Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்!!!
தொப்பையை குறைக்கும் போராட்டாம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. போர்க்கள எல்லைக்கோடுகள் வயிற்றில் வரையப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் பலரும் முதன்மையாக சொல்லும் குறை தங்கள் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பே. வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை எதிர்த்து எப்படி போராடுவது என்பதை பற்றி பல கதைகளும் நிஜங்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன.
இதுப்போன்று வேறு படிக்க: அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!
வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பைப் பற்றி 10 தகவல்களை கீழே தெரிவித்துள்ளோம். உங்கள் டயட் திட்டத்தில் உள்ள கட்டுக்கதைகளை பிரித்தெடுக்க இது உதவிடும். பிறகென்ன, வெற்றிக்கான சாலை உங்கள் முன்னால்!

உடலின் மற்ற கொழுப்புகளை விட இது மோசமானது
மனித உடலில் உள்ள கொழுப்பின் ஆபத்து தன்மை அதன் வகைகளால் மட்டுமல்ல. மாறாக அது உடலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை பொருத்தும் அமையும். வயிற்றில் உள்ள கொழுப்பு மிகவும் ஆபத்தானவை. காரணம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் வயிற்று பகுதியை சுற்றியே இருக்கிறது. இந்த கொழுப்பு அவைகளை சூழ்ந்து கொள்ளும். இதனால் வயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள கொழுப்பு பல விதமான ஹார்மோன்களை விடுவிக்கும். இது அருகிலுள்ள உறுப்புகளுக்கு ஆபத்துக்களை உண்டாக்கலாம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் வயிற்றில் கொழுப்பு உண்டாகும்
அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வயிற்று கொழுப்பை குறைக்க இப்போது போராட காரணமாக விளங்குவது அவர்களின் அமர்ந்தியங்கும் வாழ்க்கை முறையே. பொதுவாக அமெரிக்க மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் தங்களின் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். தொலைக்காட்சியை அனைத்து விட்டு, சற்று எழுந்து நடந்தால், சும்மா உட்கார்ந்து நொறுக்குத்தீனி உண்ணுவது குறையும்.
தொலைகாட்சி பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்து கொண்டவர்கள், தினமும் 100 கலோரிகளை குறைக்கின்றனர்கள். இது 35 நாளில் 1 பவுண்ட் எடையை குறைப்பதற்கு சமமாகும். ஒவ்வொரு வாரமும் சற்று நடை கொடுத்தால், வயிற்றின் கொழுப்பு ஓரளவுக்கு குறையும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வாரத்திற்கு சுறுசுறுப்பாக 3 மணி நேரத்திற்கு நடை கொடுக்க வேண்டும்.

மன உளைச்சலும் வயிற்று கொழுப்பை அதிகரிக்கிறது
நம் ஒவ்வொருவருக்கும் தற்போதைய வாழ்க்கை முறையானது மன உளைச்சலை உண்டாக்குகிறது. ஆனால் ஒவ்வொருவரும் இந்த உளைச்சலின் அளவை அவரவர் திறனுக்கேற்ப கையாளுகின்றனர். நம் உடல் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை உணர்கையில், அதிக அளவிலான கார்டிசோல் வெளிப்படுகிறது. இது பசியை தூண்டும் ஹார்மோன் ஆகும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு கார்டிசோம் வேகமாக வெளியேறும். அதனால் அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுவதாலேயே அவர்களின் பசி அடங்கும்.
அடுத்த முறை மன அழுத்தம் அதிகரிக்கும் போது, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உங்கள் மூச்சின் ஓசையையே கேளுங்கள். ஏன் நகைச்சுவையை கூட இதற்கு தீர்வாக எடுத்துக் கொள்ளலாம். நன்றாக சிரித்தால் உங்கள் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் உங்கள் இரத்த குழாய்கள் அமைதி பெற்று கார்டிசோல் அளவுகளும் குறையும்.

வயிற்று உடற்பயிற்சிகள் கொழுப்பை குறைக்காது
வயிற்று உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் வயிற்று கொழுப்பை குறைத்து சிக்கென மாறலாம் என தினமும் பல விதமான விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
துரதிஷ்டவசமாக, இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு அவர்களின் கனவு கனவாகவே முடியும். அவர்கள் கூறும் வயிற்று பகுதி உடற்பயிற்சிகள் உடலில் உள்ள முக்கிய தசைகள் மற்றும் மற்ற இடங்களுக்கானவை. அதனால் அதனை வைத்து உடனுக்குடன் வயிற்று கொழுப்பை குறைக்க முடியாது. சிட்-அப் போன்ற உடற்பயிற்சிகளால் உங்கள் வயிற்று தசைகள் வலுவடையும். ஆனால் அவைகள் உங்கள் வயிற்று கொழுப்பை கண்டிப்பாக நீக்காது. இருதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் மட்டுமே உங்கள் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும்.

வயிற்றின் கொழுப்பை குறைக்க தீவிர உடற்பயிற்சி தேவையில்லை
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை போல் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அவர்களின் உடல் எடை பெருமளவில் குறையும் என்று பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் விளம்பரப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வயிற்று கொழுப்பை குறைக்க தீவிர இதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் தேவையில்லை. எளிய நடை கொடுத்தல், ஓடுதல் மற்றும் ஜிம்மில் செய்யப்படும் பிற கார்டியோ உடற்பயிற்சிகள் உங்கள் வயிற்று கொழுப்பை நீக்க உதவும்.

