Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
வயாகரா பற்றி நீங்கள் அறிந்திராத 7 விஷயங்கள்!
"வயாகரா" என்றாலே பருவம் எட்டியவர் முதல் முதுமை பற்றியவர் வரை அனைவரும் அறிந்த விஷயமே! உடலுறவில் உச்சம் கண்டிட, ஆண்மை அதிகரிக்க, படுக்கையில் ஆண்கள் நின்று பேசிட மனிதன் கண்டுப்பிடித்த மட்டற்ற மருந்து! இன்று வரையிலும் கூட நண்பர்கள் யாராவது வெளிநாடு சென்றால் வயாகரா வாங்கி வர சொல்லும் முதுமையில் பதுமையை விரும்பும் தோழர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த பத்து உணவுகள்!
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக ஆண்மகன்களை இன்பத்தில் திளைக்க உதவிக் கொண்டிருக்கும் வயாகராவினால் ஏற்படும் பக்க விளைவுகள், பக்கா விளைவுகளை ஏற்படுத்துகின்றன என யாரும் அறியவில்லை. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா, தொடர்ந்து படியுங்கள்...

கண் பார்வை குறைப்பாடு
வயாகராவில் சேர்க்கப்படும் சில்டெனெஃபில் (Sildenafil) எனப்படும் மூலப்பொருள் விழித்திரையில் இருந்து மூளைக்கு ஒளியை எடுத்து செல்லும் முக்கிய என்சைமை செயலிழக்க வைக்கிறது. இதனால் கண் பார்வையில் குறைப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கண் பார்வை இழந்தவர்கள்
2௦12 ஆம் ஆண்டு 86 வயது முதியவர் வயாகராவை தொடர்ந்து பயன்படுத்தியதினால், என் கண் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது என வழக்கு தொடர்ந்து, அதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தி, இரண்டு மில்லியன் டாலர் இழப்பீடும் வாங்கியுள்ளார்.

ஆண்மை தொலைந்தது!
கொலம்பியாவை சேர்ந்த 66 வயது முதிய உழவர், தனது புதிய பெண் தோழியை மகிழ்விக்க அதிகப்படியாக வயாகராவை உட்கொண்டதினால் திடீரென ஆண்குறியில் எரிச்சலும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது. பின் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட போது, அவரது ஆண்குறி அழுகிவிட்டது இப்படியே விட்டால் உடலில் உள்ள மற்ற பாகங்களையும் இது பாதிக்கும் என துண்டித்துவிட்டனர்.

பெண்களுக்கான வயாகரா
பல மருந்து தயாரிப்புக் கம்பெனிகள் தாங்கள் வயாகரா போலவே பெண்களுக்கான மருந்து கண்டுபிடித்துள்ளோம், இது பெண்கள் இன்பமடைய உதவும் என கூறுகிறார்கள். ஆனால், அவை அனைத்துமே எந்த பயனும் அளிப்பதில்லை. அவை யாவுமே எந்த ஒரு அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் (FDA) அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்பதே உண்மை. மாறாக பெண்குறி மூலம் அவர்கள் இன்பம் அடைந்திட மட்டுமே உதவுகிறது.

மாதவிடாயை கட்டுபடுத்த...
மாதவிடாய் பிடிப்பின் காரணமாக அவதியடையும் பெண்கள் வயாகராவை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என ஒரு ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள். ஆராய்ச்சியின் மூலம் தெரியவருவது என்னவெனில், வயாகராவில் இருக்கும் சில்டெனெஃபில் (Sildenafil) எனப்படும் மூலப்பொருள் இரத்த நாளங்கள் விரிய உதவுகிறது. இதனால் பெண்களுக்கு இடுப்பு வலி குறைய உதவும். ஆயினும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொப்பையை குறைக்க...
இல்லற வாழ்க்கையை இன்பமாக்கிட மட்டுமல்லாமல் வயாகரா உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக உங்களது வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள சதையைக் குறைக்க வெகுவாக உதவுகிறது. வயாகரா உடல் எடை சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வயாகரா ஐஸ்க்ரீம்
பிரிட்டிஷில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் விடுதியில் 25 மில்லி கிராம் அளவு வயாகரா கலக்கப்பட்டு, "அரௌஸல்" (Arousal) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஐஸ்க்ரீம் விற்கப்படுகிறது. இப்படி ஒரு ஐஸ்க்ரீம் தயாரிக்க அந்நாட்டு கவர்ச்சி நடிகை ஒருவர் தான் யோசனை கூறியுள்ளார் என்பது கொசுறு தகவல்.



Click it and Unblock the Notifications
