உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஊருக்குள் பெரிய பிஸ்தாவாக திரிந்தாலும், என்னதான் தைரியசாலியாக இருந்தாலும், "அந்த" விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக கேள்வி கேட்க தயங்குவார்கள். ஒருவேளை கேள்வி கேட்டு இது கூடவா தெரியாது என கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சம் சிலருக்கு. சிலர் இதைப் பற்றி எல்லாம் வெளியில் யாரிடமாவது கேள்வி கேட்டால் நம்மை தவறாக கருதிவிடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

ஆனால், அனைவரின் மனதிலும் இதைப் பற்றிய கேள்விகள் சில புதைந்தே இருக்கும் பல காலமாக. அப்படி நீங்கள் செக்ஸ் வாழ்க்கைப் பற்றி கேட்க தயங்கும், சங்கடமாக நினைக்கும் கேள்விகளுக்கு, இங்கே விடைகள் தரப்பட்டுள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்பு இருகிறதா?

ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்பு இருகிறதா?

உண்மையில் ஆணுறுப்பு எலும்பால் ஆனா பகுதி அல்ல. அதனால் முறிவு ஏற்பட வாய்புகள் இல்லை. எனினும் காயம் அல்லது பாதிப்பு ஏற்பட வாய்புகள் உள்ளன. சில செக்ஸ் நிலைகளில் உறவு மேற்கொள்ள நீங்கள் விரும்பும் போது எதிர்பாராத விதத்தில் காயங்கள் ஏற்பட வாய்புகள் உள்ளன. ஆனால், ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. உறவு கொள்ளும் போது எதாவது காயம் ஏற்பட்டால் அல்லது வலி ஏற்பட்டால் குறித்த மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளவும்.

பெண் உறுப்பினுள் காண்டம் சென்றுவிட்டால்?

பெண் உறுப்பினுள் காண்டம் சென்றுவிட்டால்?

முதலில் நீங்கள் பயப்பட தேவை இல்லை. இந்த பிரச்சனை பலருக்கு ஏற்படுகிறது. இதை நீங்கள் சுலபமாக எடுத்துவிடலாம். முதலில் முழுமையாக உங்கள் உறுப்பில் இருந்து காண்டமை எடுத்துவிட்டீர்களா என உறுதி செய்துக்கொள்ளுங்கள். பின் காண்டமில் இருந்து எதவாது கசிவு ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்து பாருங்கள். எல்லாம் சரியாக இருந்தும் உங்கள் மனதில் பயமாக இருந்தால், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இதனால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்புகள் இல்லை. இல்லையேல் இனிமேல் மாற்றுவழியாக நீங்கள் கருத்தடை மாத்திரைகளை உபயோகப்படுத்தலாம்.

செக்ஸ் உறவில் உச்சம் ஏற்படுவது இல்லை?

செக்ஸ் உறவில் உச்சம் ஏற்படுவது இல்லை?

பெரும்பாலான பெண்கள் இதை பெரும் பிரச்சனையாக கருதுகின்றனர். ஆனால், இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள் உச்சம் கொள்வதில் கொஞ்சம் பின் தங்கி தான் இருப்பார்கள். பெண்கள் உச்சம் அடைய ஆண்கள் தான் உதவ வேண்டும். அப்படியும் பெண்களுக்கு உச்சம் ஏற்படாவிட்டால், அதற்கு உங்களது மன அழுத்தம், இதய கோளாறுகள் கூட காரணமாய் இருக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை செய்து, அதற்கு ஏற்ற மருந்துகள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

செக்ஸ் உறவின் போது சிறுநீர் வெளிப்படுவது?

செக்ஸ் உறவின் போது சிறுநீர் வெளிப்படுவது?

உண்மையில் இது சிறுநீர் வெளிபடுதல் அல்ல, ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது போல. பெண்களுக்கும் பெண் உறுப்பில் இருந்து ஒரு வகை நீர் வெளிப்படுவது பொதுவான விஷயமாகும். இது நீங்கள் உறவில் உச்சம் அடையும் போது ஏற்படும். அதனால் இதற்காக அச்சம் அடைய தேவை இல்லை.

