Latest Updates
-
1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
பனீர் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அப்ப நீங்க நினைக்கிறத விட எடையை வேகமாக குறைக்கலாமாம்? எப்படி தெரியுமா?
Weight Loss with Paneer: சைவ உணவு உண்பவர்களிடையே பனீர் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருளாகும். வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த பனீர் ஒரு முக்கிய இந்திய உணவாகும். உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய புதிய பால் சார்ந்த பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.
பனீர் அதன் சுவை, ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் எளிதில் மற்ற உணவுகளுடன் பொருந்தக்கூடிய தன்மைக் காரணமாக பரவலாக நுகரப்படும் பால் பொருளாகும். பனீரின் சிறப்பம்சமே அதனை வைத்து பல சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம்.

பால் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு மட்டுமே சேர்த்து பனீரை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பனீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, அதில் உள்ள குறைந்த கொழுப்பு மற்றும் கலோரி உள்ளடக்கம் காரணமாக உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பனீர் உங்களுக்கு போதுமான அளவு பொட்டாசியம் மற்றும் செலினியம் வழங்கலாம்.
பனீர் உங்கள் உடல் எடையை எப்படி குறைக்கிறது?
எடை இழப்புக்கு பனீர் முக்கியமானது என்பது மிகவும் பிரபலமான கருத்தாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடை குறைக்கும் டயட்க்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
திசுக்களை சரிசெய்யவும் கட்டமைக்கவும் புரதம் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது பல வளர்சிதை மாற்ற பாதைகளை ஊக்குவிக்கிறது மற்றும் தசை வலிமையை பராமரிப்பதில் உதவுகிறது.
விலங்கு சார்ந்த உணவுகளில் புரதம் அதிகமாக இருந்தாலும், சைவ உணவு உண்பவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் போதுமான புரதத்தை உட்கொள்ள இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பனீர் உடையை எப்படி குறைக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
புரோட்டின் நிறைந்த சிற்றுண்டி
பனீரில் உள்ள இரும்பு, கால்சியம் மற்றும் புரதம் தசைகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. பனீரில் உள்ள புரதம் மக்கள் நீண்ட நேரம் நிறைவாக உணர உதவுகிறது, இது திருப்தியை அதிகரிக்கிறது மற்றும் குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புரோட்டின் பசியைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன, இது எடை குறைப்பதில் முக்கிய காரணியாகும்.
குறைவான கலோரிகள்
உடல் எடையை வேகமாகக் குறைக்க உங்கள் உணவில் பனீரைப் பயன்படுத்த மற்றொரு காரணம் அதன் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கமாகும். இது குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் இன்சுலின் ஸ்பைக்கை தவிர்க்கிறது.
பசியைக் கட்டுப்படுத்தும்
பசி மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் ஹார்மோனான கிரெலின், குறைந்த கொழுப்புள்ள பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் உள்ளது. எடையைக் கட்டுப்படுத்துவதற்காக, கிரெலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்த பனீர் உதவும்.
நல்ல கொழுப்பு
அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், பனீரில் உள்ள இரண்டு வகையான நன்மை பயக்கும் கொழுப்புகளாகும், இவை இரண்டும் எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானவை. ஆராய்ச்சியின் படி, நல்ல கொழுப்புகளை உட்கொள்வதன் மூலம், உடலில் ஆற்றலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் எரிக்கச் செய்து, எடையை குறைக்க வழிவகுக்கும்.
வயிறு ஆரோக்கியம்
புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும் பயனுள்ள பாக்டீரியாக்கள் ஆகும், மேலும் பனீர் புரோபயாடிக்குகள் நிறைந்திருக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். பொதுவாக, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் எடையைக் குறைப்பதில் பனீர் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

