Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
No Sugar Diet - உண்மையில் எடையைக் குறைக்க உதவுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Weight Loss: தற்போது நிறைய பேர் தங்களின் அதிகரித்த உடல் எடையைக் குறைத்து சிக்கென்று அழகாகவும், ஃபிட்டாகவும் இருக்க நினைக்கின்றனர். அதற்காக பலவிதமான டயட்டுகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அப்படி மேற்கொள்ளும் டயட்டுகள் அனைத்தும் அனைவருக்கும் நல்ல பலன்களைத் தருகிறதா என்றால், அது ஒருவரது உடல் நிலையைப் பொறுத்தது. சிலருக்கு சில வகையான டயட்டுகள் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். இன்னும் சிலருக்கு எந்த டயட்டை மேற்கொண்டாலும் எடையில் எந்த மாற்றமும் தெரியாது.
மேலும் அவ்வப்போது புதுபுது டயட்டுகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். அப்படி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டயட் தான் நோ சுகர் டயட் (No Sugar Diet). சரி, இந்த நோ சுகர் டயட் என்றால் என்ன, இதை எப்படி ஃபாலோ பண்ண வேண்டும், உண்மையில் இது உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "உடல் எடையக் குறைக்க நினைக்கும் பலர் 2 விதமான முறைகளை கடைப்பிடிப்பார்கள். ஒன்று ஏதாவது சாப்பிட்டு அல்லது குடித்து உடல் எடையைக் குறைக்க முடியுமா என்று பார்ப்பார்கள். உதாரணமாக, இது மிகவும் பொதுவானது. இரண்டாவது குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை சாப்பிடாமல் முழுமையாக தவிர்த்து எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். உதாரணமாக சிலர் பால் பொருட்களை தவிர்ப்பார்கள் அல்லது வெள்ளை நிறத்தில் உள்ள உணவுகளை மட்டும் தவிர்ப்பார்கள் அல்லது சர்க்கரையை முழுமையாக நிறுத்த நினைப்பார்கள்." என்று டாக்டர் கூறினார்.
எடை இழப்பு என்றால் என்ன?
"எடை இழப்பு என்பது உடம்பில் உள்ள கொழுப்பை கரைப்பதாகும். கொழுப்பு என்பது ஒரு எரிசக்தி தேக்க நிலை. அதாவது, எப்படி ஆற்றில் தண்ணீர் அதிகம் போகும் போது அணையில் பிடித்து வைத்துக் கொண்டு, தேவையான போது பயன்படுத்துகிறோமோ, அதேப் போல் கொழுப்பு என்பது ஆபத்து காலத்தில் உணவு கிடைக்காத போது, உடலானது ஆற்றலுக்காக கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும். எனவே உணவு உண்ணாமல் இருக்கும் போது கொழுப்பு எரிந்து உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்." என்று கூறினார்.
உடல் கொழுப்பை எரிப்பது எப்படி?
"உடல் கொழுப்பை கரைக்க சிறந்த இயற்கை வழி என்றால் அது உணவு உண்ணாமல் இருக்கும் போது தான். அதாவது உடம்பில் கலோரி தட்டுப்பாடு ஏற்பட்டால், இந்த கொழுப்புக்கள் எரியும். இதைப் புரிந்து, சரியான உணவு முறையை பின்பற்றி வந்தாலே உடல் கொழுப்பைக் கரைக்கலாம். அதற்காக குறைவாக சாப்பிட்டோ அல்லது பட்டினி கிடந்தாலோ உடல் எடை குறையுமா? அல்லது வழக்கமாக சாப்பிடுவதை விட பாதி குறைத்துக் கொண்டால் எடையைக் குறைக்கலாமா? என்றால், இப்படியெல்லாம் செய்தால் பசியும், உடல் சோர்வும் தான் அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த தான் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை இன்சுலின். சும்மா கம்மியா சாப்பிடுவது மட்டும் விஷயமல்ல, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
ஹார்மோன்களை ஏன் கட்டுப்படுத்தணும்?
