For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய 20 சிறந்த முதலீடுகள்!!!

By Super
|

ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எல்லோருக்கும் அமைய வாய்ப்புகள் உள்ளன. 100 வயதிற்கும் மேல் சிறப்பாக வாழும் வழிமுறைகளை அன்றைய காலத்திலேயே யோகிகளும், ஞானிகளும் வகுத்துள்ளனர். அவர்கள் செய்ததெல்லாம் சுத்தமான காற்று, தேவையான உடற்பயிற்சி, உடலுக்கேற்ற உணவு போன்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தது மட்டும் தான். இன்றைய 21-ம் நூற்றாண்டின் இளைய தலைமுறைக்கு இந்த வழிமுறைகளை ஒரு அரிய முதலீட்டு வாய்ப்புகளாக அறிவிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

ஒருவர் தன்னுடைய இளம் வயதில் எல்லா வகையிலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். இதனால் பின்னாளில் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எளிதாக அடைவதற்கும் மற்றும் அதனை பராமரிப்பதற்கும் உதவுகிறது. எந்த வகை மூலதனமாக இருந்தாலும், அதன் நோக்கம் இன்று செய்யும் செயல் மூலம், நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ காப்பீடு

மருத்துவ காப்பீடு

ஆரோக்கியமான வாழ்க்கையின் முதல் படி இதுதான். ஆகவே மருத்துவ காப்பீடு செய்யமாலிருந்தால் இப்பொழுதே அதனை செய்து விட விடவும். எப்படியாயினும் ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செய்து கொள்வது மிகவும் இன்றியமையாத விஷயமாகும். எப்பொழுது வேண்டுமானாலும் உடல் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்று தெளிவாக உணர்ந்துள்ள நமக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மிகவும் இன்றியமையாத தேவையாகும்.

மருத்துவ பரிசோதனைகள்

மருத்துவ பரிசோதனைகள்

மருத்துவ காப்பீடு செய்த பின்னர், உடல் நலமாக இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவும். மருத்துவ பரிசோதனைகளால் சில நன்மைகளும் ஏற்படும். மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலமாக, உடல் கெட்டுப் போவதை தடுத்து, வாழ்நாளை அதிகரிக்கச் செய்யலாம்.

பலம் தரும் பழங்கள்

பலம் தரும் பழங்கள்

உடல் நலமாக இருக்கவும், அதனை பராமரிக்கவும், பழங்களில் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் பழங்களை வாங்கி சாப்பிடுவதை மறந்து விடக் கூடாது. அதிலும் மிகவும் மலிவாக கிடைக்கும் பழமான வாழைப்பழம் கூட, தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மூலம் சில வகை புற்றுநோய்கள், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து தப்பிக்கலாம். எனவே பல்வேறு சத்துக்கள் அடங்கிய கார்போஹைட்ரேட் உடைய உணவுகளான தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பீன்ஸ் ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவதில், சிறிது முதலீட்டை வையுங்கள்.

காலை உணவு

காலை உணவு

தினமும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவதற்காக முதலீடு செய்வதை உறுதி செய்யவும். அதிலும் ஒரு நல்ல காலை உணவானது ஆரோக்கியமான உடலுக்கு சாவியாகும். சத்தான காலை உணவு, உடலுக்கு சக்தியை கொடுத்து, நாள் முழுக்க நன்கு திறமையுடன் செயல்பட அவசியமாகிறது.

ஆரோக்கியமான எண்ணெய்

ஆரோக்கியமான எண்ணெய்

ஆரோக்கியமான எண்ணெய் வகைகளான ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் க்ரனோலா எண்ணெய் ஆகியவற்றை சாப்பிட முதலீடு செய்யுங்கள். சுத்திகரிக்கப்பட்ட மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான எண்ணெயை ஏற்றுக் கொள்வது, ஆரோக்கியமான உணவு திட்டத்திற்கு அடிப்படையானதாகும்.

வாயை சுத்தப்படுத்தும் பொருட்கள்

வாயை சுத்தப்படுத்தும் பொருட்கள்

பல் மருத்துவரின் ஆலோசனைப்படி டூத் பிரஷ், நாக்கு துலக்கிகள் மற்றும் பிற வாய் சுத்தப்படுத்தும் பொருட்களை அவ்வப்போது மாற்றிடவும். டூத் பிரஷ் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட்டால், அது தனது வலிமையை இழந்து பற்களின் உட்பகுதிகளை சரியாக சுத்தம் செய்யாது போகும். மேலும், நல்ல டென்டல் ப்ளாஷ் மற்றும் ப்ளூரைடு டூத் பேஸ்ட்களை வாங்குவதில் முதலீடு செய்யுங்கள்.

சன் கிளாஸ்கள்

சன் கிளாஸ்கள்

நல்ல தரமான அல்ட்ரா வயலட் (புறஊதாக்கதர்கள்) கண்ணாடிகளை வாங்கிடுவதில் முதலீடு செய்யுங்கள். ஒரு ஜோடி அல்ட்ரா வயலட் கண்ணாடிகள், மிடுக்கான தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல் சுட்டெறிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து கண்களையும் காப்பாற்றும்.

