Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க தலைமுடியில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப அது உயிருக்கு ஆபத்தான அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாம்!
கொலஸ்ட்ரால் என்பது மஞ்சள்-வெள்ளை மெழுகு போன்ற இருக்கும் ஓர் கொழுப்பு. நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் கொலஸ்ட்ரால், நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்கள் மற்றும் உறுப்புகள் சரியாக வேலை செய்ய கொலஸ்ட்ரால் உதவுகிறது.
ஆனால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது உயிருக்கு ஆபத்தான பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, அவை எந்த அறிகுறியையும் காட்டாது.

உங்கள் தலைமுடியில் ஏற்படும் சில மாற்றங்கள் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. அவற்றை பற்றி இங்கு விரிவாக காணலாம்.
தலைமுடியில் கொலஸ்ட்ராலின் தாக்கம்
ஜான் ஹாப்கின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் எலிகள் மீது மேற்கொண்ட ஆராய்ச்சியில், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் முன்கூட்டியே நரை முடி மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்தனர்.
நேச்சர் இதழான 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக, எலிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு உணவு வழங்கப்பட்டன. ஒன்று வழக்கமான உணவுகள், மற்றொன்று அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள்.
முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனை
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட எலிகளுக்கு தலைமுடி அதிகம் கொட்ட ஆரம்பித்து, அதோடு முடி வெள்ளையாகுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 12 வாரங்களுக்கு மேல் எலியின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 36 வார வயதில், அதிக கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்ட 75% எலிகள் கடுமையான முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டன.
மேற்கத்திய உணவுமுறை முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இதேபோல கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் மக்களுக்கும் முடியை இழக்கும் மற்றும் முடி வெள்ளையாகும் பிரச்சனை சந்திக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
எப்படி நடக்கும்?
கொலஸ்ட்ரால் உயிரியக்கத்தைத் தடுப்பது ஃபைப்ரோஸிஸை ஊக்குவிப்பதன் மூலம் முடியின் வேர்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகிறது என்று கேரள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றொரு இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, முடி வளர்ச்சியில் செல்லுலார் கொலஸ்ட்ராலின் பங்கு, முடியின் வேர்களை வலுவிழக்க செய்து, உதிர வைக்கும்.
ஒருசில இடத்தில் மட்டும் வழுக்கை ஏற்படும் நிலை
ஆய்வுகளின்படி, கொலஸ்ட்ராலால் தூண்டப்பட்ட மாற்றங்கள் அலோபீசியாவுக்கு வழி வகுக்கும். தலையில் ஒருசில இடங்களில் மட்டும் திட்டு திட்டாக முடி கொட்டி வழுக்கையாக இருக்கும் நிலை இது. இது முடியின் வேர்களில் உள்ள ஸ்டெம் செல்களை நிரந்தரமாக அழித்து, வடு அல்லது ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்துகிறது.
புற தமனி நோய் மற்றும் முடி உதிர்தல்
சில நேரங்களில், புற தமனி நோயின் (பிஏடி) ஆரம்ப கட்டங்களில் உள்ள நோயாளிகளும் தங்கள் கால்களில் முடி உதிர்தல் பிரச்சனையை அனுபவிக்கலாம். தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகமாகத் தேங்குவது இரத்த ஓட்டத்தை மெதுவாக்கத் தொடங்குகிறது. இதனால் ஊட்டச்சத்துக்கான போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பெற முடியாமல் தலைமுடி உதிர்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


