Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்...
தற்போது உலகளவில் நீரிழிவு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இந்த நீரிழிவு நோய்க்கு பெரியோர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அளவுக்கு அதிகமான அளவில் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய சர்க்கரையானது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, இந்நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் அதிகப்படியான அளவில் சர்க்கரையை சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, நீரிழிவு ஏற்படுவதோடு, இதய நோய், மூட்டு வலி மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும்.
பெரும்பாலானோர் டீ, காபி போன்றவற்றில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்து தான் குடிப்பார்கள். மேலும் சிலர் இனிப்பு உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வாறு இனிப்பு சுவைக்கு பலர் அடிமைகளாக உள்ளனர். ஆனால் அதிகம் சர்க்கரை உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் உடனடியாக முற்றிலும் சர்க்கரையை குறைக்கக்கூடாது. அது மிகவும் தவறான செயல். அதற்குபதிலாக, கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இனிப்புக்களை குறைக்க வேண்டும். இப்போது அத்தகைய சர்க்கரை சேர்த்த இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை எப்படி ஆரோக்கியமான வழியில் குறைப்பது என்று பார்ப்போம்.

சர்க்கரை
முன்பே சொன்னது போல், சர்க்கரையை உடனே குறைக்க முடியாது. ஆகவே சர்க்கரை சேர்க்கும் உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை மெதுவாக குறைக்க வேண்டும். உதாரணமாக, தினமும் இரண்டு பார் சாக்லெட் சாப்பிட்டால், இனிமேல் அதில் ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும்.

பானங்கள்
பெரும்பாலான பானங்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஏன், பழ ஜூஸில் கூட சர்க்கரையை சேர்த்து தான் செய்வோம். முக்கியமாக இத்தகைய பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையை நிச்சயம் தவிர்க்க முயல வேண்டும். ஏனெனில் மற்ற முறையில் சர்க்கரையை சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புக்களை விட, நீர்மங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையை சாப்பிட்டால், நீர்மத்தில் உள்ள சர்க்கரையானது நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடும்.

செயற்கை இனிப்பு பொருட்கள்
மிட்டாய், சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்பு பொருட்கள் மிகவும் ஆபத்தானது. எனவே இத்தகையவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஜாம்
ஜாம்களில் அதிகப்படியான அளவில் சர்க்கரையானது இருக்கும். எனவே இத்தகைய உணவுப் பொருட்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

ஃப்ளேவர்டு தயிர்
ஃப்ளேவர்டு தயிர்களிலும் சர்க்கரையானது அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை சாப்பிட்டாலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது உடனே அதிகரித்துவிடும். எனவே இத்தகைய தயிர்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஸ்கிம்டு தயிரை சாப்பிடலாம்.

பழச்சாறு
பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் இயற்கையான சர்க்கரை நிறைந்துள்ளது. இருப்பினும் நிறைய மக்கள், அதன் சுவையை இன்னும் அதிகமாக்குவதற்கு சர்க்கரையை சேர்த்து சாப்பிடுகின்றனர். ஆகவே சர்க்கரை சேர்க்காமல், இயற்கை சர்க்கரையை ரசித்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

உலர் பழங்கள்
இனிப்பு சுவையை கட்டுப்படுத்த முடியாதவர்கள், உலர் பழங்களில் பேரிச்சம் பழம், ஆப்ரிகாட் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிடலாம். இதனால் இனிப்பு சாப்பிட்டது போன்றும் இருக்கும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பாதி ஸ்பூன் சர்க்கரை
அனைவருக்குமே காபி, டீ, தயிர் மற்றும் பாலில் சர்க்கரை சற்று அதிகம் சேர்த்து குடிப்பது பிடிக்கும். இனிமேல், அதிகம் சேர்க்காமல், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், அதில் பாதியை மட்டும் சேர்த்து குடித்து பழக வேண்டும்.

ஐஸ் க்ரீம்
உணவு சாப்பிட்ட பின் அல்லது ஐஸ் க்ரீம் கடையை பார்த்ததும், ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றும். ஆனால் அத்தகைய ஐஸ் க்ரீமிலும், இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் செயற்கை இனிப்புக்களானது அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும் இந்த செயற்கை இனிப்புகள் வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் பிரச்சனைகளை உண்டாக்கும்.

வேப்பிலை அல்லது பாகற்காய்
இவை இரண்டுமே இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். மேலும் இவை இரண்டுமே கசப்பாக இருந்தாலும், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், நீரிழிவு நோயை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