கலோரி எண்ணிக்கை வேலைக்காகாது
பல டயட் திட்டங்களும், இதர புகழ் பெற்ற திட்டங்களும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு தேக்கத்தை எதிர்த்து போராட உங்களுக்கு உத்திரவாதம் அளிக்கும். தினசரி அடிப்படையில் இது உங்கள் கலோரிகளின் எண்ணிகையை குறைப்பதாலேயே இது சாத்தியமாகிறது என்று கூறுகின்றனர்.
ஆனால் உங்கள் உணவில் கலோரி குறைவான உணவை உட்கொண்டாலும், கண்டிப்பாக உங்கள் வயிற்றின் கொழுப்பு குறையப்போவதில்லை. ஆகவே நீங்கள் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை விட என்ன வகையான உணவு உண்ணுகிறீர்கள் என்பதே முக்கியம்.

உணவு ரீதியான கொழுப்பை குறைப்பது வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு சமமாகாது
கொழுப்பை குறைப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளவர்கள், உடலிலுள்ள அனைத்து வகையான கொழுப்பையும் ஒரே மாதிரியாக பார்க்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் என உணவை இரண்டு வகையில் பிரிக்கலாம். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆரோக்கியமான கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கலோரி உட்கொள்ளும் அளவை குறைப்பது வயிற்று கொழுப்பை குறைக்காது. அதே போல், கொழுப்பு அடங்கிய உணவுகள் உண்ணுவதை குறைத்தாலும் வயிற்று கொழுப்பு குறைவதில்லை. ஆரோக்கியமான கொழுப்புக்கு நல்ல உதாரணமாக மெடிட்டரேனியன் வகை டயட்டை கூறலாம். ஆரோக்கியமான கொழுப்புகள் வளமையாக இருக்கும் இவ்வகை உணவுகளில் அதிக அளவிலான ஆலிவ் எண்ணெய் மற்றும் நட்ஸ் அடங்கியிருக்கும்.

சில உணவுகள் வயிற்று கொழுப்புகளை குறைக்க உதவும்
சில வகை உணவுகள் உங்கள் வயிற்றுக்கு ஆபத்தை உண்டாக்கினாலும் கூட, சில வகை உணவுகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைத்து கொழுப்பின் தேக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
ஆப்பிள் சீடர் வினிகர் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஒரு ஆய்வில், பங்கு பெற்றவர்களை தினமும் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் பருகச் சொல்லியுள்ளனர். அப்படி பருகியவர்கள் வயிற்று கொழுப்பை வேகமாக குறைத்தனர். கூடுதலாக, உடலின் கலோரி மற்றும் கொழுப்பு அமைப்புக்கும் தூண்டுதலாக உள்ளது கிரீன் டீ. அதற்கு காரணம் அதிலுள்ள கேட்சின்ஸ்.

தொப்பையை அளக்க பவுண்ட் பதிலாக இன்ச்சை பயன்படுத்தவும்
உடல் எடையை குறைக்க பாடுபட்டு கொண்டிருக்கும் யாரேனும் ஒருவரை கேளுங்கள். தங்களின் முதல் எதிரி எடை பார்க்கும் மெஷின் என்று தான் சொல்வார்கள். எடை பார்க்கும் மெஷின் மீது ஏறினால் அதில் காட்டும் எண்ணை பார்க்க அவர்கள் பயப்படுவார்கள். டயட் திட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கும் எடை அவர்களின் மனதை பாதிப்படைய செய்வதால், அவர்கள் இலக்கை அடைவதில் தடுமாறுவார்கள்.
வயிற்று கொழுப்பை குறைப்பதில் வெற்றிப்பெற பவுண்ட் அளவில் கணக்கிடாமல் இன்ச் அளவில் கணக்கிடுங்கள். ஒரு அளவு டேப் ஒன்றை வாங்கிக்கொண்டு, உடற்பயிற்சிக்கு முன் உங்கள் இடையை சுற்றி அளந்து கொள்ளுங்கள். அப்போது தான் எவ்வளவு கொழுப்பு கரைகிறது என்பது தெரியும். வாரங்களும் மாதங்களும் செல்கையில், குறைந்து கொண்டிருக்கும் உங்கள் இடையை இன்ச் அளவில் அளந்து பாருங்கள். நம் உடல் எடை தினமும் ஏற்றம் இறக்கமாக தான் இருக்கும். அதற்கு காரணம் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் மாற்றங்கள்.

அதிகமாக உட்கொண்டும் கூட வயிற்று கொழுப்பை குறைக்கலாம்
அதிகமாக உட்கொள்வது என்றால் அதிக தடவை உட்கொண்டும் கூட வயிற்று கொழுப்பை குறைக்கலாம். சொல்லப்போனால், நீங்கள் மாறுபட்ட டயட் திட்டத்தை இன்னமும் பின்பற்ற தொடங்கவில்லை என்றால் முதலில் அதனை ஆரம்பியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு (காலை, மதியம் மற்றும் இரவு) என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு தான் நீங்கள் வளர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாளைக்கு 3 முறை உண்ணுபவர்களை விட, குறைந்த அளவில் 5 அல்லது 6 முறை உட்கொண்டால், இடை மெலியும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.



Click it and Unblock the Notifications