உடலுறவு மேற்கொள்ளும் போது சத்தம் வருதல்?

உடலுறவு மேற்கொள்ளும் போது சத்தம் வருதல்?

பொதுவாகவே உடல் உறவு மேற்கொள்ளும் போது ஆணுறுப்பு பெண்ணுருப்பினுள் சென்று வரும் போது சத்தம் வரும். இது இயற்கையாகவே ஏற்படும் சத்தம் தான். சிலருக்கு இது ஏற்படாமல் கூட இருக்கலாம். இதை ஒரு பிரச்சனையாக கருத்தில் கொள்ள தேவை இல்லை.

உறவுக்கொள்ளும் போது நிறைய வியர்வை வருவது?

உறவுக்கொள்ளும் போது நிறைய வியர்வை வருவது?

உடலுறவு மேற்கொள்ளும் போது வியர்வை வெளிப்படுவது சாதாரண விஷயம் தான். அனைவருக்கும் வியர்வை வெளிப்படும். சிலருக்கு அவரவர் உடலை பொறுத்து வியர்வை அதிகமாகவோ குறைவாகவோ ஏற்படலாம்.

ஆசனவாயில் உறவு கொள்வது சரியா?

ஆசனவாயில் உறவு கொள்வது சரியா?

இது தவறல்ல, ஆயினும் அவ்வாறு உறவுக் கொள்ளும் போது காண்டம் உபயோகப்படுத்துவது அவசியம். ஏனெனில், பாக்டீரியா தாக்கம் ஏற்படாமல் இருக்க இது உதவும். மற்றுமொரு விஷயம் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது, நீங்கள் மீண்டும் பெண்ணுறுப்பில் உறவு கொள்ளப் போகிறீர்கள் எனில் வேறொரு புதிய காண்டம் உபயோகப்படுத்தத் வேண்டும். அதே காண்டமை உபயோகப்படுத்துவது பெண்ணுறுப்பில் பாக்டீரியா தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆணுறுப்பு வளைந்து காணப்படுவது?

ஆணுறுப்பு வளைந்து காணப்படுவது?

ஆணுறுப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவிலும், நிறத்திலும் இருப்பது இயல்பு. சிலருக்கு நேராக இல்லாமல் சிறிது வளைந்தும் காணப்படலாம். இதுவும் இயல்பான விஷயம் தான். நிறைய பேருக்கு இதுப்போல இருக்கும். எனினும், நீங்கள் உடல் உறவு மேற்கொள்ளும் போது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில், சில சமயம் திடீரென அதிகம் வளைய ஆரம்பித்தால் இது பெய்ரோனி (Peyronie) எனும் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஆண்குறியின் அளவு?

ஆண்குறியின் அளவு?

ஆண்குறியின் அளவின் காரணமாக (பெரியதாகவோ அல்ல சிறியதாகவோ) பெண்களுக்கு வலி அல்லது உறவில் உச்சம் காண இயலவில்லை எனில், அதை வெளிப்படுத்துவது தான் சரியான முறை. இன்றைய அதிநவீன மருத்துவ முறைப்படி ஆண்குறியை சரியான அளவில் வைத்துக் கொள்ள இயலும். எனவே, ஆண்குறியின் அளவை குறித்து கவலைப்பட தேவை இல்லை. இதை உங்கள் மனதின் உள்ளேயே வைத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கு ஏற்ற சிகிச்சைப் பெற்று தீர்வு காணுங்கள்.

வாய்வழி பேசுதல்

வாய்வழி பேசுதல்

உறவுக்கொள்ளும் போது ஆண்கள் பெண்களிடம் பேசுதல் அவசியம். மற்றும் அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். பெண்களுக்கு சில பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும் அந்த பகுதிகளை ஆண்கள் மென்மையாக கையாள்வது அவசியம். அதேப்போல ஆண்கள், பெண்களின் உணர்ச்சியை தூண்ட நிறைய பேச வேண்டும். இது அவர்கள் உச்சம் அடைய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Embarrassing Love Making Questions You Are Too Afraid To Ask

Do you want to get answers for the 10 embarrassing love making questions, which you are too afraid to ask.
Subscribe Newsletter