தரமான படுக்கை

தரமான படுக்கை

இரவில் நன்கு உறங்குவது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும். நல்ல தரமான பஞ்சுகளையுடைய மெத்தை, சிறந்த ஓய்வைத் தருவதோடு, தேவையில்லாத முதுகு வலிகளையும் மற்றும் அதன் தொடர்ச்சியாக விழித்தெழுந்து அவதிப்படுவதையும் தவிர்த்து விடும்.

சன் ஸ்கிரீன் லோசன்

சன் ஸ்கிரீன் லோசன்

நல்ல தரமான சன் ஸ்கிரீன் லோசன்களை வாங்குவதில் முதலீடு செய்வது, தோல்களை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

உடற்பயிற்சிக்கான பாய்

உடற்பயிற்சிக்கான பாய்

ஒரு நல்ல உடற்பயிற்சி செய்வதற்கான பாயை வாங்கினால், அது அவ்வப்போது யோகாசனம் செய்யப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடலை வளைத்து சில உடற்பயிற்சிகளையும் செய்வதற்கான முதலீடாகும்.

ஸ்பா (Spa)

ஸ்பா (Spa)

அவ்வப்போது ஸ்பாவிற்கோ அல்லது மசாஜ் செய்யும் இடத்திற்கோ சென்று, உடலுக்கு விருந்து வைக்க வேண்டும். ஒரு நல்ல உடல் மசாஜ் மனதை தேவையில்லாத அழுத்தத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், முதுகு, கழுத்து மற்றும் பிறபகுதிகளில் விழுந்துள்ள தேவையற்ற முடிச்சுகள் மற்றும் முறுக்குகளை நீக்கி, புத்துணர்வுடையவராகவும் மற்றும் ஆற்றல் மிக்கவராகவும் மாற்றிவிடும்.

உடற்பயிற்சி கருவிகள்

உடற்பயிற்சி கருவிகள்

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் கூட அது சிறந்த பலனைத் தருவதை நாம் அறிவோம். அவ்வாறு உடற்பயிற்சி செய்ய முடியாத போது, வீட்டிலேயே சில அடிப்படையான உடற்பயிற்சி கருவிகளை வாங்கி வைப்பது நல்ல முதலீடாக இருக்கும். சாதாரணமாக உடற்பயிற்சியாக தோன்றும் ஸ்கிப்பிங் கயிறு பயிற்சி கூட மிகச் சிறந்த பலனை தரும்.

வெளியே செல்வது

வெளியே செல்வது

அலுவலகத்தின் குறிக்கோள்களை, திட்டங்களை அவசரம் அவசரமாகவோ அல்லது நிதானமாகவோ வாரம் முழுவதும் செய்து முடித்த பின்னர், வார விடுமுறைகளுக்கு வெளியே சென்று வந்தால், உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

உணவில் பசுமையான காய்கறிகளையும் மற்றும் மிதமான புரோட்டீன்களையும் சேர்த்துக் கொள்வது நல்ல முதலீடாக இருக்கும்.

இயற்கை உணவுகள்

இயற்கை உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக நேரடியான இயற்கை உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுங்கள். புத்துணர்ச்சி மிக்க பசுமையான காய்கறிகளையும், முழுமையாக விளைந்த தானியங்களையும் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தால், அதன் விளைவாக வரும் தேவையற்ற உடல் சதைகள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவில் போதிய சத்துக்கள் இல்லை என்று உணரும் போது, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில துணை உணவுகளான வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதை மறந்துவிடக் கூடாது.

நீச்சல்

நீச்சல்

நீச்சலடிப்பது மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். வாரத்திற்கு மூன்று முறை நீச்சலடிப்பது, தசைகளையும் மற்றும் உடலமைப்பையும் நன்கு உறுதியானதாகவும், அதே சமயத்தில் வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகவும் மாற்றிவிடும்.

தரமான அழகுப் பொருட்கள்

தரமான அழகுப் பொருட்கள்

பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை நம்முடைய தோலில் பயன்படுத்துவது அழிவையே விளைவாக கொடுக்கும். எனவே, நல்ல நம்பிக்கையான, உடல் ஏற்றுக் கொள்ளக் கூடிய தரமான பொருட்களை எப்பொழுதும் பயன்படுத்துங்கள். சொல்லப்போனால் இயற்கை முறையில் சருமத்தை பராமரிப்பது, நல்ல பலனைத் தரும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நாளொன்றுக்கு கையளவு உலர் பழங்கள் அல்லது நட்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு வாருங்கள். இந்த நட்ஸ் ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் சற்றே நிரப்பிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 little investments for good health | நல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய 20 சிறந்த முதலீடுகள்!!!

A healthy lifestyle is easier to achieve and maintain if one makes regular investments in all aspects from healthy living from a young age. As with any kind of investments, the objective is to make a better future possible through present day action.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more