Latest Updates
-
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்க சில அருமையான வழிகள்!!!
எப்போதும் வீட்டில் உள்ளோர் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனெனில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால், அது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீர் வெளியேற்றும் போது மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதோடு, எரிச்சல் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், சிறுநீரக கற்கள் ஏற்படக்கூடும். மேலும் சருமம் மற்றும் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தண்ணீர் குடிப்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் நிறைய பேருக்கு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது. சிலருக்கு எப்படி உடலில் அதிக அளவில் நீர்ச்சத்தை சேர்ப்பது என்று தெரியாது.
அப்படி தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வண்ணம், நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம். இதனால் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
இப்போது உடலில் எந்த பிரச்சனையும் வராமல், நல்ல அழகான சருமம், வலுவான கூந்தல் போன்றவற்றைப் பெற எப்படியெல்லாம் உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.

வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
சிலருக்கு வெளியே செல்லும் போது தாகம் அதிகம் இருக்கும். அப்போது கடைகளில் தண்ணீர் வாங்கி குடிப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு, பலர் தாகத்துடனேயே இருப்பார்கள். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது ஒரு பாட்டில் நீரை கொண்டு செல்லுங்கள். இதனால் தாகத்தின் போது உடனே தண்ணீர் குடிக்கலாம்.

ஜூஸ்
நிச்சயம் அனைவருக்கும் ஜூஸ் பிடிக்கும். எனவே தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள், உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க ஜூஸ்களை அதிகம் குடிக்கலாம்.

இளநீர்
இளநீரும் அனைவருக்கும் பிடித்த ஒரு ஆரோக்கியமான பானம். இதனை குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன், சிறுநீர் பிரச்சனை மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை தடுக்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
எண்ணற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. எனவே அத்தகைய காய்கறிகள் மற்றும் பழங்களை அவ்வப்போது சாப்பிடலாம். அதிலும் தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்டால் நல்லது.

காப்ஃபைனை தவிர்க்கவும்
முக்கியமாக உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வறட்சியை ஏற்படுத்தக்கூடியவை.



Click it and Unblock the Notifications