom Promotion