"உடலில் கொழுப்பை சேகரிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தாவிட்டால், பசி உணர்வு அடங்காது, கொழுப்பு எரிக்கும் தன்மை மேம்படாது, குறைவாக சாப்பிட முயற்சித்தாலும், பசியும், உடல் சோர்வும் தான் அதிகரிக்கும். இந்த இன்சுலினைக் கட்டுப்படுத்தவே ஒருபக்கம் கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவற்றை அதிகம் எடுக்க வேண்டும்.
அதோடு ஆரோக்கியமான கொழுப்புக்களை எடுக்க வேண்டும் மற்றும் சாப்பிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு வகையில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இப்படி இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துடன், கலோரிகளையும் கட்டுப்படுத்தினால், சிறந்த முறையில் உடல் எடையைக் குறைக்கலாம்" என்று கூறினார்.
நோ சுகர் டயட் - உண்மையில் எடையைக் குறைக்க உதவுமா?
நோ சுகர் டயட்டில் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், 14 நாட்கள், 21 நாட்கள் சர்க்கரையை மட்டும் மக்கள் தவிர்த்து வருகிறார்கள். இது உண்மையில் பயனளிக்குமா? நாம் தினமும் சர்க்கரையை இரண்டு வழியில் எடுக்கிறோம். ஒன்று நேரடியாக குடிக்கும் காபி, டீயில் சேர்த்து குடிக்கிறோம். மற்றொன்று மறைமுகமாக பிஸ்கட், கேக், பிரட் ஆகியவற்றின் மூலம் எடுக்கிறோம்.
அதுவும் இந்த பிஸ்கட், கேக், பிரட்டை உட்கொள்வதன் மூலம் ஒரு நாளைக்கு மறைமுகமாக 40-50 கிராம் சர்க்கரை நம் உடலுக்கு கிடைக்கிறது. அதோடு 200 கலோரிகளையும் அதிகரிக்கிறது மற்றொரு பக்கம் இன்சுலின் எதிர்ப்பு தன்மையும் அதிகரித்து, நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
அதுவும் ஒரு நாளைக்கு ஒருவர் சர்க்கரை தூக்கலாக 2-3 காபி, டீ குடித்தாலும் சராசரியாக 3-4 ஸ்பூன் தான் எடுப்போம். அதுவே 2 காபி/டீயை கூடுதலாக குடித்தாலும், 4-5 ஸ்பூன் சர்க்கரையை தான் நேரடியாக எடுப்போம். இதை மட்டும் தவிர்த்தால், எடை இழப்புக்கு போதுமா என்றால், இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து முயற்சிப்பது பாராட்டுக்குரியது.
ஏனெனில் சர்க்கரை, இனிப்பு சுவையை தவிர்த்தாலே, உணவுகளின் மீதான ஆர்வம் குறையும். மேலும் பல மடங்கு கலோரிகளும், மாவுச்சத்து அளவுகளும் குறையும். அதுவும் இனிப்பு சுவையே வேண்டாம் என்று முடிவெடுத்தால், மாவுச்சத்து, கலோரிகளின் அளவு கணிசமாக குறையும் மற்றும் இன்சுலின் அளவும் குறைந்து, உடல் எடை இழப்புக்கு உதவி புரியும்.
ஆனால் வெறும் காபி, டீக்கு போடும் சர்க்கரையை மட்டும் தவிர்த்து, மற்ற அனைத்து உணவுகளையும் உட்கொண்டு வந்தால், உடல் எடையில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் காண முடியாது என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் எடையைக் குறைக்க சர்க்கரையை தவிர்க்க நினைத்தால், வெறும் சர்க்கரையை மட்டும் நிறுத்தாமல், சர்க்கரை நிறைந்த/இனிப்பு சுவைமிக்க உணவுகள் அனைத்தையும் நிறுத்துங்கள். அப்படி நிறுத்தினால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











